உங்கள் வாழ்வில் உள்ள பணக்கஷ்டம் நீங்க இந்த தீபாவளியில் நீங்கள் செய்ய வேண்டியது

தீபாவளி நெருங்கி விட்டது, தீபாவளி கொண்டாட்டங்களும் தொடங்கிவிட்டது. ஆண்டுதோறும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் வரும் இந்த தீபாவளி பண்டிகை இந்தியர்களின் மிகமுக்கியமான பண்டிகையாகும். உங்கள் இல்லங்களுக்கு மகிழ்ச்சியை கொண்டுவரும் இந்த தீபாவளியில் நீங்கள் செய்யும் சில காரியங்கள் உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சியை நிலைத்திருக்க செய்யும்.

உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் இன்பங்களுக்கும், துன்பங்களுக்கும் உங்கள் ராசியும் ஒரு முக்கிய காரணமாகும். எனவே தீபாவளியன்று நீங்கள் செய்யும் சில செயல்கள் உங்களுக்கு நீடித்த இன்பத்தையும், வெற்றியையும் வாரி வழங்கும். இந்த பதிவில் தீபாவளியன்று எந்தெந்த ராசிக்காரர்கள் என்னென்ன செய்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்பதை பார்க்கலாம்.

தீபாவளி முதல் உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதும் மகிழ்ச்சி நீடித்திருக்க உங்கள் ராசிப்படி நீங்கள் செய்ய 
மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் தீபாவளியன்று செய்ய வேண்டிய முக்கியமான காரியம் என்னவெனில் ஒரு வெள்ளைத்துணியில் சந்தனத்தை எடுத்து கட்டி அதனை உங்கள் லாக்கரில் வையுங்கள். இப்படி செய்வது உங்கள் இல்லத்தில் செல்வத்தை குறையாமல் வைத்திருக்கும்.

தீபாவளி முதல் உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதும் மகிழ்ச்சி நீடித்திருக்க உங்கள் ராசிப்படி நீங்கள் செய்ய 
ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் தீபாவளி இரவில் செய்ய வேண்டியது என்னவெனில் பசு நெய்யை ஊற்றி இரண்டு விளக்கேற்றி அவற்றை ஒன்றாக இணைத்து வைக்கவும். பின்னர் அந்த விளக்குகளை ஒரு தனிமையான இடத்தில் வைத்துவிடவும். இது உங்கள் மனதில் உள்ள ஆசைகள் உள்ள அனைத்தையும் நிறைவேற்றும்.

தீபாவளி முதல் உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதும் மகிழ்ச்சி நீடித்திருக்க உங்கள் ராசிப்படி நீங்கள் செய்ய 
மிதுனம்

தீபாவளியன்று லக்ஷ்மியை வணங்கிய பின்பு நாருடன் இருக்கும் ஒரு தேங்காயை எடுத்துக்கொண்டு உங்கள் ஆசையை மனதில் நினைத்துக்கொள்ளுங்கள். அந்த தேங்காயை ஒரு சுத்தமான துணியில் சுற்றி அதனை தூய்மையான மற்றும் தனிமையான இடத்தில் வையுங்கள். உங்கள் ஆசை நிறைவேறிய பிறகு அந்த தேங்காயை லக்ஷ்மி கோவிலுக்கே அளித்துவிடுங்கள்.

தீபாவளி முதல் உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதும் மகிழ்ச்சி நீடித்திருக்க உங்கள் ராசிப்படி நீங்கள் செய்ய 
கடகம்

தீபாவளி அன்று ஒரு மஞ்சள் துணியை முக்கோண வடிவில் வெட்டி அதனை விஷ்ணுவின் கோவிலில் கட்டி தொங்கவிடுங்கள். அந்த மஞ்சள் துணி ஜொலிப்பது போல உங்கள் வாழ்விலும் அதிர்ஷ்டம் ஜொலிக்கும்.

தீபாவளி முதல் உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதும் மகிழ்ச்சி நீடித்திருக்க உங்கள் ராசிப்படி நீங்கள் செய்ய 
சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் தீபாவளி அன்று செய்ய வேண்டியது நெய் விளக்கு ஒன்று ஏற்றி அதனை உங்கள் வீட்டின் கதவு முன் வைக்கவும், சூரியன் உதிக்கும் வரை விளக்கை எறிய விடவும். இப்படி செய்தால் உங்கள் வாழ்க்கையில் செல்வம் நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு அதிகரிக்கும்.

