சஷ்டி விரதம் தொடங்கியாச்சு... 12 ராசிக்காரர்களும் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?

உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.

ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிநது கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.

சஷ்டி விரதம் தொடங்கியாச்சு... 12 ராசிக்காரர்களும் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? 
மேஷம்

நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறுவதில் சின்ன சின்ன தடங்கல்கள் வந்து போகும். தேவையில்லாமல் மற்றவர்களை விமர்சனம் செய்வதைத் தவிர்த்து விடுவது நல்லது. எதிர்காலம் பற்றிய சிந்தனையும் அது தொடர்பான பணிகளையும் செய்ய ஆரம்பிப்பீர்கள். தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உங்களுக்குக் கிடைக்க கொஞ்சம் கால தாமதமாகும். சக ஊழியர்களை கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

 

சஷ்டி விரதம் தொடங்கியாச்சு... 12 ராசிக்காரர்களும் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? 
ரிஷபம்

உங்களுடைய உயர் அதிகாரிகளுடைய முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே கருத்து முரண்பாடுகள் நீங்கி, நெருக்கம் அதிகமாகும். தொழில் சம்பந்தமான புதிய முதலீடுகளை செலுத்த முயற்சி செய்வீர்கள். நண்பர்களுடன் இணைந்து கொண்டாட்டங்களில் ஈடுபடுவீர்கள். மனம் மகிழ்ச்சி ஏற்படும். மனைவியிள் உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளநீல நிறமும் இருக்கும்.

 

சஷ்டி விரதம் தொடங்கியாச்சு... 12 ராசிக்காரர்களும் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? 
மிதுனம்

வேலை செய்யுமிடத்தில் இருந்து வந்த எதிர்ப்புகள் நீங்க ஆரம்பிக்கும். உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு தேவையில்லாத வீண் கவலைகள் தோன்றும். அடுத்தவர்களுக்கு உதவி சய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். அரசு சம்பந்தப்பட்ட செயல்பாடுகளில் இருந்து வந்த கால தாமதங்கள் நீங்க ஆரம்பிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

 

சஷ்டி விரதம் தொடங்கியாச்சு... 12 ராசிக்காரர்களும் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? 
கடகம்

எந்த காரியத்தைத் தொட்டாலும் அதில் வெற்றி பெறுவதற்கான உங்களுக்குச் சாதகமான சூழல்கள் உருவாகும். தந்தையின் வழியில் தொழிலின் மூலம் நல்ல பெயர் ஏற்படும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்கள் பணிகளில் பெரும் வெற்றி உண்டாகும். நீங்கள் எதிர்பாராத சுப செய்திகளின் மூலம் உங்களுக்கு மகிழ்ச்சியான சூழல்கள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

 

சஷ்டி விரதம் தொடங்கியாச்சு... 12 ராசிக்காரர்களும் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? 
சிம்மம்

வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். வீட்டில் சுப செய்திகள் வந்து சேரும். அதனால் குதூகலம் அதிகரிக்கும். குழந்தைகள் பற்றிய வீண் கவலைகள் தீரும். தொழிலில் பங்குதாரர்களின் உதவியினால் தொழிலில் புதிய முயற்சிகள் மேற்கொள்ளலாம். அதனால் தொழில் அபிவிருத்தியும் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் மஞ்சள் நிறமும் இருக்கும்.

 

சஷ்டி விரதம் தொடங்கியாச்சு... 12 ராசிக்காரர்களும் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? 
கன்னி

மனதுக்குள் இருந்து வந்த கவலைகள் தீர்ந்து போகும். மற்றவர்களுக்கு உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். வாதத் திறமையினால் அனைவரையும் கவரும் திறன் உண்டு. உயர் அதிகாரிகளுக்கு மதிப்பு கொடுப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் கொஞ்சம் அமைதியுடன் நடந்து கொள்ளுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

 

சஷ்டி விரதம் தொடங்கியாச்சு... 12 ராசிக்காரர்களும் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? 
துலாம்

