வாஸ்துப்படி வீட்டுல எந்த இடத்துல பணத்தை வெச்சா செல்வம் சேரும் தெரியுமா

வடக்கு திசை சிறந்தது

வடக்கு திசை குபேர திசையாக கருதப்படுகிறது. வாஸ்துப்படி, வீட்டின் வடக்கு பகுதியில் பணப் பெட்டி, நகை அலமாரி போன்றவற்றை வைப்பது நல்லது. இப்படி இந்த திசையில் வைக்கும் போது, அதிர்ஷ்டம் கொட்டி, வீட்டில் செல்வ வளம் இரட்டிப்பாகும்.

தெற்கு நோக்கி வைப்பது நல்லதல்ல

பணத்தை வைக்கும் பெட்டியானது வடக்கு பகுதியில் வடக்கு திசையை நோக்கியவாறு இருக்க வேண்டுமே தவிர, தெற்கு திசையை நோக்கியவாறு இருக்கக்கூடாது. செல்வத்தின் தெய்வமான தேவி லட்சுமி தெற்கு திசையில் இருந்து வடக்கு திசையை நோக்கி வந்து அமர்வார் என்று பலர் நம்புகின்றனர். ஆகவே வடக்கு திசையே அதிர்ஷ்டம் மற்றும் செல்வத்தை வழங்கும் திசையாக வாஸ்து கூறுகிறது.

கிழக்கு திசையிலும் பணப் பெட்டியை வைக்கலாம்

சில காரணங்களால் சிலரால் பணப் பெட்டி அல்லது நகை அலமாரியை வீட்டின் வடக்கு திசையில் வைக்க முடியவில்லையா? அப்படியானால் அதற்கு மாற்றாக கிழக்கு திசையில் வைக்கலாம். இந்த திசையிலும் செல்வம் பெருகும். சொல்லப்போனால், பல தொழிலதிபர்களின் வீடுகளில் பணப்பெட்டி கிழக்கு திசையில் தான் உள்ளது. அதேப் போல் ஒரு கடையில் பணத்தை வாங்குபவர், வடமேற்கு திசையை நோக்கி அமர்ந்திருந்தால், பணம் வைக்கும் பெட்டியானது அவரது இடது பக்கத்தில் தான் இருப்பதே நல்லது. அதுவே கிழக்கு திசையை நோக்கி அமர்ந்திருந்தார், பணப்பெட்டியை வலது பக்கத்தில் வைப்பதே உகந்தது.

அறையின் நான்கு மூலைகளிலும் பணப் பெட்டியை வைக்காதீர்கள்

வீட்டில் பணத்தை எப்போதும் அறையின் நான்கு மூலைகளிலும் வைக்காதீர்கள். குறிப்பாக வடகிழக்கு, தென்கிழக்கு அல்லது தென்மேற்கு மூலைகளில் பணப்பெட்டியை வைக்கக்கூடாது. வடக்கு திசையே மிகவும் சிறப்பான மற்றும் பாதுகாப்பான திசை. தெற்கு பகுதியையும் முடிந்த அளவு தவிர்த்திடுங்கள். இதனால் துரதிர்ஷ்டம் வருவதோடு, கையில் உள்ள செல்வம் நீர் போன்று கையில் இருந்து ஓடும்.

பூஜை அறையில் பணப்பெட்டியை வைக்காதீர்கள்

பூஜை அறையில் பணப்பெட்டியை வைக்கக்கூடாது என்பதற்கான சரியான காரணம் தெரியவில்லை. இருந்தாலும் பூஜை அறை பணப்பெட்டியை வைக்கக்கூடாது. வாஸ்துப்படி பூஜை அறையில் பணப்பெட்டியை வைப்பது சிறந்தது அல்ல. ஆகவே இதை மட்டும் தவறாமல் பின்பற்றுங்கள்.

வாசற்படியில் இருந்து பணம் வைக்கும் பெட்டி கண்களுக்கு தெரியக்கூடாது

பணம் வைக்கும் பெட்டி எப்போதும் வாசற்படியில் இருந்து பார்க்கும் படி இருக்கக்கூடாது. அப்படி இருந்தால், அது வீட்டில் உள்ள செல்வத்தை கையில் இருந்து நழுவச் செய்யும். அதேப் போல் வாஸ்துப்பட, பணப்பெட்டியானது குளியலறையைப் பார்த்தவாறோ, கழிவறையைப் பார்த்தவாறோ, சமையலறை, ஸ்டோர் ரூம், அல்லது மாடிப் படிக்கட்டுக்களைப் பார்த்தவாறோ இருக்கக்டது. இதுவும் வீட்டில் செல்வம் பெருகுவதைத் தடுக்கும்.

வேறுசில டிப்ஸ்...

* பணம் வைக்கும் இடம் எப்போதுமே தூசிகளின்றி சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம். எனவே தினந்தோறும் பணம் வைக்கும் பெட்டியை சுத்தம் செய்யும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

* பணப்பெட்டி அல்லது பண அலமாரியில் வடக்கு பக்கத்தில் லட்சுமி கடவுளின் போட்டோவை வைத்து, அவர் முன் ஒரு வெள்ளி நாணயத்தை வையுங்கள்.

* பணப் பெட்டியில் பைணம் வைக்கும் போது, அதில் பூச்சிகளோ அல்லது வேறு ஏதேனும் பத்திரங்களோ இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.