பல நாடுகளில் ஆட்சிமொழியே தமிழ் தான் தமிழ்நாட்டில் தமிழுக்கு கீழே தான் பல மொழிகள்.

தமிழ்நாட்டை தவிர தமிழ் எல்லா இடங்களிலும் நன்றாகவே வளர்ந்து வருகிறது..

தமிழகத்தில் உள்ள கடைகளில் தமிழில் பெயர் பலகை வைக்க நம் வணிகர்கள் தயங்குகின்றனர், இது தான் நாம் தாய் மொழிக்கு தமிழகத்தில் தரும் கௌரவம்.

ஆனால் சிங்கப்பூரில் உள்ள கடைகளில் தமிழ் மொழியில் பேச ஊக்கிவிக்க படுகின்றனர்..இங்குள்ள கடைக்காரர்களும் இது போன்று மொழி பற்றாளர்களாக இருக்க வேண்டும்

தமிழின் அருமை வெளிநாட்டில் தெரியக்காரணம் உள்ளூரில் வசிக்கும் போது தெரியாது தாய்த்தமிழ் நமக்கு கற்றுக்கொடுத்த பண்பாடு கலாச்சாரம் ஒழுக்கம் இன்னும் பல்வேறு வகையான பயன்களை நமக்கு வாரி வழங்கிக்கொண்டே இருக்கும், 

இப்படி நமது தமிழுக்கு வெளிநாட்டில் உள்ள வரவேற்பு இங்கு இருக்கிறதா என்றால் இல்லை என்றே கூற வேண்டும்..

ஏனெனில் சமீபத்தில் கூட, சென்னை ஏர்போர்டில் அறிவிப்பு பலகையில் விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடு தொடர்பாக வெளியிடப்படும் தகவல் பலகையில் இருந்து தமிழ் மொழி நீக்கப்பட்டுள்ளது.

இதுவரை தமிழ், ஆங்கிலம், இந்தி என்று 3 மொழிகளில் இதுவரை அறிவிப்புகள் வந்து கொண்டிருந்தன என்பது குறிபிடத்தக்கது..

முதலில் சாலையின் மையில் கல்லில் இருந்து தமிழை நீக்கிவிட்டு ஹிந்தியில் எழுதி ஹிந்தி திணிப்பை ஏற்படுத்தும் முயற்சி நடந்தது ,ஆனால் அது தோல்வியில் முடிந்தது

தற்போது சென்னை ஏர்போர்டில் அறிவிப்பு பலகையிலிருந்து தமிழை நீக்கியுள்ளனர்.

தமிழ் மொழியை, தமிழ் நாட்டிலிருந்தே அழிக்கும் செயல் நடைப்பெற்று வருவது நன்றாகவே அப்பட்டமாக தெரிகிறது, 

தமிழ்நாட்டை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியா, மொரிஷியஸ் போன்ற நாடுகளில் தமிழ் ஆட்சி மொழியாக அமர்ந்து ஆட்சி ஆசனத்தை அழகுபடுத்தி கொண்டு இருக்கிறது..