பிப்வரி 14 - இந்த நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்

உலகம் முழுவதிலும் இன்றைக்கு காதலர் தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு உங்களுக்கு எக்கச்சக்கமான ப்ளான் எல்லாம் இருக்கும். அவை எப்படி நிகழ்த்தலாம், என தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

ஒவ்வொரு நாளையும் புதிதாக துவங்கும் நமக்கு இன்றைய தினம் எப்படியிருக்கும் என்ற சந்தேகம் இருக்கத்தான் செய்யும். அதுவும் பல நாட்கள் காத்திருந்த உணர்வினை வெளிப்படுத்த இந்த தினம் ஒ.கே வா என உங்கள் ராசி என்ன சொல்கிறது என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்

உங்களுடைய வியாபாரத்தில் இன்றைக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். தாய் வழி உறவுகளுக்கு உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். திடீர் பதட்டம் ஆகியவை ஏற்பட்டு பின் சரியாகும். புதிய இடங்களுக்கு பயணம் மேற்கொள்வீர்கள்.

அஸ்வினி நட்சத்திரம் கொண்டவர்களுக்கு இன்றைக்கு மிகவும் மகிழ்ச்சியான நாள். பரணி நட்சத்திரம் கொண்டவர்கள் இன்று மேற்கொள்ளும் விஷயத்தை வெற்றிகரமாக முடிக்கக்கூடிய அனுக்கிரகம் உண்டு. கிருத்திகை நட்சத்திரம் கொண்டவர்களுக்கு முயற்சிக்கேற்ற ஆதாயம் உண்டு.

இன்று உங்களது அதிர்ஷ்ட திசை தெற்கு, அதிர்ஷ்ட எண் 1,மற்றும் அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.

பல நாள் நீங்கள் மேற்கொண்ட முயற்சி பலனளிக்காமல் புதிய வழியை கையாள்வீர்கள். வேலையில் உங்களுக்கு பாராட்டு கிடைக்கும்.பொது இடத்தில் நீங்கள் மேற்கொள்கிற விஷயங்களில் உங்களுக்கு கீர்த்தி உண்டாகும் வாய்ப்புண்டு. உங்களது இளைய உடன் பிறப்புகளால் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிட்டும். அவர்களால் மகிழ்ச்சியான செய்திகளை அறிவீர்கள்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உங்களது புதிய முயற்சிகள் கை கொடுக்கும். ரோகிணி நட்சத்திரகாரர்களுக்கு இன்று பாராட்டு கிடைக்கும். மிருகஷீரிடம் நட்சத்திரக்காரர்களுக்கு சுப செய்திகள் கிடைத்திடும்.

உங்களது குடும்ப உறுப்பினர்களிடத்தில் சற்று அனுசரனையுடன் நடந்து கொள்ளுங்கள். நீங்கள் எதிர்ப்பார்த்து மேற்கொண்ட முயற்சியின் பலன் தெரிய சற்று காலதாமதம் ஏற்படலாம். யாருக்கும் வாக்குறுதிகளை, ஏதேனும் ஒன்றை நிறைவேற்றுவதாக உறுதியளிக்க வேண்டாம்.

மிருகசீரிடம் நட்சத்திரக்காரர்கள் இன்று நிதானத்துடன் செயல்படுங்கள். திருவாதிரை நட்சத்திரக்கார்கள் பிறரிடம் வாக்குவாதம் மேற்கொள்ள வேண்டாம். புனர்பூசம் நட்சத்திரம் கொண்டவர்களுக்கு நீங்கள் இன்று மேற்கொள்ள வேண்டிய பணிகளில் கால தாமதம் உண்டாகும்.

இன்று உங்களது அதிர்ஷ்ட திசை வடக்கு,அதிர்ஷ்ட எண் எட்டு மற்றும் அதிர்ஷ்ட நிறம் இள நீலம்.

தம்பதியரிடையே இருந்த சச்சரவுகள் நீங்கி அமைதி நிலவிடும். உங்களுக்கு இன்றைக்கு தோன்றிடும் புதிய சிந்தனைகளால் வர்தகப் பணியினை மேற்கொள்வீர்கள். எதிர்பாராத பரிசு கிடைத்திடும். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடத்தில் நட்பு பாராட்டுவீர்கள்.

புனர்பூசம் நட்சத்திரக்காரர்கள் நீங்கள் நினைத்தது இன்றைக்கு நிறைவேறும், பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு இன்று மன மகிழ்ச்சி உண்டாகும்.ஆயில்யம் நாட்சத்திரக்காரர்களுக்கு எதிர்பாராத பரிசு உண்டு.

இன்று உங்களது அதிர்ஷ்ட திசை கிழக்கு, அதிர்ஷ்ட எண் மூன்று மற்றும் அதிர்ஷ்ட நிறம் இள மஞ்சள்.