புதிய தொழில் தொடங்குவது சம்பந்தமான எண்ணங்கள் மனதில் அதிகரிக்கும். தலைமைப் பதவியில் இருக்கின்றவர்கள் சற்று கவனத்துடன் செயல்படுவது நல்லது. வாகனப் பயிற்சியை மேற்கொள்கின்ற பொழுது, கொஞ்சம் கூடுதல் நிதானம் தேவை. உங்களுடைய உடைமைகளில் கொஞ்சம் கவனம் வேண்டும். புத்திக் கூர்மையில் கொஞ்சம் மந்தத் தன்மை உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

 

சஷ்டி விரதம் தொடங்கியாச்சு... 12 ராசிக்காரர்களும் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? 
விருச்சிகம்

உங்களுடைய வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஆதரவினால் உங்களுடைய லாபங்கள் அதிகரிக்கும். வீட்டில் உள்ள பிள்ளைகள் வீட்டின் சூழ்நிலையை அறிந்து செயல்படுவீர்கள். நண்பர்களுக்கு இடையே இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். எதிர்பார்த்த பதவி உயர்வு சம்பந்தமான முயற்சிகள் வெற்றியடையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

 

சஷ்டி விரதம் தொடங்கியாச்சு... 12 ராசிக்காரர்களும் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? 
தனுசு

தாய்வழியிலான உறவினர்களின் மூலம் உங்களுக்கு பெரும் ஆதரவு உண்டாகும். முக்கிய நிர்வாகப் பொறுப்புகளில் இருப்பவர்கள் நிர்வாகத்தில் பல புதிய மாற்றங்களைச் செய்வீர்கள். பொது சேவைகளில் ஈடுபடுபவராக நீங்கள் இருந்தால், உங்களுக்கு வெற்றி கிடைக்கும். சுயதொழில் சம்பந்தமான புதிய முடிவுகள் உங்களுக்குச் சாதகமாகவே இருக்கும். பயணங்களின் மூலம் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெரியோர்களுடைய ஆலோசனைகள் உங்களுக்குச் சாதகமான பலன்களைத் தரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

 

சஷ்டி விரதம் தொடங்கியாச்சு... 12 ராசிக்காரர்களும் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? 
மகரம்

வாகனப் பயண்ஙகளில் கொஞ்சம் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உங்களுடைய சக ஊழியர்களிடம் கொஞ்சம் அமைதியைக் கடைபிடிக்க வேண்டும். வணிகம் சம்பந்தமான தொழில் செய்கின்றவர்களுக்கு கொஞ்சம் மந்தமான சூழ்நிலை உண்டாகும். உங்களுக்கு இன்று பிரபலமானவர்களுடைய அறிமுகங்கள் கிடைக்கும். தொழில் கூட்டாளிகளால் கொஞ்சம் அனுகூலமான சூழ்நிலை உங்களுக்கு உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.

 

சஷ்டி விரதம் தொடங்கியாச்சு... 12 ராசிக்காரர்களும் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? 
கும்பம்

பொன், பொருள் சேர்க்கைகள் உண்டாகும். வெளியூரில் இருந்து சுப செய்திகள் வந்து சேரும். எதிர்பாலின மக்களிடம் கொஞ்சம் கவனம் வேண்டும். நுணுக்கமான புதிய தொழில் நுட்பங்களைப் பயில்வீர்கள். தொழில் வகையில் எதிர்பார்த்த கடனுதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். தண்ணீர் சம்பந்தப்பட்ட பணியில் உள்ளவர்களுக்கு கொஞ்சம் லாபகரமான நாளாக இருக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம்பச்சை நிறமும் இருக்கும்.

 

சஷ்டி விரதம் தொடங்கியாச்சு... 12 ராசிக்காரர்களும் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? 
மீனம்

வழக்கத்தை விடவும் கொஞ்சம் கூடுதல் தைரியத்துடன் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். பயணங்கள் மேற்கொள்வதன் மூலம் அனுகூலமான செய்திகள் உண்டாகும். பொது சேவைகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். விளையாட்டு வீரர்களுக்கு இன்று மகிழ்ச்சியான நாளாக இருக்கும். கால்நடைகளிடம் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.