தீபாவளி முதல் உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதும் மகிழ்ச்சி நீடித்திருக்க உங்கள் ராசிப்படி நீங்கள் செய்ய 
கன்னி

உங்கள் வாழ்வில் பணத்தை சேமிக்க ஆசைப்பட்டால் நீங்கள் செய்ய வேண்டியது இரண்டு வெற்றிலைகளை சிவப்பு துணியில் சுற்றி அதனை லாக்கரில் வையுங்கள். இதை அடிக்கடி வந்தால் உங்கள் சேமிப்பு விரைவில் அதிகரிக்கும்.

தீபாவளி முதல் உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதும் மகிழ்ச்சி நீடித்திருக்க உங்கள் ராசிப்படி நீங்கள் செய்ய 
துலாம்

நீங்கள் நிதிரீதியாகவோ, பொருளாதாரரீதியாகவோ பாதிக்கப்பட்டிருந்தால் இவற்றில் இருந்து தப்பிக்க தீபாவளி அன்று இரவு நேரத்தில் லக்ஷ்மி படத்திற்கு முன்பு ஒரு தாமரை மலரை வையுங்கள். பின்னர் இந்த மலரை உங்கள் லாக்கரிலோ அல்லது நீங்கள் பணம் சேமிக்கும் இடத்திலோ வையுங்கள். இது உங்களின் அனைத்து பணப்பிரச்சினைகளையும் தீர்க்கும்.

தீபாவளி முதல் உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதும் மகிழ்ச்சி நீடித்திருக்க உங்கள் ராசிப்படி நீங்கள் செய்ய 
விருச்சிகம்

உங்கள் பொருளாதாரநிலை உங்களுக்கு திருப்திகரமாக இல்லாவிட்டால், தீபாவளி தினத்தன்று ஏதேனும் ஒரு கோவிலில் இரண்டு வாழைக்கன்றை நட்டு வைத்து அதனை தொடர்ச்சியாக பராமரியுங்கள். அந்த மரம் காய் கொடுக்க தொடங்கிய பின் அதனை சாப்பிட பயன்படுத்தாமல் கோவிலுக்கே அளித்துவிடுங்கள்.

தீபாவளி முதல் உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதும் மகிழ்ச்சி நீடித்திருக்க உங்கள் ராசிப்படி நீங்கள் செய்ய 
தனுசு

ஒரு வாழை இலையில் காயத்ரி மந்திரத்தை எழுதி அதனை பூஜையறையில் இரவு முழுவதும் வைக்கவும். தீபாவளி முடிந்த மறுநாள் காலை அந்த இலையை உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் ஒரு பசுமாட்டிற்கு சாப்பிட கொடுங்கள். இது உங்களின் அனைத்து கஷ்டங்களையும் போக்கும்.

தீபாவளி முதல் உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதும் மகிழ்ச்சி நீடித்திருக்க உங்கள் ராசிப்படி நீங்கள் செய்ய 
மகரம்

நீங்கள் நினைத்த அளவிற்கு உங்களால் பணத்தை சேமிக்க முடியவில்லை என்று கவலைப்பட்டால், ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அந்த பாத்திரத்தை உங்கள் லாக்கரில் வையுங்கள். இது உங்கள் சேமிப்பை அதிகரிக்கும்.

தீபாவளி முதல் உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதும் மகிழ்ச்சி நீடித்திருக்க உங்கள் ராசிப்படி நீங்கள் செய்ய 
கும்பம்

தீபாவளி அன்று இரவில் உங்கள் இல்லத்தில் தேங்காயை உடைத்து அதில் நெய்யை ஊற்றி விளக்கேற்றி வையுங்கள். உங்கள் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மட்டுமின்றி உங்கள் துறை தொடர்பான வாழ்க்கையிலும் வெற்றியை வழங்கும்.

தீபாவளி முதல் உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதும் மகிழ்ச்சி நீடித்திருக்க உங்கள் ராசிப்படி நீங்கள் செய்ய 
மீனம்

உடனடியாக பணம் தேவைப்பட்டால், தீபாவளியன்று லக்ஷ்மி கோவிலுக்கு நறுமண பொருட்களை வழங்குங்கள். தீபாவளி அன்று தொடங்கி இதனை அடிக்கடி செய்யுங்கள் இது உங்கள் வாழ்க்கையை விரைவில் செழிப்பானதாக மாற்றும்.