தர்பூசணிப்பழத்தை இரவு நேரத்தில் சாப்பிடலாமா

வெயில் காலம் துவங்கிவிட்டாலே சில பழங்களின் வரத்து அதிகரித்துவிடும். ரோட்டோரக் கடைகளிலிருந்து எல்லாருடைய வீடுகளிலும் இடம்பெற்றிருக்கூடிய ஒரு பழம் என்று சொன்னால் அது தர்பூசணிப்பழம் தான்.

வெயில் காலத்தில் அதிகம் கிடைக்கக்கூடிய ஓர் பழம் அது. அதில் ஏராளமான நீர்சத்து நிறைந்திருக்கிறது அதனால் அந்தப் பழத்தினை தாரளமாக சாப்பிடலாம். வெயில் காலத்தில் நம் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும், நம் உடலில் நீர்ச் சத்து குறைந்திடாமல் இருக்கவும் இது போன்ற பழங்களை எடுத்துக் கொள்வது அவசியமாகிறது.

பல இடங்களில் தர்பூசணிப்பழம் பற்றிய நன்மைகளையெல்லாம் படித்திருப்பீர்கள், தற்போது சில புதுமையான தகவல்களையும், தர்பூசணிப்பழத்தினால் பின்விளைவுகள் ஏதேனும் ஏற்பட வாய்ப்புள்ளதா என்று தெரிந்து கொள்ளலாம். ஏனென்றால் சிலருக்கு தர்பூசணிப்பழத்தினால் அலர்ஜி ஏற்பட்டிருக்கும் ஆனால் அதனை நாம் கவனிக்காமல் விட்டுவிடுவோம், இதனால் உடல் நல பாதிப்பினை சந்தித்து பெரும் அவதிக்கு உள்ளாக வேண்டி வரலாம்.

தூக்கம் :

இந்த நேரத்தில் தான் தர்பூசணிப்பழத்தினை சாப்பிட வேண்டும் என்று எந்த குறிப்பிட்ட நேரமும் இந்தப்பழத்திற்கு இல்லை. எப்போது வேண்டுமானாலும் நீங்கள் தாரளமாக சாப்பிடலாம். ஆனால் தூங்குவதற்கு முன்னால் தூங்க அரை மணி நேரத்திற்கு முன்னால் சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள். அப்படி சாப்பிடுவதினால் உஙக்ளுக்கு ஏரளமான பின்விளைவுகள் ஏற்படக்கூடும்.

 

செரிமானம் :

தர்பூசணிப்பழம் செரிக்க அதிக நேரம் எடுத்துக் கொள்ளும், இதனை நீங்கள் தூங்குவதற்கு சில நிமிடங்கள் முன்பாக எடுத்துக் கொள்வதால் செரிமானம் இன்னும் தாமதமாகும். ஏற்கனவே இரவு உணவு சாப்பிட்டிருப்பீர்கள் அதன் பிறகு இந்த பழமும் சாப்பிட்டு விடுவதால் முதலில் சாப்பிட்ட உணவும் செரிமானம் அடைய தாமதம் ஏற்படும்.

மறுநாள் வயிற்றுவலி, அல்லது மலச்சிக்கல் தொல்லை ஏற்படலாம்.

 

இரவு உணவு :

பொதுவாக பகல் நேரத்தை விட இரவு நேரத்தில் செரிமானம் மிக தாமதாமகத்தான் நடைபெறும் அதனால் தான் இரவில் ஹெவியான உணவுகளை எடுக்காதீர்கள். எளிதாக ஜீரணம் ஆகக்கூடிய உணவுப் பொருட்களை எடுத்துக் கொண்டால் போதுமானது என்று கூறப்படுகிறது.

பெரும்பாலும் ஆசிட் நிறைந்த உணவுகள், சர்க்கரை நிறைந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. தர்பூசணிப்பழத்தில் இவை இரண்டுமே அதிகம் இருக்கின்றன.

 

சர்க்கரை :

தர்பூசணிப்பழத்தில் அதிகளவு தண்ணீர் சத்து மற்றும் சர்க்கரை அதிகமிருக்கிறது. சர்க்கரை அதிகம் கொண்ட உணவுப்பொருளினை சாப்பிடுவதால் ரத்தத்தில் குலுக்கோஸ் அளவு அதிகரிக்கும், இதனால் மூளை சுறுசுறுப்படையும்.

மூளை அமைதியாகி தூங்க வேண்டிய நேரத்தில் புதுப்புது சிந்தனைகள் தோன்றினால் எங்கிருந்து தூக்கம் வரும்? அதே போல இதில் தண்ணீர் சத்து அதிகமிருப்பதால் இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். இதனால் சீரான தூக்கம் கெட்டுப் போகும்.

