கேரளா பொண்ணுக சிரிக்கறத விட தமிழ் பொண்ணுக மொரைக்கறது தான் அழகே

தற்போது சமூக வலைத்தளவாசிகள் கொண்டாடி தீர்க்கும் அளவிற்கு இணையத்தில் வைரலாக வருகிறார் கேரள நடிகை பிரியா. அதனையும் தாண்டி ஒரு பதிவு சக்கப்போடு போட்டுக்கொண்டு வருகிறது இந்த இரண்டு நாட்களாக.

கேரள பெண்களுக்கும் தமிழக இளைஞர்களுக்கும் அப்படி என்னதான் பொருத்தமோ தெரியவில்லை. எல்லா அசைவுகளிலும் சரிந்து விடுகின்றனர்.

ஓவியா, நயன்தாரா, ஜிமிக்கி கம்மால் என்று வந்து தற்போது கேரளாவை சேர்ந்த நடிகை ஒருவரின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

கேரளாவில் விரைவில் வெளிவரவுள்ளது  ‘ஒரு அடார் லவ்’  திரைப்படம். இதில் ‘மாணிக்ய மலர்யா பூவி’ என்கிற பாடல் இடம்பெற்றுள்ளது.

இப்பாடலுக்கு அப்படத்தில் நடித்துள்ள பிரியா பிரகாஷ் வாரியர் புருவங்களை உயர்த்தி காட்டி அழகான பாவனையை வெளிப்படுத்தியுள்ளார்.

இதனைத்தான் தற்போது சமூக வலைத்தளங்களில் இளைஞர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

இந்த பிரியா பெண்ணை வைத்து வாரியர்ஸை வைத்து எண்ணற்ற மீம்ஸ்களும் பறக்கின்றன.

இந்த நிலையில் தமிழ் பெண்களை இதன் மூலமாக மட்டம் தட்டி வந்தனர். அதற்கு பதிலடி தரும் வகையில் பிரியாவின் போஸ்ட்டுக்கு இணையாக அதுவும் தற்போது வைரலாகி வருகிறது. கேரள பெண்கள் சிரிப்பதை விட தமிழ் பெண்கள் மொரைப்பதில் இருக்கும் அழகே தனி என்ற ஹாஸ்டாக் உடன் பிரபலமாகி வருகிறது.