வியாழக்கிழமை இன்று... குருவின் பார்வை யார் பக்கம் இருக்கிறது தெரியுமா?

இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது?

எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய பணிகளை தொடங்குவார்கள். அப்படி இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என்பதை பார்க்கலாம்.

வியாழக்கிழமை இன்று... குருவின் பார்வை யார் பக்கம் இருக்கிறது தெரியுமா? 
மேஷம்

மனதுக்குள் நிறைத்து வைத்திருக்கும் செயல்களை மிகச்சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். பயணங்களால் உங்களுககு அனுகூலமான பலன்கள் உண்டாகும். புதிய வாகனங்கள் வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். முக்கியப் பிரமுகர்களுடைய அறிமுகங்கள் கிடைக்கும். எதிர்ப்புகளால் ஏற்பட்ட இன்னல்கள் நீங்கும். தந்தையின் வழியில் உறவுகள் மூலம் உங்களுக்குச் சாதகமான சூழல்கள் நிலவும். நீங்கள் எதிர்பாராத பொருளாதார லாபங்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

 

வியாழக்கிழமை இன்று... குருவின் பார்வை யார் பக்கம் இருக்கிறது தெரியுமா? 
ரிஷபம்

உங்களுடைய புதிய முயற்சிகள் மூலம் மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். உங்களுடைய தொழிலில் உங்களுக்கு இருக்கின்ற கூட்டாளிகளால் உங்களுக்குத் தேவையற்ற செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. உணவு சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் கூடுதல் கவனமாக இருங்கள். உறவினர்களிடம் பேசுகின்ற பொழுது கொஞ்சம் நிதானமாக இருங்கள். வியாபாரத்தில் உடன் பணிபுரிகின்ற பணியாளர்களிடம் கொஞ்சம் பொறுமையைக் கடைபிடிக்கவும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் இருக்கும்.

 

வியாழக்கிழமை இன்று... குருவின் பார்வை யார் பக்கம் இருக்கிறது தெரியுமா? 
மிதுனம்

குடும்பத்தினருடன் வெளியிடங்களுக்குச் சென்று வருகின்ற போது உங்களுக்குத் தேவையான வாய்ப்புகள் வந்து சேரும். எதிர்பாராத பணவரவுகள் வந்து சேரும். தொழில் எதிரிகளால் உங்களுக்கு இருந்துவந்த தொல்லைகள் மறையும். வீட்டுக்குத் தேவையான பொருள்சேர்க்கைகள் உண்டாவதற்கான வாய்பபுககள் உண்டாகும். நண்பர்களைச் சந்தித்து மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தில் லாபகரமான சூழல்கள் அமையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

 

வியாழக்கிழமை இன்று... குருவின் பார்வை யார் பக்கம் இருக்கிறது தெரியுமா? 
கடகம்

தொழில் சார்ந்த பயணங்களால் உங்களுக்கு அனுகூலங்கள் உண்டாகும். வீட்டில் பிள்ளைகளிடம் கொஞ்சம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும். பெற்றோர்களுடைய உடல் நலத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துவது நல்லது. வேலையில் உங்களுக்கான பொறுப்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் உங்களுடைய பணியாளர்களால் சின்ன சின்ன மன வருத்தங்கள் உண்டாகும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.

 

வியாழக்கிழமை இன்று... குருவின் பார்வை யார் பக்கம் இருக்கிறது தெரியுமா? 
சிம்மம்

நீங்கள் செய்கின்ற காரியங்களில் உங்களுக்கு அனுகூலங்கள் ஏற்படும். வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களினால் சில அசௌகரியங்கள் ஏற்படலாம். கவனமாக இருப்பது நல்லது. உங்களுடைய திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும். உயர் அதிகாரிகளின் மூலமாக உங்களுக்கு ஆதரவான சூழல்கள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம்அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

 

வியாழக்கிழமை இன்று... குருவின் பார்வை யார் பக்கம் இருக்கிறது தெரியுமா? 
கன்னி

உங்களுடைய கனிவான பேச்சால் மற்றவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த காரியம் முடிய சற்று காலதாமதம் ஏற்படும். உடன் பிறந்த சகோதரர்களிடம் கொஞ்சம் கால தாமதம் ஏற்படும். உங்களுடைய வேலைகளை மற்றவர்களிடம் ஒப்படைப்பதை தவிர்த்துவிடுங்கள். விவசாயப் பணிகளில் உங்களுடைய முயற்சிக்கு ஏற்ற லாபம் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர்பச்சை நிறமும் இருக்கும்.

