முத்துராமலிங்கர் கட்டிய 5 தலை விநாயகர் கோவில் எங்க இருக்கு

பசும்பொன் முத்துராமலிங்கரால் விநாயகருக்கு என ஓர் கோவில் கட்டப்பட்டுள்ளது உங்களுக்கு தெரியுமா ?. வாருங்கள், அது எங்கே உள்ளது, எப்படிச் செல்வது என பார்க்கலாம்...

குடும்ப சுப நிகழ்ச்சின்னாலும் சரி, ஆன்மீகத் திருத்தலம்னாலும் சரி நம் கண்ணில் முதலில் அகப்படுவது விநாயகப் பெருமானே. பிள்ளையாரப்பன், விநாயகர் என இந்து சமயக் கடவுள்களில் பெரும்பாலானோரால் வழிபடப்படும் முதன்மைக் கடவுளான விநாயகர், கணபதி, ஆனைமுகன் என்ற வேறு பல பெயராலும் அன்பாக அழைக்கப்படுகிறான். தீராத வினையையும் தீர்க்கும் ஆனை முகத்தோனான இந்த சிவனின் புதல்வனுக்கு என பல்வேறு சிறப்புகளும், பெருமைகளும் உள்ளது. அந்த வகையில், பசும்பொன் முத்துராமலிங்கரால் விநாயகருக்கு என ஓர் கோவில் கட்டப்பட்டுள்ளது உங்களுக்கு தெரியுமா ?. வாருங்கள், அது எங்கே உள்ளது, எப்படிச் செல்வது என பார்க்கலாம்.

முத்துராமலிங்கர்


தமிழகத்தின் தென்மாவட்டமான இராமநாதபுரத்தில் பிறந்த இவர் ஆன்மிகவாதியாகவும் சாதி பாகுபாட்டை எதிர்ப்பவராகவும் சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் விளங்கினார். தலைசிறந்த பேச்சாளராகவும் ஆன்மீகவாதியாகவும் திகழ்ந்த முத்துராமலிங்கள் அப்போதைய காலகட்டத்தில் அனைத்து மதத்தினரையும் ஒருதரமாக மதித்தவர். அவரால் ஓர் கோவில் கட்டமைக்கப்பட்டது என்றால் அது விருதுநகர் அருகே உள்ள ஐந்துமுக விநாயகர் ஆலயமே.

Biswarup Ganguly

எங்கே உள்ளது ?


விருதுநகரில் இருந்து சுமார் 137 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புளிச்சகுளம் என்னும் பகுதியில் அமைந்துள்ளது ஐந்துமுக விநாயகர் கோவில். விருதுநகரில் இருந்து கோவில்பட்டி, சங்கரன் கோவில் வழியாகவும், கோவில் பட்டியில் இருந்து வெள்க்குளம் வழியாகவும் இங்கே செல்லலாம்.

சிறப்பு


தமிழகத்தில் எளிதில் காணக்கிடைக்காத ஐந்து முக விநாயகர் இக்கோவிலிலேயே காட்சியளிக்கிறார். மேலும், பத்து கைகளுடன் நின்ற நிலையில் இங்கு பஞ்சமுக விநாயகர் அருள்பாளிக்கிறார்.

Magiceye

நடைதிறப்பு


காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோவிலின் நடை திறந்திருக்கும்.

Booradleyp1

திருவிழா


விநாயகருக்கு உகந்த நாட்களான விநாயகர் சதுர்த்தி மற்றும் சங்கடஹரா சதுர்த்தி போன்ற பிற சதுர்த்தி தினங்களில் இங்கு மூலவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு திருவிழா கொண்டாடப்படுகின்றது.

Alanvel

தலசிறப்பு


பசும்பொன் முத்திராமலிங்கர் கட்டிய கோவில் என்பதால் குறிப்பிட்ட சமுதாயத்தினரிடையே இதுவோர் புன்னியத் தலமாக போற்றப்படுகின்றது. மேலும், மற்ற தலங்களில் இல்லாததைப் போல் இங்கு பஞ்சமுகத்துடன் விநாயகர் காட்சியளிப்பதால் பக்கதர்கள் பலரையும் இது ஈர்க்கிறது.

महेश धामी

தலவரலாறு

முத்துராமலிங்கர், பாபநாசம் நதியில் குளித்துவிட்டு வருகையில் அங்கே வந்த ஒருவர் பஞ்சமுக விநாயகர் சிலையை அவரிடம் குடுத்துவிட்டுச் சென்றார். அதனைத்தொடர்ந்து முத்துராமலிங்கரால் 1959 ஆம் ஆண்டு அவருக்குச் சொந்தமான நிலத்தில் கோவில் கட்டப்பட்டு அங்கு இந்தச் சிலை நிறுவப்பட்டது. தற்போது இக்கோவிலை அவரது சகோதரி குடும்பத்தினர் பராமரித்து வருகின்றனர்.

Anandajoti Bhikkhu

சித்தர் சந்தித்த பசும்பொன்


கோவிலில் விநாயகருக்கு அருகே உள்ள ஐந்து தலை நாக சிலையானது பசும்பொன் என அழைக்கப்படும் தவசி குறிச்சியில் சித்தர் ஒருவரால் முத்தராமலிங்களுக்கு வழங்கப்பட்டதாக அப்பகுதியினரால் தெரிவிக்கப்படுகிறது.

டியொடரண்ட் உபயோகம் என்ன தீங்கு விளைவிக்கும்?  வீடியோ