ஆபரேசன் தியேட்டரை, பிஎஃப் சூட்டிங் தியேட்டராக மாற்றிய டாக்டர், நர்ஸ்..!

மும்பயை சேர்ந்த இளம் பெண், ஒருவருக்கு அடிக்கடி அடிவயிற்றில் வலி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பிவண்டியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்கு சென்றார்.

இளம் பெண்ணை பரிசோதித்த டாக்டர்கள் ஆபரேசன் செய்யவேண்டும் என்று கூறினர். இதனையடுத்து கடந்த 15ம் தேதி அந்த பெண்ணுக்கு ஆபரேசன் நடைபெற்றது.

வழக்கமாக ஆபரேசன் நடைபெறவேண்டிய இடத்தை தவிர மற்ற இடங்கள் துணியால் மூடப்பட்டிருக்கும். ஆனால் அந்த பெண்ணுக்கு இடுப்பை மட்டும் துணியால் மறைத்துவிட்டு, உடலின் மற்ற பாகங்களை மறைக்கவில்லை மயக்க ஊசி போட்டுள்ளனர்.

ஆனால் அவர் மயக்கநிலைக்கு செல்லவில்லை. டாக்டர்கள் மனோஜ், அன்சாரி, நர்ஸ் அபர்ணா ஆகியோர் அந்த பெண்ணின் முழு உடலையும் புகைப்படம் எடுத்துள்ளனர்.

இந்த செயல் ஆபரேசனுக்காக படுத்து இருந்தவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருந்தாலும் பாதி மயங்கிய நிலையில் இருந்த அவரால் எதுவும் செய்ய முடியவில்லை.

ஆபரேசனுக்கு சம்பந்தம்  இல்லாதவர்கள் ஆபரேசன் தியேட்டர் உள்ளே வந்து அந்த பெண்ணின் உடலை பார்த்து ஆபாசமாக கிண்டல் செய்துவிட்டு சென்றுள்ளனர்.

ஆபரேசன் முடிந்த பின்பு ஆபரேசன் தியேட்டரில் நடந்த சம்பவம் குறித்து அந்த பெண், தனது கணவரிடம் சொன்னார்.

இதனையடுத்து பிவண்டி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த மருத்துவமனையின் டாக்டர்கள், நர்ஸ்களிடம் விசாரித்து வருகின்றனர்.

அடப்பாவிகளா.. டாக்டர்களுமா இப்படி? மக்கள் யாரைத்தான் நம்புறது?

 

வாட்சப்பில் இணைய இங்கே கிளிக் செய்யவும்