இந்திய இராணுவத்தில் உயர் பதவி வகிக்கும் 9 பிரபலங்கள்

முதல் உலகக் கோப்பை பெற்றுத் தந்த கபில், கிரிக்கெட் கடவுள் சச்சின், கேப்டன் கூல் தோனி என இந்திய கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி, வெவ்வேறு துறை சார்ந்த இந்திய பிரபலங்கள் சிலரும் கௌரவ இராணுவ உயர் அதிகாரி பதவி வகிக்கின்றன.

இப்படியாக பிரபலமாகி பின்னர் இராணுவ பதவி பெற்றவர்கள் சிலர் எனில். இராணுவத்தில் வேலை செய்து, பிறகு இந்தியாவிற்காக சர்வதேச மேடையில் தோன்றி பதக்கங்கள் வென்று அதன் மூலம் பிரபலமான இராணுவ வீரர்கள் சிலரும் இருக்கிறார்கள்.

நேற்று தோனி தனக்கு இந்திய அரசு வழங்கிய பத்ம பூஷன் விருதை பெற்றுக் கொள்ள சென்றிருந்த போது, தனக்கு அரசு ஏற்கனவே அளித்த இராணுவ அதிகாரி கௌரவத்தை மறவாமல், அதே இராணுவ உடையில் சென்று விருதினை பெற்றுக் கொண்டார்.

மேலும், நேற்றைய தினம் (ஏப்ரல் 2) இந்திய ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் உலகக் கோப்பை வென்ற தினம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஏப்ரல் 2ம் நாள் தோனியின் வாழ்வில் மீண்டும் ஒருமுறை மறக்க முடியாத நாளாக அமைந்தது.

கேப்டன் கூல்!

நேற்று ஜனாதிபதி கைகளில் இருந்து பத்ம பூஷன் விருது வாங்கும் போது, இராணுவ வீரர்களுக்கான அந்த மிடுக்கான நடையில் வந்த போதே தோனி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துவிட்டார். இந்திய இராணுவ படையில் தோனிக்கு கௌரவ லெப்டினென்ட் கர்னல் ரேங் அளிக்கப்பட்டுள்ளது.

 

பாராசூட் படை!

தோனி பாராசூட் படைப்பிரிவில் இந்த பதவி வகிக்கிறார். மற்றவர்களுக்கும் தோனிக்கும் இருக்கும் வித்தியாசம் என்னவெனில், இதை வெறும் கௌரவ பதவியாக மட்டும் கருதாமல், இதில் இருந்து என்னவெல்லாம் கற்றுக் கொள்ள முடியும் என்பதை சீராக செய்துக் கொண்டிருப்பவர் தோனி.

 

இராணுவத்தில்...

ஒருமுறை பேட்டியில், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு தான் இராணுவத்தில் பணியாற்றுவேன் என்றும் கூறியிருந்தார் கேப்டன் கூல் தோனி. இவர் இராணுவத்தில் பாராசூட் பயிற்சிகளிலும் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு வர பயிற்சிக்கு பிறகு, தோனி ஐந்து முறை பாராசூட்டில் இருந்து குதித்தார் என்றும் சில தகவல்கள் மூலம் அறியப்படுகிறது.

 

அபினவ் பிந்திரா!

ஒலிம்பிக்கில் இந்தியாவின் தங்க பதக்கம் கனவை நிஜமாக்கியவர் அபினவ் பிந்த்ரா. தோனிக்கு அடுத்து இவரும் இந்திய இராணுவத்தில் கௌரவ லெப்டினென்ட் கர்னல் பதவி வகிக்கிறார்.

தோனி பாராசூட் பிரிவிலும், அபினவ் சீக்கியரின் டிஏ பட்டாலியன் படையிலும் பதவி வகிக்கிறார்கள்.

 

சச்சின் டெண்டுல்கர்!

கிரிக்கெட் கடவுள் என்று போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர் இந்திய விமான படையில் க்ரூப் கேப்டன் என்ற பதவி வகிக்கிறார். ஏவியேஷன் பின்புலம் இன்றி இந்த பெருமை அடையும் முதல் இந்திய விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆவார்.

ஹின்டானில் நடந்த 83வது விமான படை தின கொண்டாட்டத்தில் கலந்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கபில் தேவ்!