 

பழங்கள் :

பொதுவாக பழங்களை இரவு நேரத்தில் சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள். தர்பூசணிப்பழத்தினை காலை மற்றும் மதியம் ஆகிய பகல்வேலைகளில் சாப்பிடுவது மிகவும் நல்லது. தர்பூசணிப்பழத்தினை கட் செய்து ஃபிர்ஜில் வைப்பது அல்லது நீண்ட நேரம் கழித்து சாப்பிடுவது ஆகியவற்றை தவிர்த்திடுங்கள்.

தர்பூசணிப்பழம் ஃபிரஷ்ஷாக சாப்பிடுவது தான் நல்லது. தொடர்ந்து ஒரே நேரத்தில் அதிகப்படியாகவும் தர்பூசணிப்பழத்தினை சாப்பிடக்கூடாது அப்படிச் சாப்பிடுவதினால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.


குடல் :

தர்பூசணிப்பழத்தில் தண்ணீர் சத்தை தாண்டி வேறு சில சத்துக்களும் நிறைந்திருக்கின்றன. அதில் லைகோபென் அதிகம். இதனை அதிகம் எடுக்கும் போது நம் உடலிலும் லைகோபென் அதிகம் சேர்ந்திடும். இதனால் வயிற்றுப் போக்கு, மலச்சிக்கல், செரிமானக்கோளாறு, வாந்தி ஆகியவை ஏற்படுத்தும். வயதானவர்களுக்கு இதன் பக்கவிளைவுகள் சீக்கிரத்திலேயே தெரியும்.

 

இதயம் :

தர்பூசணிப்பழத்தில் அதிகளவு பொட்டாசியம் இருக்கிறது. பொட்டாசியம் அதிகளவு உள்ள உணவுகளை சாப்பிடுவதால் இது உங்கள் இதயத்தினை பாதிக்கும். பல்ஸ் குறையும், இதயத்துடிப்பு சீரற்றதாகும். ஏற்கனவே இதயம் பலவீனமாக இருப்பவர்களுக்கு இதன் பலன் தீவிரமாக இருக்கும் என்பதால் அவர்கள் இரவு நேரத்தில் சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

 

ரத்த அழுத்தம் :

அதிகப்படியான தர்பூசணிப்பழத்தினை சாப்பிடுவதால் உங்களது ரத்த அழுத்தம் குறைந்திடும். ரத்த அழுத்தம் பிரச்சனை இருப்பவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது. அதே போல சர்க்கரை நோயாளிகள் கூட இதனை அதிகமாக சாப்பிட வேண்டாம்.

 

அலர்ஜி :

அதிகப்படியான தர்பூசணிப் பழம் சாப்பிடுவதால் சிலருக்கு இது அலர்ஜியைக் கூட ஏற்படுத்தலாம். சருமத்தில் ரேசஸ் உண்டாவது, முகத்தில் வீக்கம், சிலருக்கு கண்கள் மட்டும் வீங்குவது ஆகியவை ஏற்படும். இவற்றையெல்லாம் நாம் தர்பூசணிப்பழத்தினால் ஏற்பட்டிருக்கிறது என்று நினைத்துக் கூட பார்க்க மாட்டோம். பெரும்பாலும் கண் வீங்கினாலே தூக்கம் இல்லை அல்லது அதீத தூக்கம் என்று நினைத்து விட்டு விடுகிறோம்.

யாருக்கெல்லாம் கேரட், வெள்ளரி அலர்ஜி இருக்கிறதோ அவர்களுக்கு தர்பூசணிப்பழம் அலர்ஜி ஏற்பட அதிக வாய்ப்புண்டு.

 

கர்ப்பம் :

கர்ப்பிணிப்பெண்கள் அதிகப்படியான தர்பூசணிப்பழம் சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள் கர்ப்பிணிப் பெண்களுக்கு சர்க்கரை நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால் தவிர்ப்பதே நல்லது. இதில் சோர்பிடோல் என்கிற ஒரு வகைச் சர்க்கரை இருக்கிறது. இது சிலரது உடலுக்கு ஏற்கும் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். இதனால் வயிற்றில் கேஸ் உருவாவது, வயிற்றுப் போக்கு ஆகியவை ஏற்படும்.

 

சோர்வு :

அதிகப்படியான தர்பூசணிப்பழம் சாப்பிடுவதால் அது நம் உடலில் தண்ணீர் சத்தின் அளவை அதிகரிக்கும். உடலில் சேருகிற தண்ணீரை குறிப்பிட்ட நேரத்தில் நாம் வெளியேற்ற வேண்டும். அப்படி வெளியேறவில்லை எனில் அது நம் ரத்தத்தின் அளவினை அதிகரிக்கும். இது ரத்த ஓட்டத்தை பாதித்து உடற்சோர்வினை ஏற்படுத்தக்கூடும்.

 

டியொடரண்ட் உபயோகம் என்ன தீங்கு விளைவிக்கும்?  வீடியோ