எவ்வளவு பெரிய தொப்பையும் இந்த டீ குடிச்சா குறைஞ்சிடுமாம் வெறும் 2 ரூபாய் தான் செலவு

இஞ்சி பெரும்பாலான பிரச்னைகளுக்குத் தீர்வாக அமைவது நமக்குத் தெரிந்ததே. ஜீரண சக்தியை அதிகப்படுத்துதல், மலச்சிக்கல், வலி ஆகியவற்றை தீர்க்க உதவுகிறது. அதனால் இஞ்சி குடிப்பது மிகவும் நல்லது.

காலையில் இஞ்சியை உணவில் தினமும், சேர்க்கணும் என்பது மூத்தோர் வாக்கு, அதன் மூலம், உடலின் செரிமான ஆற்றல் அதிகரிக்கும், உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இரத்தத்தில் சர்க்கரை அளவு மற்றும் கொழுப்பை சரியான அளவில் வைக்கும். சோர்வை நீக்கி, பசியைத் தூண்டும் ஆற்றல்மிக்கது, இஞ்சி.

தமிழரின் பாரம்பரிய உணவுப்பொருளாகவும், தினசரி சமையலில் தவிர்க்கமுடியாத ஒன்றாகவும் விளங்கும் இஞ்சியில் உள்ள இயற்கை தாதுக்களே, மனிதர் உடல் நலனைக் காப்பதில், ஆற்றல்பெற்று விளங்குகின்றன. தற்காலத்தில், இஞ்சியின் தினசரி பயன்பாட்டில், இஞ்சி குடிநீர், சிறப்பான பலன்களை அளிக்கின்றன.

இயற்கை மூலிகை

இயற்கையாக கிடைக்கும் எண்ணற்ற மூலிகைகளை, நாம் உடல்நலனுக்காகப் பயன்படுத்தினாலும், எல்லோரும் அதைப் பயன்படுத்தத் தயங்குவார்கள். அந்த மூலிகையால், உடலுக்கு ஏதாவது தீங்கு ஏற்பட்டுவிடுமோ என. ஆயினும், அதைப்போல யாரும், இஞ்சியையும், இஞ்சி குடிநீரையும் நினைக்கப்போவதில்லை, இருந்தாலும், இஞ்சியை எல்லோரும் பயன்படுத்தமுடியுமா என்பது, இன்னமும் ஆய்விலேயே இருக்கிறது எனபதும், உண்மையே...

இஞ்சி குடிநீர்

இஞ்சியை சாப்பிடுவதால் ஏற்படும் உடல் நன்மைகளை விட, இஞ்சிக் குடிநீரைப் பருகுவதால், ஏராளமான நன்மைகளை அடையமுடியும் என்கிறது, தற்கால மருத்துவம். தினமும் சாப்பிடும் கெமிக்கல் கலந்த உணவுகள், தின்பண்டங்கள் மற்றும் நொறுக்குத் தீனிகளால், உடல் நலம் கெடும்போது, அதைத் தடுத்து, உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க, இஞ்சிக் குடிநீர் நன்மைகள் செய்யும் என்கின்றனர்.
நாட்பட்ட தசை வீக்கங்களைக் குணமாக்கும், இஞ்சிக் குடிநீர்.

உணவு நச்சுக்கள்

நாட்பட்ட உடல் வலி மற்றும் வீக்கங்களுக்கு, இஞ்சிக்குடிநீர் சிறந்த தீர்வுதருகிறது. உணவில் உள்ள நச்சு வேதிப்பொருட்கள், சத்து குறைந்த துரித உணவுகள் காரணமாக, உடலில் கெட்ட கொழுப்புகள் சேர்ந்து, வீக்கம் மற்றும் கட்டிகள் ஏற்படும். இதைத் தவிர்க்க, உணவில் கட்டுப்பாடும், மன நிலை மாற்றமும் தேவைப்படும். உணவு நச்சுக்களால் ஒவ்வாமை ஏற்பட்டு, அதனால், உருவாகும் நாட்பட்ட வீக்கத்தை, இஞ்சிக் குடிநீர், குணமாக்குகிறது என்கிறார்கள், ஆய்வாளர்கள்.

உடல் வலி

அத்துடன் தசைகளில் ஏற்படும் வீக்கங்களால், சிலருக்கு தோள்பட்டை வலி ஏற்படக்கூடும். அந்த வலியையும் போக்கும் வலி நிவாரணியாக, இஞ்சிக் குடிநீர் செயல்படுவதாக, சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடலை கிருமிகளிலிருந்து காக்கும், வியாதி எதிர்ப்பு அணுக்களை, அதிகரிக்கும்.

