நீருக்குள் மூழ்கடித்த பந்து போல வெளியே வந்த புரட்சி : அம்பலமான ஜிஎஸ்டி வரி குறைப்பின் பின்னணி!

மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறையால் குஜராத் வர்த்தகர்கள் மற்றும் தொழிலாளர்கள் அனைவரும் பா.ஜ.க மீது தணியாத பெருங் கோபத்தில் உள்ளனர். இந்த கோபத்தை தணிக்கும் வகையில்தான் தற்போது ஜி.எஸ்.டி வரி குறைப்பை அறிவித்திருக்கிறது மத்திய அரசு. 

ஒரே நாடு ஒரே வரிவிதிப்பு என்ற மிகப் பெரிய முழக்கத்துடன் ஜி.எஸ்.டியை அறிமுகப்படுத்தியது மத்திய அரசு. ஆனால் இத்தகைய ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறைக்கு நாடு முழுவதும் வரலாறு காணாத வகையில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

குஜராத்தில் பா.ஜ.கவின் மிகப் பெரும் வாக்கு வங்கியாக செயல்பட்ட சூரத் மற்றும் வைரம் பட்டை தீட்டும் தொழிலாளர்கள் பல லட்சம் பேர் வீதிகளின் திரண்டு வரலாறு காணாத மெரினா புரட்சியை நடத்தினர். ஆனால் குஜராத்தில் ஆளும் அரசோ இந்த போராட்டத்தின் குரலை வெளி உலகிற்கு தெரியவிடாமல் அடக்கியது.

ஏற்கனவே குஜராத்தில் பா.ஜ.கவின் வாக்கு வங்கியான பட்டேல் சமூகம் இடஒதுக்கீடு விவகாரத்தில் காங்கிரஸ் பக்கம் சாய்ந்துவிட்டது. அதோடு தலித்துகளும் காங்கிரஸ் பக்கம் சாய்ந்துவிட்டனர். இதனால் குஜராத் சட்டசபை தேர்தலை நடத்தவே ரொம்பவே யோசித்தது பா.ஜ.க.

என்னதான் அடுத்த மாதம் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு கருத்து கணிப்புகளும் பா.ஜ.கவே வெல்லும் என திணித்து கொண்டிருந்தாலும் களநிலவரம் அந்த கட்சிக்கு சாதகமே இல்லை என்றே கூறப்படுகிறது. இதன் காரணமாகத் தான் குஜராத் வாக்காளர்களின் கோபத்தைத் தணிக்க வேறு வழியே இல்லாமல் ஜி.எஸ்.டி வரி குறைப்பு தொடர்பாக ஆலோசிக்க வேண்டிய நிலைமைக்கு மத்திய அரசு தள்ளப்பட்டது.

 

P. Chidambaram @PChidambaram_IN

Thanks to Gujarat elections, Govt forced to heed advice of Opposition and experts on flaws in implementation of GST.

7:38 AM - Nov 10, 2017

Twitter Ads info and privacy 

 

அஸ்ஸாம் மாநிலத்தின் குஹாத்தியில் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று காலை பதிவிட்டிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், ஜி.எஸ்.டியிலுள்ள குறைபாடுகளை களைய எதிர்க்கட்சிகள், வல்லுநர்கள் தெரிவித்த யோசனைகளை மத்திய அரசு செயல்படுத்த வேண்டிய நிலையை உருவாக்கிய குஜராத் சட்டசபை தேர்தலுக்கு நன்றி என்றும் பதிவிட்டும் இருக்கிறார்.

மத்திய அரசு தற்போது அதிரடியாக 173 பொருட்களுக்கு 28% ஜி.எஸ்.டி வரிவிதிப்பு குறைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. ஜி.எஸ்.டியால் கொந்தளித்து போய் இருக்கும் குஜராத் வாக்காளர்களை சமாதானப்படுத்தும் வகையில்தான் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்பதில் எவ்வித சந்தேகமில்லை என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

அதிமுக வாக்குகள் ரஜினிக்கு, திமுக வாக்கு வங்கி கமலுக்கு.. மாஸ்டர் பிளான் அரசியல்