லட்ச கணக்கில் வீட்டுக்கு விரட்டப்படும் ஐ.டி ஊழியர்கள்,..!! பிடுங்கப்படும் வேலை, காரணத்தை மூடி மறைக்க

தகவல் தொழில்நுட்பத் துறையில்அதிகரித்து வரும் தானியங்கி மயம்,கிளவுட் கம்ப்யூட்டிங் போன்ற காரணங்களால் தான் பணியிழப்புகள் அதிகரித்து வருவதாக முன்பு கூறப்பட்டது..

ஆனால், தற்போது காரணமின்றியும் பணியிழப்புகள் அதிகரித்து வருவதாகவும், அதை உடனடியாகத் தடுத்துநிறுத்த வேண்டும்என்றும் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் ஐ.டி. பணியாளர்கள் அரசிடம் கோரிக்கைவைத்தனர்.

இந்நிலையில் இந்த நிதியாண்டின் ஏப்ரல்முதல் செப்டம்பர் வரையிலான அரையாண்டில் முக்கிய ஐ.டி நிறுவனங்களாகக் கருதப்படும் டி.சி.எஸ்.,இன்ஃபோசிஸ், விப்ரோ, ஹெச்.சி.எல்.,டெக் மஹிந்த்ரா, காக்னிசன்ட் உள்ளிட்டநிறுவனங்களில் உள்ள மொத்தபணியிடங்களில் 4,157 பணியிடங்கள்குறைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

காக்னிசன்ட் நிறுவனத்தில் பணியாளர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டுமார்ச் மாதத்தில் 2 லட்சத்து 61 ஆயிரத்து200 ஆக இருந்தது.

இந்த எண்ணிக்கைசெப்டம்பரில் 2 ஆயிரத்து 56 ஆயிரத்து 100 ஆகக்குறைந்துள்ளது.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் மார்ச் மாதம்2 லட்சத்து 364 ஆக இருந்த பணியாளர்களின் எண்ணிக்கை செப்டம்பரில் 1 லட்சத்து 98 ஆயிரத்து 440 ஆகக் குறைந்துள்ளது.

அதேபோல, விப்ரோவில் மார்ச் மாதம்1 லட்சத்து 65 ஆயிரத்து 481 ஆக இருந்த பணியாளர்களின் எண்ணிக்கை செப்டம்பரில் 1 லட்சத்து 63 ஆயிரத்து 759ஆகக் குறைந்துள்ளது.

டெக் மஹிந்த்ராவில் மார்ச் மாதம் 1 லட்சத்து 17 ஆயிரத்து 693 ஆக இருந்த பணியாளர்களின் எண்ணிக்கை செப்டம்பரில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 225 ஆகக் குறைந்துள்ளது.

அதேநேரம், டிசிஎஸ் நிறுவனத்திலும், எச்.சி.எல். நிறுவனத்தில் மட்டும் பணியிடங்கள் அதிகரித்துள்ளன.

டிசிஎஸ் நிறுவனத்தில் கடந்த செப்டம்பரில் பணியாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 990 அதிகரித்துள்ளது.

அதேபோல ஹெச்.சி.எல் நிறுவனத்திலும் மார்ச்மாதத்தோடு ஒப்பிடும்போது செப்டம்பரில் பணியாளர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 67 அதிகரித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக மார்ச் மாதத்தில் இந்த நிறுவனங்களில் இருந்த பணியாளர்களின் எண்ணிக்கை 12 லட்சத்து 47 ஆயிரத்து 934 ஆக இருந்தது.

தற்போது 4 ஆயிரத்து 157 பணியிடங்கள் குறைந்து அது 12 லட்சத்து 43 ஆயிரத்து 77 ஆக உள்ளது.

உங்கள் Facebook Profile க்கு வந்து உங்களை நோட்டமிட்டவர்களை கண்டுபிடிப்பது எப்படி தெரியுமா?