தொப்பையை குறைக்கதான் முடியல... ஆனா மறைக்கணுமா? இந்த ட்ரிக்ஸ்ஸ ட்ரை பண்ணுங்க...

கோடை காலம் வந்துட்டாலே போதும் வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்து விடும். இந்த மாதிரியான காலங்களில் காற்றோட்டமான ஆடைகள் தான் வசதியாக இருக்கும். ஆனால் என்ன செய்வது நம் தொப்பை அதற்கு அசிங்கமாக இருக்கும்.

இதனால் இந்த மாதிரியான ஆடைகளை அணிய முடியாமல் மிகவும் சிரமப்படுவோம் அல்லவா. அதற்கு தான் நாங்கள் சில பேஷன் டிப்ஸ்களை வழங்குகிறோம். இந்த பேஷன் டிப்ஸ்கள் உங்கள் தொப்பையை மறைக்க மிகவும் உதவியாக இருக்கும். இனி நீங்கள் கவலையின்றி எந்த மாதிரியான ஆடைகளையும் அணிந்து வலம் வரலாம்.

தொப்பையை குறைக்கதான் முடியல... ஆனா மறைக்கணுமா? இந்த ட்ரிக்ஸ்ஸ ட்ரை பண்ணுங்க... 
தொப்பை கவலை இனி இல்லை

ஆண், பெண் இருபாலரும் கஷ்டப்படுற விஷயம் இந்த தொப்பை பிரச்சினை தாங்க.இதனால் மற்றவர்கள் முன்னிலையில் அவர்களின் தன்னம்பிக்கையும் குறைந்து விடுகிறது.

இதனாலேயே அவர்களிடம் இது குறித்து கவலையும் தொற்றிக் கொள்கிறது. தங்களுடைய தோற்றத்தை குறித்து மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற எண்ணமும் எழுந்து விடுகிறது. இந்த பிரச்சினையை சமாளிக்க நீங்க ரெம்ப கஷ்டப்பட்டு உடற்பயிற்சி செய்ய வேண்டிய அவசியமே இல்லை. நாங்கள் கூறும் பேஷன் டிப்ஸ்களை பின்பற்றினாலே உங்கள் ஆடையில் எடையை மறைத்து மற்றவர்கள் முன்னிலையில் கச்சிதமாக இருக்கலாம்.

தொப்பையை குறைக்கதான் முடியல... ஆனா மறைக்கணுமா? இந்த ட்ரிக்ஸ்ஸ ட்ரை பண்ணுங்க... 
பெண்கள் தங்கள் தொப்பையை மறைக்க செய்ய வேண்டியவை நீளமான ப்ளெவ்ஸ் அணியுங்கள்

இது ஒரு மிக எளிமையான ஐடியா. இனி நீங்கள் சற்று லூசான நீளமான ப்ளெவ்ஸ் களை அணியுங்கள். இது உங்கள் தொப்பையை மறைத்து அழகாக உங்களை காட்டும். அப்படியே உங்கள் சட்டைக்கு தகுந்த மாதிரி ஜீன்ஸ், பேண்ட் அணிந்து செல்லுங்கள். மீடியமான வடிவில் ஆடையை தேர்ந்தெடுத்தாலே போதும் கச்சிதமான அழகை பெறலாம்.

தொப்பையை குறைக்கதான் முடியல... ஆனா மறைக்கணுமா? இந்த ட்ரிக்ஸ்ஸ ட்ரை பண்ணுங்க... 
அடர்ந்த நிறங்கள்

நீங்கள் போடும் ஆடையின் நிறங்கள் கூட உங்கள் தொப்பையை மறைக்க உதவுகின்றன. எனவே இனி ஆடையை செலக்ட் செய்யும் போது கருப்பு போன்ற நிறங்களில் எடுங்கள். இது உங்களுக்கு அழகாக இருப்பதோடு உங்கள் தொப்பையை மறைக்கவும் உதவும். நேவி ப்ளூ, மெரூன், அடர்ந்த பச்சை போன்ற நிறங்களை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள்.

தொப்பையை குறைக்கதான் முடியல... ஆனா மறைக்கணுமா? இந்த ட்ரிக்ஸ்ஸ ட்ரை பண்ணுங்க... 
சரியான மாடல்

உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா நீங்கள் அணியும் ஆடைகளில் இடுப்பிற்கு கீழே அகன்ற கட்டிங் செய்யப்பட்ட மாடல் இருந்தால் உங்கள் தொப்பையை காணாமல் போய்விடுமாம். ஆமாங்க பெப்ளம் கட், அம்பர்ளா கட், எம்பயர் கட் போன்ற மாடல்களை நீங்கள் தேர்ந்தெடுத்து அணியலாம்.

