தீபாவளி அன்று உங்கள் ராசிப்பலன் எப்படி இருக்கிறது.. பார்க்கலாமா?

சந்தோஷம் என்பது எல்லார் வாழ்விலும் மிகவும் முக்கியமான தருணம். இந்த சந்தோஷம் என்பது கூட நம்ம ராசியை பொருத்து அமைகிறது என்று ஜோதிடம் கூறுகிறது.

சந்தோஷத்தை தரும் கிரகமாக சூரியன் அமைகிறது. நம் ராசிப்படி உணர்ச்சி பூர்வமாக இருக்க சில குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. உங்க தீபாவளி எப்படி சந்தோஷமாக அமைக்கலாம் என்பதை இங்கே காண்போம்.

மேஷம்

தீபாவளி  அன்று உங்கள் ராசிப்பலன் எப்படி இருக்கிறது.. பார்க்கலாமா?

Third party image reference

உங்கள் சுய அதிகாரம் உள்ள ஒரு வாழ்க்கையை உருவாக்குங்கள். உங்களுடைய சரியான முடிவும், ஆரோக்கியமான உடல் நலமும் உங்களை சந்தோஷமாக வைக்கும். உங்கள் தலைமைப் பொறுப்பை திறம்பட செய்யுங்கள். எல்லா நேரமும் தனக்கு தானே மன்னிப்பு கோர வேண்டும் என்று நினைக்காதீர்கள். இந்த வழிகளை பின்பற்றி உங்கள் தீபாவளியை சிறப்பாக கொண்டாடுங்கள்.

ரிஷபம்

Third party image reference

இந்த தீபாவளி யில் ஆர்கானிக் உணவுகளையும், உங்களுக்கு பொருத்தமான செளகரியமான ஆடைகளையும் அணியுங்கள் இது உங்கள் உடலழகை மேம்படுத்தும். உங்கள் மீதான நன்மதிப்பை வளர்த்தி கொள்ளுங்கள். அழகான பொருட்களை வாங்கி மகிழுங்கள்.

மிதுனம்

Third party image reference

எப்பொழுது கற்றுக் கொள்ள மற்றும் கற்றுக் கொடுக்க நீங்கள் நினைப்பீர்கள். எனவே உங்கள் மனதில் இருக்கும் விஷயங்களை பற்றி விவரிக்கவும் விவாதிக்கவும் யாரையாவது அணுகுங்கள். உங்கள் மனதில் மகிழ்ச்சி துளிர்க்கும்.

 

கடகம்

Third party image reference

உங்களைச் சுற்றி ஒரு ஆத்மார்த்தமான ஒரு சூழலை உருவாக்குங்கள். உங்கள் மனதில் ஒளிந்திருக்கும் குழந்தை தனத்தை தட்டி எழுப்புங்கள். அது உங்களையும் உங்களை சுற்றி இருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைக்கும்.

சிம்மம்

Third party image reference

உங்கள் தனித்துவத்தை வெளிப்படுத்த முயற்சி செய்யுங்கள். உங்கள் மனதில் ஒளிர்ந்திருக்கும் உண்மையான நபரை காட்டுங்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நீங்கள் மதிக்கப்படுவதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். இந்த உறுதியான எண்ணங்கள் உங்களை மகிழ்ச்சியாக வைக்கும்.

கன்னி

Third party image reference

உங்கள் சுய கவனிப்பை கொடுக்கின்ற விஷயங்களை செய்யுங்கள். உங்கள் வேடிக்கை குணத்தை வெளிப்படுத்தும் காரியங்களை செய்யுங்கள். இதை பின்பற்றி உங்கள் தீபாவளியை சிறப்பாக கொண்டாடுங்கள்.

துலாம்

Third party image reference

உங்கள் தனிப்பட்ட உறவுகளை சமநிலையாக வையுங்கள். முடிவுகளை எடுக்க ஒரு வழியை உருவாக்குங்கள். உங்களை எப்படி நடத்துவது என்பதை மற்றவர்களுக்கு புரிய வையுங்கள். சந்தோஷமான உறவுகள் உங்களுடன் இருக்கும் போது தீபாவளி சிறக்கும்.

விருச்சிகம்

Third party image reference

உங்கள் நோக்கங்களை அறிய உதவும் புத்தகங்களை படியுங்கள். இது உங்களை சந்தோஷமாக வைக்கும்.

தனுசு

Third party image reference

ஒரு பயணத்தை மேற்கொள்ளுங்கள். உங்களைச் சுற்றி ஒரு உன்னதமான உறவுகளை ஏற்படுத்தி கொள்ளுங்கள். உங்கள் தத்துவார்த்தமான வாழ்க்கையை வாழுங்கள்.

மகரம்

Third party image reference

உங்கள் மனதில் இருக்கும் விவரங்களைக் கொண்டு ஒரு பெரிய திட்டத்தை உருவாக்குங்கள். உங்கள் சாதனைகளை அதில் முன்னுரிமை செய்யவும். இதை பின்பற்றி உங்கள் இலக்குகளின் பாதையை நோக்கி முன்னேறுங்கள். இந்த மாற்றம் உங்களை மகிழ்ச்சியாக வைக்கும்.

 

கும்பம்

Third party image reference

நீங்கள் எப்பொழுதும் தனித்துவமான மற்றும் தன்னியல்பான தன்மையுடன் காணப்படுங்கள்.உங்கள் கனவுகள், நம்பிக்கைகள் எல்லாவற்றையும் இணைக்க முற்படுங்கள். உங்களுடைய தனித்தன்மையே உங்களை மகிழ்ச்சியாக வைக்கும்

மீனம்

Third party image reference

மற்றவர்களுக்கு உதவும் வழிகளை கண்டறியுங்கள். உங்கள் ஈகோகளை விட்டு விட்டு மற்றவர்களுடன் இணைய முற்படுங்கள். உங்கள் எண்ணங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். எப்பொழுதும் சுறுசுறுப்பாக ஆற்றலுடன் செயல்படுங்கள். இந்த இணைப்பு உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.