இந்தியாவிற்கு முதல் உலகக் கோப்பை பெற்றுக் கொடுத்த கேப்டன் மாற்றம் சிறந்த ஆல்ரவுண்டர் வீரர் கபில் தேவும் இந்திய இராணுவ படையில் கௌரவ லெப்டினென்ட் கர்னல் பதவி வகிக்கிறார். கபில் தேவுக்கான பதவி வழங்குதல் நிகழ்வுன் போது, TAவின் கூடுதல் இயக்குனர் ஜெனரல், இவரை TAவின் தூதராகவும் நியமித்தார்.

மேலும், கபில் தேவ் இளைஞர் மத்தியில் இராணுவத்தின் மீதான ஈர்ப்பை அதிகரிக்க செய்வார் என்று தாம் நம்புவதாகவும் அறிவித்திருந்தார்.

 

மோகன்லால் விஸ்வநாதன் நாயர்!

தென்னிந்திய சூப்பர்ஸ்டார் நடிகரான மோகன் லாலும் கௌரவ லெப்டினென்ட் கர்னல் பதவி வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிலேயே கௌரவ லெப்டினென்ட் கர்னல் பதவி வகிக்கும் முதலாவதும் மற்றும் ஒரே நடிகர் மோகன்லால் தான்.

 

பயிற்சி!

இவர் இந்த கௌரவ அந்தஸ்தை கடந்த 2009ம் ஆண்டு பெற்றார். ஆரம்பத்தில் இவருக்கான பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. 2010ம் ஆண்டு கான்பூரில் பிராந்திய இராணுவத்தின் 122 காலாட்படை பட்டாலியனில் இவர் பயிற்சி பெற்றார்.

 

சச்சின் பைலட்!

இந்திய யூனியன் அமைச்சரான சச்சின் பைலட்க்கு லெப்டினன்ட் பதவி அளிக்கப்பட்டது. சீக்கியப் படையினரின் டிஏ பட்டாலியனில் இவரை 2012ம் ஆண்டு லெப்டினன்டாக நியமிக்கப்பட்டார். இவர் ராஜாஸ்தான் மாநிலத்தை சேர்ந்த எம்.பி ஆவார்.

 

இராணுவ இரத்தம்!

சச்சின் பைலட்டின் தந்தை இந்திய விமான படையில் பைலட்டாக இருந்தவர். இவரது தாத்தாவும் இராணுவத்தில் என்.சி.ஒவாக இருந்தவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருபுறம் இப்படி பிரபலங்காக இருந்தவர்கள் இராணுவத்தில் சேர, சிலர் இராணுவ வீரர்கள் பின்னாட்களில் பிரபலங்களாகவும் மாறி இருக்கின்றனர்.

 

மில்கா சிங்!

தி ஃப்ளையிங் சிங் என்று அழைக்கப்படும் மில்கா சிங் இந்திய இராணுவ படையில் பணியாற்றி வந்தவர். பின்னாளில் இவர் இந்தியாவுக்காக சர்வதேச ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்றார்.

பாக் மில்கா பாக் என்ற திரைப்படம் இவரது தி ரேஸ் ஆப் மை லைப் என்ற புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படும் ஆகும்.

 

ராஜ்யவர்தன் சிங் ரத்தோர்!

லெப்டினன்ட் கர்னல் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் 2004ல் நடந்த ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டியில் டபிள் ட்ராப் போட்டியில் இந்தியாவிற்காக வெள்ளிப் பதக்கம் வென்று பெருமை சேர்த்தார். அந்நாளில் இருந்து இவர் இந்தியாவில் பெரும் பிரபலமாக மாறினார்.

 

ஒரே நபர்!

1900ல் இருந்து இந்தியாவிற்காக ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஒரே இந்தியர் என்ற பெருமை வகித்தார் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர். இவர் இப்போது இந்தியாவின் விளையாட்டு அமைச்சராகவும் பதவி வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

விஜய் குமார்!

இந்தியாவை சேர்ந்த துப்பாக்கி சுடுதல் வீரரான விஜய் குமார் இந்திய இராணுவத்தில் சேவை செய்து வந்தவர். இவர் 2012ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் பொட்டில் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவு போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இவர் இப்போதும் இந்திய இராணுவ படையில் தனது சேவையை தொடர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

டியொடரண்ட் உபயோகம் என்ன தீங்கு விளைவிக்கும்?  வீடியோ