ஞாபக மறதி

இரத்தம் பாதிப்பதால் ஏற்படும், இதய நோய்கள், மூளையின் இரத்த நாள பாதிப்பால் ஏற்படும் பார்க்கின்சன் சின்ட்ரோம், அல்சைமர், ஹன்டிங்க்டன் நோய் போன்ற ஞாபக மறதி நோய்களை ஏற்படுத்தும் பாதிப்புகளில் இருந்து உடலைக் காக்கிறது. ஆன்டி ஆக்சிஜன்ட் எனும், நோயெதிர்ப்பு அணுக்களின் உற்பத்தியை அதிகரித்து, இதய பாதிப்பு மற்றும் மறதி நோய்களை, இஞ்சிக் குடிநீர், குணமாக்குகிறது.

நோயெதிர்ப்பு சக்தி

மனச்சோர்வால், உடலும் சோர்ந்து, அதனால், நோயெதிர்ப்பு அணுக்களை அழிக்கும், நச்சு அமிலம் சுரக்கிறது. கடுமையான மனச்சோர்வுடன், புகை பிடித்தல், மது அருந்துவதன் காரணமாகவும், உடலில் நச்சு அமிலம் சுரக்கிறது.
இந்த நச்சுக்கள், உடலில் பரவி, உடல் நலத்தை கெடுக்க முயல்வதை, இஞ்சிக் குடிநீரில் உள்ள நோயெதிர்ப்பு ஆற்றல் தடுக்கிறது. 
இத்துடன் சில ஆய்வுகள், இஞ்சிக் குடிநீர், சிறுநீரக செயலிழப்பைத் தடுக்கிறது, உடலில் தோன்றும் கட்டிகளை வளரவிடாமல் செய்து, கேன்சர் போன்ற நோய்களைத் தடுக்கிறது.

ரத்த சர்க்கரை

இரத்த சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவைக் குறைக்கும் இஞ்சிக் குடிநீர்.
வாந்தி, குமட்டல் மற்றும் செரிமானமின்மையால் ஏற்படும் புளித்த எப்பத்தைப் போக்கும் இஞ்சி, மக்களின் நம்பிக்கைக்குரிய மருந்தாக, நமது நாட்டில் மட்டுமல்ல, உலக அளவிலும், இருக்கிறது. இஞ்சிக் குடிநீர், நாட்பட்ட சர்க்கரை பாதிப்பு உள்ளவர்களின், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை, சமநிலைப் படுத்துகிறது.
உடலில் தோன்றும் நச்சு கொழுப்பு மற்றும் சிறுநீரக கோளாறால், ஏற்படும் யூரியா உப்பு போன்றவை இரத்தத்தில் பரவி, இரத்த ஓட்டத்தை பாதித்து, இதய நோய்களை ஏற்படுத்தும் பாதிப்புகளைத் தடுத்து, இதய ஆரோக்கியத்தை, சீராக்குகிறது, இஞ்சிக் குடிநீர், என்கின்றன ஆய்வுகள்.

தொப்பையைக் கரைக்கும்

தினமும் மேற்கொள்ளும் நடைப்பயிற்சி, தோப்புக்கரணம் போன்ற உடற்பயிற்சிகளும், சரியான முறையில் அமைந்த சத்தான சாப்பாடும், உடலில் கூடிய கொழுப்பைக் கரைத்து, உடல் எடையை சரியான அளவில் பராமரிப்பதில், துணைசெய்கின்றன. சாப்பிட்டபின் இதமான சூட்டில் பருகும் இஞ்சிக் குடிநீர், உண்ட சாப்பாட்டின் திருப்தியை, நீண்டநேரம் உடலுக்கு கொடுத்து, அடுத்த வேளை உணவை, குறைவாக சாப்பிட வைக்கிறது. மேலும், இரத்தத்தில் சரியான அளவில் உள்ள சர்க்கரை அளவும், உடல் எடையை கட்டுப்படுத்தி வைக்கிறது. மலை போல இருக்கும் எவ்வளவு பெரிய தொப்பையாக இருந்தாலும் தொடர்ந்து இந்த இஞ்சிக்குடிநீர் குடித்து வந்தால் இருந்த இடம் தெரியாமல் கரைத்துவிடும்.

டியொடரண்ட் உபயோகம் என்ன தீங்கு விளைவிக்கும்?  வீடியோ