கிட்னியில் கற்கள் உருவாக காரணமாக இருக்கும் உணவுகள் இவைதான் தெரியுமா...?

நாம் சாப்பிட கூடிய உணவுகள் ஒவ்வொன்றும் தனி தன்மை வாய்ந்தது. ஒவ்வொரு உணவிற்கும் ஒவ்வொரு சிறப்பம்சம் உள்ளது. அதே போன்று ஒவ்வொரு உணவிற்கும் தீங்கான தன்மையும் இருக்கிறது. அவற்றை நாம் கட்டாயம் அறிந்து கொண்டே உணவை உண்ண வேண்டும். அந்த வகையில், நாம் சாப்பிட கூடிய அன்றாட உணவுகளில் சில முக்கியமானவை நம் கிட்னியை பெரிதும் பாதிக்கிறதாம்.

இவை சிறுநீரகத்தில் கற்களை உருவாக்கவல்லது. இதை இத்தனை நாட்களாக நாம் அறிந்திராமலே இருந்திருக்கின்றோம். இந்த பதிவில் கூறும் பல உணவுகளும் கிட்னியை பாதிக்க கூடிய உணவாகும். எந்தெந்த உணவுகள் கிட்டினியை பாதிக்கும், மற்றும் கிட்னியின் ஆரோக்கியத்தை எப்படி இந்த உணவுகள் கெடுகிறது என்பதை பற்றியும் நாம் தெரிந்து கொள்வோம்.

கிட்னியில் கற்களை உருவாக்க முதல் காரணியாக இருக்கும் உணவுகள் இவைதான்..! 
கிட்னியில் கற்களா..?

உடலில் மிக முக்கிய உறுப்புகளில் ஒன்று கிட்னியும். கிட்னியில் முதன்மையான வேலை என்னவென்றால், ரத்தத்தை சுத்தம் செய்வது. மேலும், ரத்தத்தில் உள்ள தேவையற்ற பொருட்களை சிறுநீரின் மூலம் வெளியேற்றுதலே. அந்த வகையில் சிறுநீரகத்தில் தண்ணீரின் அளவு குறைந்தாலோ அல்லது உப்பின் அளவு அதிகரித்து கொண்டு போனாலோ சிறுநீரகத்தில் கற்களாக மாறி விடுகிறது.

 

கிட்னியில் கற்களை உருவாக்க முதல் காரணியாக இருக்கும் உணவுகள் இவைதான்..! 
கால்சியம் ஆக்சலேட்(Calcium Oxalate) கற்கள்...

நமது உடலில் வெறும் கால்சியம் மட்டும் இருந்தால் அதில் எந்த வித பாதிப்பும் இல்லை. ஆனால், இவை ஆக்சலேட் என்ற நச்சு தன்மை உள்ள வேதி பொருளோடு உடலில் சேரும் போது தான் கிட்னிக்கு பாதிப்பு ஏற்படும். அந்த வகையில் நாம் சாப்பிடும் பல காய்கறிகள், பழங்கள், மற்றும் உணவு பொருட்களில் இந்த ஆக்சலேட் அதிகம் இருக்கிறதாம்.

 

கிட்னியில் கற்களை உருவாக்க முதல் காரணியாக இருக்கும் உணவுகள் இவைதான்..! 
உப்பு தரும் ஆப்பு..!

ஒரு நாளைக்கு 2300mg அளவே உப்பை உணவில் சேர்த்து கொள்ளவேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த அளவை விட அதிகமான உப்பை சேர்த்து கொண்டால், அது உங்கள் கிட்டினியை பாதித்து விடும். எனவே, எப்போதும் உணவில் சேர்த்து கொள்ளும் உப்பின் அளவு மிக இன்றியமையாததாகும்.

 

கிட்னியில் கற்களை உருவாக்க முதல் காரணியாக இருக்கும் உணவுகள் இவைதான்..! 
கீரைக்குள் ஆபத்தா..?

கீரை உடலுக்கு நல்லது தான். என்றாலும், ஒரு சில கீரை வகைகள் சற்றே ஆபத்தானதாகும். அதில் முளைக்கீரையும் ஒன்று. வெறும் முளைக்கீரையை அதிகமாக சாப்பிட்டால் கால்சியம் ஆக்சலேட் உருவாகி கிட்னியில் கல் ஏற்படும். எனவே, இவற்றுடன் குறைந்த அளவு கொழுப்பு உள்ள சீஸ் சேர்த்து சாப்பிட்டால் நல்லதாம்.

 

கிட்னியில் கற்களை உருவாக்க முதல் காரணியாக இருக்கும் உணவுகள் இவைதான்..! 
அதிக வைட்டமின் சி..?

