உடல் சூடு அதிகமா இருக்கா அதை உடனே குறைக்க இதோ சில வழிகள்

வெயில் காலம் ஆரம்பிக்கப் போகிறது. இந்நிலையில் வெளியே வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. வீட்டிற்குள் கூட இருக்க முடியாத அளவு அனல் காற்று வீசுகிறது. இப்படி கொளுத்தும் வெயிலில் சிறிது நேரம் சுற்றினாலே, உடலில் சூடு பிடித்துவிடும். ஆனால் ஒருவரது உடல் சூடு அதிகரிப்பதற்கு பல காரணிகள் உள்ளன. அதில் கால நிலை மட்டுமின்றி, உணவுகளான காப்ஃபைன், ஆல்கஹால் மற்றும் கார உணவுகள் போன்றவை உடலின் வெப்பநிலையை அதிகரிக்கும்.

அதேப் போல் சில மருந்துகளும், உடலினுள் வெப்பநிலையை அதிகரிக்கும். ஒருவரது உடலின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்த பல இயற்கை வழிகள் உள்ளன. இந்த கட்டுரையில் உடலின் வெப்பநிலையைக் குறைத்து, சீரான அளவில் பராமரிக்க உதவும் சில ஆயுர்வேத வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த வழிகளைப் பின்பற்றி வந்தால், உடல் சூடு பிரச்சனையில் இருந்து உடனடியாக விடுபடலாம்.

சரி, இப்போது உடல் சூட்டைக் குறைக்கும் சில ஆயுர்வேத வழிகள் என்னவென்று காண்போம். அதைப் படித்து கோடையில், உடலை சூடு பிடிக்காமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

உடல் சூடு அதிகமா இருக்கா? அதை உடனே குறைக்க இதோ சில வழிகள்! 
குளிர்ந்த பால்

வெயில் காலத்தில் பச்சை பாலை ஃப்ரிட்ஜில் வைத்து, தினமும் குடித்து வந்தால், உடலில் உள்ள அதிகப்படியான வெப்பம் குறைந்துவிடும். உடல் சூட்டினால் அவஸ்தைப்படுபவர்கள், இந்த முறையை கட்டாயம் தினமும் பின்பற்றினால், விரைவில் நல்ல மாற்றம் கிடைக்கும். முக்கியமாக பால் மிகவும் குளிர்ச்சியுடன் இருக்கக்கூடாது. பச்சைப் பாலை குடிக்கப் பிடிக்காதர்கள், அத்துடன் விருப்பமான ப்ளேவர்களை சேர்த்து கலந்து மில்க் ஷேக் போன்று தயாரித்துக் குடியுங்கள்.

 


தண்ணீர்

உடல் சூட்டைத் தணிக்க தண்ணீரை விட சிறந்த பானம் வேறு எதுவும் இல்லை. கோடைக்காலத்தில் வழக்கமாக குடிக்கும் நீரின் அளவை விட, சற்று அதிகமாக அதுவும் அடிக்கடி நீரைக் குடித்து வந்தால், உடலினுள் உள்ள வெப்பநிலை குறைந்துவிடும்.

 


ஆப்ரிகாட்

ஒரு டம்ளர் ஆப்ரிகாட் ஜூஸ் உடன் தேன் கலந்து குடித்து வந்தால், உடல் சூடு தணிவதோடு, அதிகப்படியான தாகமும் அடங்கும். ஆப்ரிகாட் கிடைப்பது அரிதான ஒன்று. ஆனால் இந்த ஆப்ரிகாட் பழம் கிடைத்தாலோ அல்லது அதன் ஜூஸ் கிடைத்தாலோ, அதைத் தவறாமல் வாங்கிக் குடியுங்கள்.

 


பீச்

உடல் சூடு அதிகமாக உள்ளதா? இதன் விளைவாக உங்கள் சருமத்தில் அரிப்புக்கள் கடுமையாக உள்ளதா? பீச் பழத்தில் பொட்டாசியம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி2 போன்ற சருமம் மற்றும் உடல் ஆரோக்கியயத்தைப் பராமரிக்கத் தேவையான அத்தியாவசிய சத்துக்ள் வளமான அளவில் உள்ளன. உலர்ந்த பீச் பழம் கூட உடல் சூட்டைக் குறைக்க உதவும். ஆகவே எது கிடைத்தாலும் வாங்கி சாப்பிடுங்கள்.

 


வைட்டமின் சி உணவுகள்

வைட்டமின் சி அதிகம் நிறைந்த சிட்ரஸ் பழ்ங்களான சாத்துக்குடி, ஆரஞ்சு போன்றவற்றை ஒருவர் வெயில் காலத்தில் சாப்பிட்டு வந்தால், உடலின் வெப்பநிலை அதிகரிக்காமல் தடுக்கலாம். எனவே வெயில் காலம் அல்லது கோடைக் காலத்தில் வைட்டமின் சி பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் சாப்பிடுங்கள். இதனால் உடல் சூடு பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

 


பால் மற்றும் தேன்

வெயில் காலத்தில் உடல் வெப்பநிலையைக் கட்டுப்பாட்டில் வைக்க சிறப்பான வழி குளிர்ந்த பாலில் தேன் கலந்து குடிப்பது தான். உங்களுக்கு உடல் சூடு தாங்க முடியாத அளவில் இருந்தால், தினமும் ஒரு டம்ளர் குளிர்ந்த பாலுடன், 1 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து குடியுங்கள். இப்படி ஒரு பானத்தைக் குடிப்பதால், உடல் வெப்பம் விரைவில் தணியும்.

