இனி மேலாவது டூத்பேஸ்ட் வாங்கும் போது இந்த விஷயங்களை கவனமா பாருங்க

உப்பையும் கரியையும் வேப்பங்குச்சியையும் வைத்து பல் துலக்கிக் கொண்டிருந்த நமக்கு டூத் பேஸ்ட்டை அறிமுகப்படுத்திவிட்டு, தற்போது தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரங்களில் உங்க டூத் பேஸ்ட்ல உப்பு இருக்கான்னு கேட்குறதயும் நாம் பார்க்கிறோம்.

அதேசமயம் நாம் மீண்டும் உப்பு, கரியை நோக்கிச் செல்ல முடியாது என்றாலும் கூட, நம்முடைய டூத் பேஸ்ட்டில் நம்முடைய பற்களுக்குத் தேவையான ஃபுளோரைடு இருக்கிறதா என்று பார்த்து வாங்குவது மிக அவசியம்.

அது நம்முடைய பற்களையும் எலும்புகளையும் வலுவுடையதாக மாற்றுகிறது.நாம் குடிக்கும் தண்ணீருக்குள்ளே ஃபுளோரைடு இருக்கிறது என்றாலும் கூட, அதன் அளவு நாம் வசிக்கும் இடத்தில் உள்ள நீருக்கு ஏற்றபடி மாறும்.

அதனால் ஃபுளோரைடு இருக்கும் டூத் பேஸ்ட்கள் பயன்படுத்துவது சிறந்தது.ஃபுளோரைடு பற்களில் குழிகள் விழாமல் பாதுகாக்கும். பற்களில் கறைகள் படிவதைத் தடுக்கும்.1970 களுக்குப் பின் பற்பசைகளில் ஃபுளோரைடு கலந்து பயன்படுத்தப்பட்டது.

அதில் இன்னொரு முக்கியமான விஷயம், ஃபுளோரைடு டூத்பேஸ்ட் பயன்படுத்தும் போது, அதை விழுங்கக் கூடாது. வெளியில் துப்பிவிடுவது நல்லது.

அதேசமயம் குழந்தைகளுக்கு 6 வயது வரை ஃபுளோரைடு உள்ள டூத் பேஸ்ட்டை தவிர்கு்கலாம். ஏனெனில் குழந்தைகள் தெரியாமல் விழுங்கிவிடும். சுவைத்து சாப்பிட ஆரம்பித்துவிடும்.

மிகக் குறைந்த அளவு பேஸ்ட்டையே பயன்படுத்த வேண்டும்.டூத் பேஸ்ட் வாங்கும் போது, அதன் அட்டை பெட்டியிலும் டியூபிலும் foaming fluorited toothpaste என்று எழுதப்பட்டிருப்பதை பார்த்து வாங்க வேண்டும்.அதோடு மேலும் contains 1000ppm of available fluoride என்றும் எழுதப்பட்டிருக்கும்