 

வியாழக்கிழமை இன்று... குருவின் பார்வை யார் பக்கம் இருக்கிறது தெரியுமா? 
துலாம்

மனமும் உடலுமு புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். தைரியமாக எதையும் முடிவு செய்வீர்கள். உங்களுடைய உறவினர்களின் வருகையினால் வீட்டில் கலகலப்பான சூழல்கள் உருவாகும். புதிய முயற்சிகள் உங்களுக்குச் சாதகமான முடிவைத் தரும். சக ஊழியர்களால் உங்களுக்கு இருநுத மறைமுகத் தொல்லைகள் முடிவுககு வரும். தொழிலில் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

 

வியாழக்கிழமை இன்று... குருவின் பார்வை யார் பக்கம் இருக்கிறது தெரியுமா? 
விருச்சிகம்

திட்டமிட்ட காரியங்களை வெற்.றிகரமாகச் செய்து முடிப்பீர்குள். குடும்பத்தில் உங்களுடைய ஆலோசனைகளைக் குட்டு நடப்பார்கள். நெருக்கமானவர்களால் எதிர்பாராத செலவுகள் வந்து சேரும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். முக்கிய முடிவுகளில் குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடந்து கொள்ளுங்கள். செய்கின்ற செயல்களில் சற்று கவனமாக இருங்கள். இன்று உங்களுஐடய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.

 

வியாழக்கிழமை இன்று... குருவின் பார்வை யார் பக்கம் இருக்கிறது தெரியுமா? 
தனுசு

எதிர்பாராத நேரத்தில் பணவரவு வந்து சேரும். மனதில் தைரியம் அதிகரிக்கும். திடீர் பயணங்களின் மூலம் ஆதாயங்கள் ஏற்படும்.அலுவலகத்தில் சக ஊழியர்களுடைய செயல்பாடுகளால் தலையிட வேண்டாம். புதிய ஆடை, ஆபரங்கள் வாங்குகின்ற யோகங்கள் உண்டாகும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் தான் இருக்கும்.

 

வியாழக்கிழமை இன்று... குருவின் பார்வை யார் பக்கம் இருக்கிறது தெரியுமா? 
மகரம்

தாய்வழியில் உறவுகளால் உங்களுக்குச் சாதகமான பலன்கள் உண்டாகும். கணவன், மனைவிக்கு இடையே நெருக்கங்கள் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையினால் வீட்டில் மகிழ்ச்சியான சூழல்கள் நிலவும். சிலருக்கு அவ்வப்போது, பழைய நினைவுகளால் மனதுக்குள் குழப்பங்கள் நேரும். தொழில் சார்நுத உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

 

வியாழக்கிழமை இன்று... குருவின் பார்வை யார் பக்கம் இருக்கிறது தெரியுமா? 
கும்பம்

மன உறுதியுடன் செயல்படுவீர்கள். பெற்றுார்களின் வழி உறவினர்களால் நீங்கள் எதிர்புார்த்த சுப செயல்கள் கைகூடி வரும். உடன் பிறந்த சகோதரர்களால் சிறிய அளவில் ஆதாயங்கள் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்கும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். தொழிலில் திருப்தியான சூழல்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் நீலநிறமும் இருக்கும்.

 

வியாழக்கிழமை இன்று... குருவின் பார்வை யார் பக்கம் இருக்கிறது தெரியுமா? 
மீனம்

சிலருக்கு குடும்பத்துடன் சென்று குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்ற வாய்ப்பு உண்டாகும். தொழில் தொடர்பான முக்கிய முடிவுகளில் கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை. அலுவலகத்தில் அதிகாரிகளுடைய ஆலோசனைகளைப் பயனுள்ளதாக இருக்கும். புதிய முயற்சிகளில் கொஞ்சம் நிதானத்துடன் செயல்படுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.