அதே மாதிரி இதற்கு தகுந்தாற்போல் பேண்ட்களை அணிந்து கொள்ளுங்கள். பெல்ட்டும் அணிந்து கொண்டால் உங்களுக்கு செளகரியமாக கச்சிதமாக இருக்கும்.

தொப்பையை குறைக்கதான் முடியல... ஆனா மறைக்கணுமா? இந்த ட்ரிக்ஸ்ஸ ட்ரை பண்ணுங்க... 
இடுப்பிற்கு கீழே ஜீன்ஸ் அணியாதீர்கள்

உங்கள் தொப்பையை மறைக்க வேண்டும் என்றால் எப்பொழுதும் ஜீன்களை தொப்புளுக்கு மேலே அல்லது மீடிய நிலையில் அணிந்து கொள்ளுங்கள்.இது உங்களுக்கு செளகரியமாக இருக்கும்.

தொப்பையை குறைக்கதான் முடியல... ஆனா மறைக்கணுமா? இந்த ட்ரிக்ஸ்ஸ ட்ரை பண்ணுங்க... 
ஆண்களுக்கு?

ஆண்கள் தங்கள் தொப்பையை மறைக்க என்ன செய்ய வேண்டும் 
ஆண்களும் தங்கள் தொப்பையை மறைக்க தங்கள் ஆடையை சரியாக தேர்ந்தெடுத்தாலே போதும். ஆண்களும் லூசான சட்டைகளை அணிதல், அடர்ந்த நிற ஆடைகள், அகன்ற மாடல் போன்றவற்றை பின்பற்றி கொள்ளுங்கள்.

தொப்பையை குறைக்கதான் முடியல... ஆனா மறைக்கணுமா? இந்த ட்ரிக்ஸ்ஸ ட்ரை பண்ணுங்க... 
பெரிய கோட்

உங்கள் தொப்பையை மறைக்க ஓவர் கோட் ஒரு பெரிய பங்காற்றுகிறது. எனவே எதாவது நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது ஓவர் கோட் அணிந்து செல்லுங்கள். இது உங்களை கச்சிதமாக காட்டும்.

தொப்பையை குறைக்கதான் முடியல... ஆனா மறைக்கணுமா? இந்த ட்ரிக்ஸ்ஸ ட்ரை பண்ணுங்க... 
ஆடை வடிவமைப்பு

ஆடை வடிவமைப்பு என்று வரும் போது உங்களுக்கு அமெரிக்க ஜாக்கெட்டுகள் மற்றும் பிளேஸர்கள் போன்றவை உங்களுக்கு பொருத்தமாக இருக்கும்.

அதே மாதிரி லூசான பேண்ட்களை அணியுங்கள். இது பார்ப்பதற்கு உங்கள் தொப்பையை மறைத்து கால்களை நீளமாகவும் ஒல்லியாகவும் காட்டும்.

அதே மாதிரி கிடைமட்ட கோடுகள் போட்ட பேண்ட்கள், ரெம்ப டைட்டான பென்சில் பிட் பேண்ட்கள், அச்சிடப்பட்ட பேண்ட்கள் போன்றவற்றை அணிவதை தவிருங்கள்.

தொப்பையை குறைக்கதான் முடியல... ஆனா மறைக்கணுமா? இந்த ட்ரிக்ஸ்ஸ ட்ரை பண்ணுங்க... 
தோற்றம்

உங்கள் தொப்பையை மறைத்ததை நினைத்து வெட்கப்படாதீர்கள். உங்கள் சங்கோஜமான நடையே உங்களை காட்டி கொடுத்து விடும். எனவே உங்கள் தோற்றம் நடை என்பது உங்களிடமே உள்ளது. எனவே கவலையின்றி பயமின்றி மற்றவர் முன்னிலையில் நடந்து செல்லுங்கள். நம்பிக்கையுடன் வலம் வாருங்கள். கண்டிப்பாக உங்கள் தோற்றத்தை கண்டு எல்லாரும் ஆச்சரியப்படுவார்கள். அப்புறம் என்னங்க ரெடி ஆகிட வேண்டியது தானே.