தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட நரம்புகள் பலம் பெறும்

செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் எனும் அமிலம் காணப்படுகிறது. செவ்வாழையில் உயர்தர புரதச்சத்து உள்ளது.இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் விட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது.இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது.இதில் உள்ள பீட்டா கரோட்டீன் எனும் அமிலம் கண்நோய்களை குணமாக்கும்.

நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வர வேண்டும்.தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட நரம்புகள் பலம் பெறும்.ஆண்தன்மை சீரடையும். குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு தேன் அருந்த வேண்டும்.தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தெனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

எடையைக் குறைக்க
பொதுவாக எடையைக் குறைக்க நினைப்போர் கலோரிகள் அதிகம் நிறைந்த உணவுப் பொருட்களை எடுக்கக்கூடாது. செவ்வாழையில் மற்ற வாழைப்பழங்களை விட கலோரிகள் மிகவும் குறைவு. எனவே எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் ஒரு செவ்வாழையை காலையில் உட்கொண்டு வந்தால், பசி நீண்ட நேரம் எடுக்காமல் இருக்கும்.

இரத்த அளவை அதிகரிக்கும்
உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே உடலில் இரத்தணுக்களின் அளவை சீராக பராமரிக்க வேண்டியது அவசியம். அதற்கு செவ்வாழை மிகவும் உதவியாக இருக்கும். ஏனெனில் இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இரத்தணுக்களின் அளவை சீராகப் பராமரிக்கும்.

உடலின் ஆற்றல் அதிகரிக்கும்
செவ்வாழை உடலுக்கு ஆற்றலை வழங்கி உடலின் சுறுசுறுப்பை அதிகரிக்கும். எப்படியெனில் செவ்வாழையில் உள்ள இயற்கை சர்க்கரை ஆற்றலாக மாற்றப்பட்டு, சோர்வைத் தடுத்து, உடலை புத்துணர்ச்சியுடனும் சுறுசுறுப்புடனும் வைத்துக் கொள்கிறது. எனவே நீங்கள் எப்போதும் சுறுசுறுப்புடன் இருக்க விரும்பினால் தினம் ஒரு செவ்வாழையை சாப்பிடுங்கள்.

நெஞ்செரிச்சல்
நெஞ்செரிச்சலால் கஷ்டப்படுபவர்கள் தினமும் செவ்வாழையை உட்கொண்டு வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும். எப்படியெனில் இதில் இயற்கையாக ஆன்டாசிட் தன்மை உள்ளது. இதனால் இப்பழத்தை தினமும் உட்கொண்டு வர நெஞ்செரிச்சல் பிரச்சனை நீங்கும்