தொடர்ந்து ஒரேயிடத்தில் இருப்பதை விரும்ப மாட்டீர்கள், உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனத்துடன் இருக்கவும். உடன் பணியாற்றுபவர்களிடத்தில் சற்று அனுசரித்துச் செல்லவும்.மனதில் எழுகின்ற எண்ணத்தினால் உங்களுக்கு சஞ்சலம் உண்டாகும். பிறருடன் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஒரேயிடத்தில் இருக்க வேண்டாம், பூரம் நட்சத்திரக்கார்கள் வீண் வாக்குவாதங்கள் வேண்டாம். உத்திரம் நட்சத்திரக்கார்கள் இன்று சற்று ஆன்மீக சிந்தனையுடன் காணப்படுவார்கள்.

இன்று உங்களது அதிர்ஷ்ட திசை தெற்கு, அதிர்ஷ்ட எண் ஒன்பது மற்றும் அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு.

சொத்து தொடர்பான பிரச்சனைகளில் சற்று சுமுக நிலையை காண்பீர்கள். பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கிடும்.இன்றைக்கு நாள் முழுமைக்கும் புத்துணர்சியுடன் உணர்வீர்கள். கல்வி பயிலும் மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது இன்றைக்கு எந்த புதிய முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டாம்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய உறவுமுறை கிடைத்திடும்,அஸ்தம் நட்சத்திரக்கார்கள் பெரும் சவாலன பணியினை மேற்கொள்வீர்கள். சித்திரை நட்சத்திரக்காரர்கள் இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக அமைந்திடும்.

இன்று உங்களது அதிர்ஷ்ட திசை மேற்கு, அதிர்ஷ்ட எண் ஆறு மற்றும் அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.

வாகனப் பயணத்தினால் உங்களுக்கு அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் கடனுதவி கிடைத்திடும். பொறுப்புடன் நடந்து கொள்வதற்கு சந்தர்ப்பங்கள் கிடைக்கும் அதனை முறையாக பயன்படுத்திக் கொள்ளவும்.

விலையுயர்ந்த பொருட்களை வாங்க முயற்சி மேற்கொள்வீர்கள். உங்களது செயல் பிறரை மகிழ்ச்சிப்படுத்தும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இன்று லாபமயமான நாளாக அமைந்திடும், சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பொறுமையுடன் உங்களிடம் வரும் பிரச்சனைகள் தீர்க்க வேண்டும். விசாகம் நட்சத்திரக்காரர்களுக்கு இன்று வேலையில் புதிய தாக்கம் உண்டாகும்.

இன்று உங்களது அதிர்ஷ்ட திசை வடக்கு, அதிர்ஷ்ட எண் ஐந்து மற்றும் அதிர்ஷ்ட நிறம் இளம்பச்சை.

இன்று உங்களுக்கு சமூக சிந்தனைகளில்ன் நாட்டம் உண்டாகும். உங்களது உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள், தந்தை மற்றும் தந்தை வழி உறவுகளால் சின்ன சின்ன பிரச்சனைகள் சந்திக்க நேரிடலாம்.

விசாகம் நட்சத்திரக்காரர்கள் இன்று உங்களுக்கு நல்ல பெயர் கிடைத்திடும், அனுஷம் நட்சத்திரக்காரர்கள் கவலைகள் குறைந்து புதிய உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். கேட்டை நட்சத்திரர்க்கார்கள் புதிய மாற்றங்களை நிகழ்த்துவீர்கள்.

இன்று உங்களது அதிர்ஷ்ட திசை கிழக்கு, அதிர்ஷ்ட எண் நான்கு மற்றும் அதிர்ஷ்ட நிறம் சாம்பல்.

இன்றைக்கு நீங்கள் மேற்கொள்கிற விஷயங்களில் சற்று கவனமாக இருந்திடுங்கள் உங்களின் பொருள் ஏதேனும் ஒன்றினை இழக்கும் சூழல் இருப்பதினால் அதில் சற்று கூடுதல் கவனமாக இருக்கவும், உங்களைப் பற்றிய விஷயங்களை பேசும்போது கவனமாக இருந்திடுங்கள் நண்பர்களிடத்தில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நலம்.

மூலம் நட்சத்திரக்காரர்கள் இன்று உங்களது வேலைகளில் சற்று நிதானத்துடன் செயல்படுங்கள். பூராடம் நட்சத்திரக்காரர்களுக்கு புதிய எண்ணங்கள் மேலோங்கும் உத்திராடம் நட்சத்திரக்காரர்கள் உங்கள் பொருட்களில் கவனமாக வைத்திருங்கள்

இன்று உங்களது அதிர்ஷ்ட திசை தெற்கு, அதிர்ஷ்ட எண் ஒன்று மற்றும் அதிர்ஷ்ட நிறம் அடர் சிவப்பு.