இந்த 6ல ஒண்ணு செலக்ட் பண்ணுங்க உங்கள பர்சனாலிட்டி பத்தி தெரிஞ்சுக்குங்க

ஒருவரின் எண்ணங்கள் குணாதிசயங்களுக்கு ஏற்ப தான் அவரது விருப்பமும் இருக்கும். நீங்கள் ஒரு துணி கடைக்கு சென்றால் சில வர்ணங்களில், சில டிசைன்களில் தான் ஆடை தேர்வு செய்வீர்கள். உங்களுக்கு பிடிக்காத வர்ணம், டிசைன் மோசமானது என்று கூறிட முடியாது.

உங்கள் விருப்பத்திற்கு, உங்கள் மனதுக்கு மட்டுமே அது பிடிக்காமல் போகலாம். நீங்கள் தேர்வு செய்யாத ஒரு கலர், டிசைன் வேறு ஒருவர் விரும்பு வாங்கி உடுத்தலாம் அல்லவா? இதை நீங்கள் மறுக்க முடியாது.

இதை அப்படியே ரிவர்ஸ் செய்து பாருங்கள். ஒருவருக்கு விருப்பமான வர்ணம் அல்லது டிசைன் வைத்து அவர் மனது எப்படி இருக்கும் என்றும் நாம் அறிய வாய்ப்புகள் உண்டு. ஆனால், அதற்கு உளவியல் ரீதியாக பெரும் ஆய்வு செய்ய வேண்டும்.

அப்படியாக, நீங்கள் தேர்வு செய்யும் சில வர்ணங்கள் கலந்த டிசைன் மூலமாக... அதன் பின்னணியில் புதைந்திருக்கும் உங்கள் விருப்பத்தின் மூலம்... உங்களை குறித்த சில விஷயங்களும் அறிந்து கொள்ள முடியும்.

இது அனைவருக்கும் நூறு சதவிதம் பொருந்தும் என்று கூற முடியாது. ஆனால், ஏறத்தாழ பொருந்த வாய்ப்புகள் உண்டு...

தென்றல்...

இதமான தட்பவெப்பம் விரும்பும் நபராக நீங்கள் இருப்பீர்கள். பீச் காற்றில் நடப்பது உங்களுக்கு பிடித்தமான செயலாக இருக்கலாம். அமைதியான சூழல் அமைத்துக் கொள்வது எப்படி? மன அழுத்தம் குறைத்து கொண்டு நிம்மதியாக இருப்பது எப்படி என்பதை உங்களிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும்.

உங்களுடன் நேரம் செலவழிக்க உங்கள் நண்பர்கள் விரும்புவார்கள். உங்கள் இதமான குணம், பேச்சு அனைவரையும் ஈர்க்கும்.

 

இரக்கமுள்ள...

மனிதர்களின் உணர்வுகளோடு ஒன்றிப் போகும் தன்மை கொண்டிருப்பீர்கள். உங்களிடம் இரக்க குணம், ஆன்மீக எண்ணம் அதிகம் இருக்கும். இறைச்சி உணவுகளை காட்டிலும், சைவ உணவுகளை நீங்கள் அதிகம் விரும்புவீர்கள். சூடான தேநீர், நல்ல புத்தகம் உங்களுக்கு பிடித்தமான, நெருக்கமான ஒன்று.

சிலருக்கு நாய் பிடிக்கும், சிலருக்கு பூனை பிடிக்கும். நாய் பிடிப்பவர்களுக்கு பூனை பிடிக்காது, பூனை பிடிப்பவர்களுக்கு நாய் பிடிக்காது. ஆனால், உங்களுக்கு இரண்டுமே பிடிக்கும். உங்கள் குணங்களும் அப்படியாக தான் இருக்கும்.

 

ஆக்ரோஷமான...

நீங்கள் கூலகா, அமைதியாக, அனைத்து விதமான கருத்துக்களையும் உள்வாங்கிக் கொள்ளும் நபராக இருப்பீர்கள். உங்களை சுற்றி இருக்கும் நபர்களில் நீங்களே கொஞ்சம் கடுமையான நபராக இருப்பீர்கள்.

உங்களிடம் ஸ்டைல் குறித்த அதிக ஞானம் இருக்கும். உடைகளில் மட்டுமின்றி வீட்டையும் கூட அழகாக வைத்துக் கொள்ள, பராமரிக்க முனைவீர்கள். நிச்சயம் நீங்கள் ஏதேனும் செல்ல பிராணி வளர்த்து வருவீர்கள். அல்லது வளர்க்க வேண்டும் என்ற பெரிய ஆவல் இருக்கும்.

 

கேளிக்கை...

பார்ட்டி கொண்டாடும் நபர். உங்கள் வாழ்க்கையை ரசித்து வாழ விரும்புவீர்கள். கோடு போட்டு வாழும் வாழ்க்கை பிடிக்காது. அந்தந்த நொடி, தருணத்திற்கு ஏற்ப ஸ்பாட்டில் அட்டகாசமாக பேசும் தன்மை, கவுண்டர் கொடுப்பது போன்றவற்றை உங்களை சுற்றி இருக்கும் நபர்கள் விரும்புவார்கள். இரவு நேரங்களில் வெளியே உலாவ பிடிக்கும். புதிய மக்களுடன் பழகுவதில் சில சமயம் தயக்கம் உண்டாகலாம்.

 

பகுத்தறிவு...

பகுத்தறிவு நிறைந்த நபராக இருக்கலாம். அனைவருக்கும் மரியாதை அளித்து பழகுவீர்கள். மற்றவருடைய கருத்துக்களுக்கு மதிப்பு அளிப்பீர்கள். ஏதேனும் பிரச்சனை என்றால் உங்களிடம் தீர்வுக் கேட்டு சிலர் வருவார்கள். உங்கள் வார்த்தை, போதனை, சிந்தனை மற்றவரை ஈர்க்கும்.

சில சமயம் வருத்தங்கள் உங்களை மனதளவில் சோர்வுற செய்யும். ஆனால், அச்சம் காரணத்தால் நீங்கள் சோர்வடைய மாட்டீர்கள்.

 

ஆழமான...

ஆற்றை போல வேகமாக ஓடும் குணம் கொண்டிருப்பீர்கள். அரசியல் மற்றும் சமூகத்தின் மீது வலிமையான உணர்வுகள் கொண்டிருக்க வாய்ப்புகள் உண்டு. உங்களுக்கு மெல்லிசையை காட்டிலும் பறையிசை போன்ற சப்தமான இசை மீது ஆர்வம், ஈர்ப்பு அதிகம் இருக்கும். நண்பர்களை உங்கள் உறவினர் போல கருதுவீர்கள். நேர்மை, வலிமை, நெகிழ்ச்சி அதிகம் காணப்படும் நபராக இருப்பீர்கள்.