இன்னைக்கு உங்களுக்கு இதுதாங்க நடக்கும் உங்க ராசி அப்படி தான் சொல்லுது

நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள்.

சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும் தினசரி அதை பார்க்காமலும் இருக்க முடியாது.

மேஷம்

தொழிலில் இழந்த பொருள்களை மீட்பதற்கான சூழல் உண்டாகும். அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்க்கப்பட்ட உதவிகள் கிடைக்கும். பணிபுரியும் இடங்களில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். புனித யாத்திரைகள் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை - மேற்கு
அதிர்ஷ்ட எண் - 1
அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு நிறம்

ரிஷபம்

தாய்வழி உறவினர்களுடன் நிதானத்துடன் நடந்து கொள்ளவும். கடல்வழி பயணங்களால் லாபம் உண்டாகும். மகான்களின் தரிசனம் கிடைக்கும். ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு எண்ணிய முடிவு கிடைக்க காலதாமதமாகும். நண்பர்களிடம் வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட திசை - வடக்கு
அதிர்ஷ்ட எண் - 5
அதிர்ஷ்ட நிறம் - இளம்பச்சை

மிதுனம்

தைரியம் மற்றும் நிதானத்துடன் மனதில் எண்ணிய எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். செய்யும் வேலைகளில் கவனமாக இருக்கவும். பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். விலையுயர்ந்த பொருள்களை கையாளும்போது எச்சரிக்கை வேண்டும். எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை - கிழக்கு
அதிர்ஷ்ட எண் - 3
அதிர்ஷ்ட நிறம் - இளம் மஞ்சள்

கடகம்

பேச்சுக்களால் லாபம் அடைவீர்கள். புதிய உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே உறவு மேம்படும். சம வயதினரிடம் அனுசரித்துச் செல்லவும். மனைவியிடம் வாக்குவாதத்தைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட திசை - தெற்கு
அதிர்ஷ்ட எண் - 7
அதிர்ஷ்ட நிறம் - பல வண்ண நிறங்கள்

சிம்மம்

புதிய சிந்தனைகள் மேலோங்கும். போட்டிகளில் ஈடுபடும்போது கவனம் தேவை. எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். கூட்டாளிகளிடம் தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. எதிர்பார்த்த உதவிகளால் லாபம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை - மேற்கு
அதிர்ஷ்ட எண் - 8
அதிர்ஷ்ட நிறம் - நீல நிறம்

கன்னி

தொழிலில் சாதகமான சூழல் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் அமைதியைக் கடைபிடிக்கவும். மனைகளால் சுப விரயம் உண்டாகும். பிள்ளைகளிடம் அனுசரித்துச் செல்லவும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை - வடக்கு
அதிர்ஷ்ட எண் - 2
அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை நிறம்

துலாம்

கடல்வழி பயணங்களால் அனுகூலமான செய்திகள் கிடைக்கும். கால்நடைகளால் லாபம் உண்டாகும். தொழில் சார்ந்த முயற்சிகளால் தனலாபம் உண்டாகும். நண்பர்களின் மூலம் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். வழக்குகளில் எண்ணிய எண்ணம் ஈடேறும்.

அதிர்ஷ்ட திசை - கிழக்கு
அதிர்ஷ்ட எண் - 9
அதிர்ஷ்ட நிறம் - அடர் சிவப்பு

விருச்சிகம்

கடிதத்தின் மூலம் சாதகமான செய்திகள் கிடைக்கும். இறைவழிபாட்டால் மகிழ்ச்சி உண்டாகும். வாகனப் பயணங்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். மனக்கவலைகள் குறைவதற்கான சூழல் அமையும். பதவி உயர்வால் மகிழ்ச்சி அடைவீர்கள். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை - தெற்கு
அதிர்ஷ்ட எண் - 6
அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை நிறம்