நம்மில் எத்துனை தந்தைமார்கள் இதனை உங்கள் குழந்தைக்கு கற்று தருகிறீர்கள்

7ஆம் நூற்றாண்டில் பல்லவ நாட்டின் முக்கிய துறைமுகமாக விளங்கிய நகரம் தான் மாமல்லபுரம். இந்நகரம் மகாபலிபுரம்  என்றும் வழங்கப்படுகிறது.

மாமல்லபுரத்தில் உள்ள கட்டடங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்: குடைவரைக் கோயில்கள் அல்லது மண்டபங்கள்; ஒற்றைக்கல் கோயில்கள் அல்லது இரதங்கள் மற்றும் கட்டுமானக் கோயில்கள். இவைதவிர, புடைப்புச் சிற்பத் தொகுதிகள் வெளிப்புறத்திலும் கோயில்களின் உள்ளும் காணப்படுகின்றன.

மாமல்லபுரத்தின் சிற்பங்கள் மிக நளினமாகவும் இயல்பானவையாகவும் இருப்பதாலும் கடற்கரைக் கோயில்கள், இரதங்கள், புடைப்புச் சிற்பத் தொகுதிகள் போன்ற சிறப்பு வாய்ந்த பல இருப்பதாலும், மாமல்லபுர நினைவுச்-சின்னங்களை உலகப் பண்பாட்டுச் சின்னம் என்று 1984-ல் யுனெஸ்கோ அறிவித்தது.

பெரிய சிற்பங்களை அமைப்பது சிற்பிகளுக்கு எளிதானது என்று பல சிற்ப வல்லுனர்கள் கூறுகின்றனர், ஆனால், சிற்பத்தின் தன்மையும், அதன் பொலிவு, சிலையின் முகபாகவங்கள் மெல்லிய, நுணுக்கமான வேலைப்பாடுகள், கண்ணிமைகள், இவற்றை எல்லாம் இரண்டடி அகலம் கொண்ட தூண்களில் அமைப்பது சாதாரணமல்ல.

இவை அத்தனையும்  தன்னகத்தே கொண்ட சிற்பங்கள் திருஆவினன்குடி கோயிலில் அமைந்திருப்பது காண்போரை வியக்க வைக்கிறது.

நாம் தற்போதெல்லாம் கோவிலுக்கு சென்றால் சாமியை மட்டும் வணங்கிவிட்டு வந்துவிடுகிறோம், யாரும் கோவிலின் கட்டுமானத்தையோ அதன் சிற்பங்களையோ ரசிப்பதில்லை..

சிற்பத்தை உருவாக்குவதை விட அதை ரசிக்க ரசனை உள்ள மக்கள் தேவை, ஆனால் தற்போதைய காலத்தில் இதனை எல்லாம் ரசிக்க யாருக்கும் நேரமில்லை..

இக்கால பெற்றோர்கள் தங்களது குழந்தைக்கு நமது பாரம்பரியத்தை ரசிப்பது எப்படி என்பது பற்றியும் சொல்லிகொடுத்தால், நமது மரபு சின்னங்களின் புகழ் தலைமுறை தலைமுறையாக  தொடரும்..