பொதுவாக எந்த ஒரு சத்தும் சீரான அளவில் இருந்தாலே நலம் தரும். அதே போன்றுதான், வைட்டமின் சி உடலில் அதிகம் இருந்தால் அவை ஆக்சலேட்டை உற்பத்தி செய்யும். எனவே, கிட்டினியில் இவை கற்களை உருவாக்கும். குறிப்பாக ஆரஞ்ச், எலுமிச்சை போன்றவற்றை அதிகமாக சாப்பிட கூடாது.

 

கிட்னியில் கற்களை உருவாக்க முதல் காரணியாக இருக்கும் உணவுகள் இவைதான்..! 
கால்சியம் பாஸ்பேட் (Calcium Phosphate)

கால்சியம் ஆக்சலேட் எப்படி கிட்னியில் கற்களை உருவாக்குகிறதோ அதே போன்று கால்சியம் பாஸ்பேட்டும் கற்களை உருவாக்கும். எனவே, பாஸ்பரஸ் நிறைந்த உணவையும் அதிகம் சாப்பிட கூடாது. இவை கால்சியமுடன் சேர்ந்து வேதி வினை புரிந்து பாதிப்பை சிறுநீரகத்திற்கு தரும்.

 

கிட்னியில் கற்களை உருவாக்க முதல் காரணியாக இருக்கும் உணவுகள் இவைதான்..! 
விலங்குகளின் கல்லீரல்

அதிக அளவில் விலங்குகளின் கல்லீரலை சாப்பிட்டால் அவை கிட்டினியை பாதிக்க செய்யும். குறிப்பாக கோழியின் கல்லீரல், மாட்டின் கல்லீரல் போன்றவை இந்த பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், முட்டை போன்றவற்றையும் அதிகம் சேர்த்து கொள்ள கூடாது.

 

கிட்னியில் கற்களை உருவாக்க முதல் காரணியாக இருக்கும் உணவுகள் இவைதான்..! 
சோயா

சோயாவால் செய்யப்படும் எந்த ஒரு உணவாக இருந்தாலும் அது சுவை மிக்கதாக இருக்கும். அதற்காக நாம் அதிக அளவில் இவற்றை உணவில் சேர்த்து கொண்டால் பின்விளைவுகள் அதிகமாக இருக்கும். குறிப்பாக சோயா பால், சோயா வெண்ணெய், சோயா சாஸ் ஆகியவற்றை தவிர்த்து விடுங்கள்.

 

கிட்னியில் கற்களை உருவாக்க முதல் காரணியாக இருக்கும் உணவுகள் இவைதான்..! 
பதப்படுத்தப்பட்ட உணவுகள்...

இன்று உண்ணும் உணவு முறையில் கவனமே இல்லாமல் சாப்பிட்டு கொண்டிருக்கின்றனர். குறிப்பாக பதப்படுத்தப்பட்ட காய்கறிகள், இறைச்சிகள், தின்பண்டங்கள் போன்றவற்றை சாப்பிடுவதால் கிட்னியின் ஆரோக்கியம் மிகவும் சீர்கேடு அடையும். எனவே, பதப்படுத்தபட்ட உணவுகளை தவிர்த்து விடுங்கள்.

 

கிட்னியில் கற்களை உருவாக்க முதல் காரணியாக இருக்கும் உணவுகள் இவைதான்..! 
பெரிஸ்க்கள்

பழங்கள் உடலுக்கு நல்லது தான். என்றாலும் ஒரு சில முக்கிய பழங்களை நாம் அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக கிரன்பெரில், ராஸ்பெரிஸ், ஆரஞ்சு போன்றவற்றை குறைவாக எடுத்து கொள்ளவும். இல்லையென்றால் கிட்டினியை கற்கள் கொண்டதாக மாற்றி விடும்.

 

கிட்னியில் கற்களை உருவாக்க முதல் காரணியாக இருக்கும் உணவுகள் இவைதான்..! 
பால் பொருட்கள்

பாலில் நிறைய ஊட்டசத்துக்கள் இருந்தாலும் அவற்றின் தன்மையை பொறுத்தே குடிக்கலாமா..? கூடாதா..? என்பதை தீர்மானிக்க முடியும். பாலில் இருந்து தயாரிக்கப்படும் சீஸ், வெண்ணெய், யோகர்ட் போன்றவற்ற்றையும் அதிகம் சாப்பிட கூடாது. மேலும், ஆடை நீக்கப்பட்ட பாலை பருகுவது நல்லது.
எனவே, மேற் சொன்ன உணவுகளை தவிர்த்து ஆரோக்கியமான வாழ்வை வாழுங்கள் நண்பர்களே...! மேலும், இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.