போதையில் கிடந்த நபரை தீ வைத்து எரித்த சிறுவர்கள்

போதையில் கிடந்த நபரை தீ வைத்து எரித்த சிறுவர்கள்

சென்னை திருவல்லிக்கேணி மெட்ரோ ரயில் நிலையத்தின் அருகில் கஞ்சா போதையில் கிடந்த நபரை மர்மநபர்கள் பெட்ரோல் ஊற்றி தீவைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அயோத்தியா குப்பத்தை சேர்ந்தவர் மனோஜ் குமார் 25 வயதான இவர் கஞ்சா வியாபாரியாக இருந்துள்ளார்.

மருத்துவமனையில் உயிருக்கு போராடிய மனோஜ் குமாரிடம் பொலிசார் விசாரித்த போது “கொன்றுவிட்டார்கள்” என்று மட்டும் தெரிவித்து வந்த அவர் பின்னர் இறந்துள்ளார்.

பொலிஸ் விசாரனையின் போது மனேஜுடன் கஞ்சா விற்பனையில் கூட்டாளியாகயிருந்த 2 நண்பர்கள் இவ்வாறு செய்தனர் என்று தெரியவந்தது.

சில தினங்களுக்கு முன்னர் நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மனோஜ் ஒருவனை கல்லால் தக்கியுள்ளார். ஒருவருக்கொருவர் பேசாமல் இருந்த நிலையில் மனோஜை மோட்டார் வாகனத்தில் இருந்து திருடிய பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளனர்.

மனோஜ் குமாருக்கு தீவைத்த இருவரையும் நன்றாக தெரிந்துள்ளது.

மேலும் இருவரது பெயரையும் சொல்லி காப்பாற்றுமாறு கேட்டுள்ளார். ஆனால், அவர்கள் சம்பவ இடத்தில் இருந்து ஓடிவிட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தனது நண்பர்களை காட்டிக்கொடுக்க கூடாது என்று கடைசி வரை தீவைத்தது யார் என்று தெரியாதது போல தன்னை ”கொன்று விட்டார்கள்” என்று மட்டும் கூறிவந்துள்ளார்.

வெள்ளத்தில் மூழ்கும் பேராபத்தில் கொழும்பு! அபாய எச்சரிக்கை