 


வாழைப்பழம்

விலைக் குறைவில் அனைத்து காலங்களிலும் கிடைக்கும் ஓர் பழம் தான் வாழைப்பழம். வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம், ஏராளமான நன்மைகளை வழங்க வல்லது. இப்பழம் எப்பேற்பட்ட உணவையும் எளிதில் செரிமானமடையச் செய்யும். உணவு உட்கொண்ட பின் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டால், அது உணவுகளை எளிதில் செரிமானமடையச் செய்து, உடல் சூடு அதிகரிப்பதைத் தடுக்கும்.

 


கரும்பு ஜூஸ்

கரும்பு ஜூஸில் உள்ள சர்க்கரை, உடலின் ஆற்றலை அதிகரிக்கும். கரும்பில் குளிர்ச்சிப் பண்புகள் உள்ளன. இது உடலில் உள்ள அதிகப்படியான வெப்பநிலையைக் குறைக்க உதவும். கோடைக்காலத்தில் உடல் சூடு பிடிக்காமல் இருக்க வேண்டுமானால், தினமும் ஒரு டம்ளர் கரும்பு ஜூஸைக் குடியுங்கள். இதனால் உடல் சூட்டினால் அவஸ்தைப்படுவதைத் தவிர்க்கலாம்.

 


மாதுளை

தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸைக் குடித்து வருவதன் மூலம், உடலின் வெப்பநிலை நிலையாகவும், கட்டுப்பாட்டுடனும் இருக்கும். மேலும் மாதுளையை ஒருவர் தினமும் உட்கொண்டு வந்தால், அதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள், உடலைத் தாக்கும் பல்வேறு புற்றுநோய் மற்றும் இதர நோய்களின் அபாயத்தைக் குறைக்கும்.

 


சோம்பு

சோம்பு மிகவும் நறுமணமிக்க மற்றும் நல்ல சுவையுடைய மசாலாப் பொருள். இந்த சோம்பை இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீரை வடிகட்டி குடியுங்கள். இப்படி தினமும், அதுவும் கோடைக்காலத்தில் குடித்து வந்தால், உடல் சூடு பிடிப்பதைத் தடுக்கலாம்.

 


முள்ளங்கி

பலருக்கும் முள்ளங்கி பிடிக்காது. இதற்கு அதன் சுவையே காரணம். ஆனால் இந்த காய்கறியை கோடைக்காலத்தில் சாப்பிடுவது மிகவும் நல்லது. ஏனெனில் முள்ளங்கியில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. கோடையில் வெப்ப பக்கவாதம் வருவது பொதுவானது. இதற்கு காரணம் அதிகப்படியான உடல் சூடு மற்றும் உடல் வறட்சி தான். இதைத் தவிர்க்க வேண்டுமானால், அடிக்கடி முள்ளங்கியை கோடைக்காலத்தில் சாப்பிடுங்கள்.

 

 
வெள்ளரிக்காய்

கோடையில் அதிகம் விற்கப்படும் ஓர் காய்கறி தான் வெள்ளரிக்காய். இது மிகவும் சுவையாகவும், நீர்ச்சத்து நிறைந்ததாகவும் இருப்பதோடு, கோடையில் இதை சாப்பிட்டால், உடல் வறட்சி தடுக்கப்பட்டு, உடல் சூடு பிடிப்பது தடுக்கப்படும். எனவே இந்த வெள்ளரிக்காயை சாலட் போன்று செய்து, அடிக்கடி சாப்பிடுங்கள்.

 

உடல் சூடு அதிகமா இருக்கா? அதை உடனே குறைக்க இதோ சில வழிகள்! 
முலாம் பழம்

கோடையில் விற்கப்படும் மற்றொரு சுவையான பழம் தான் முலாம் பழம். இந்த பழத்திலும் நீர்ச்சத்து மற்றும் அத்தியாவசிய சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளது. இந்த முலாம் பழத்தை ஜூஸ் தயாரித்து தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், கோடைக்காலத்தில் சந்திக்கும் பல ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

 


இளநீர்

நம் அனைவருக்குமே உடல் சூடு என்றதும் குடிக்கத் தோன்றும் ஓர் பானம் இளநீர். இந்த இளநீர் ஒருவரது உடல் சூட்டைத் தணிப்பதோடு, உடலை வறட்சி அடையாமலும் தடுக்கும். மேலும் இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள், உடலின் ஆற்றலை மேம்படுத்தும். எனவே கோடையில் தவறாமல் ஒரு இளநீரைக் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

 


தர்பூசணி

தர்பூசணி உடல் சூட்டைக் குறைக்க உதவும். இதற்கு அதில் உள்ள அதிகளவிலான நீர்ச்சத்து தான் காரணம். மேலும் தர்பூசணியை ஒருவர் தொடர்ச்சியாக கோடையில் சாப்பிட்டு வந்தால், அது உடல் வறட்சியைத் தடுத்து, உடலை போதிய நீர்ச்சத்துடன் வைத்துக் கொள்ளும். அதற்கு தர்பூசணியை சிறு துண்டுகளாக்கி, அத்துடக் சிறிது சர்க்கரை மற்றும் குளிர்ந்த பால் சேர்த்து அரைத்துக் குடியுங்கள். இல்லாவிட்டால், அதை சாலட் போன்று செய்தும் சாப்பிடலாம்.

 

 

உடல் சூடு அதிகமா இருக்கா? அதை உடனே குறைக்க இதோ சில வழிகள்! 
கற்றாழை

உடல் சூடு உடனே குறைய வேண்டுமானால், கற்றாழை ஜெல்லை உடல் முழுவதும் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவுங்கள். இல்லாவிட்டால், 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் குடியுங்கள். குறிப்பாக ஒரு நாளைக்கு 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லுக்கு மேல் சப்பிடக்கூடாது.

 

டியொடரண்ட் உபயோகம் என்ன தீங்கு விளைவிக்கும்?  வீடியோ