உலக அதிசய பட்டியலே மாற வாய்ப்பு கற்சிலைக்கும் நரம்பு படைத்து கல்லுக்கும் உணர்வூட்டிய தமிழன்

தற்போது வரைக்கும் எகிப்து நாட்டில் உள்ள பிரமிடுகள் தான் உலகின் முதல் அதிசயமாக போற்றப்பட்டு வருகிறது. கிமு 2589ல் கட்டப்பட்டதாக சொல்லப்படும் அது தான் இன்றளவும் தொன்மை காலத்தில் தொடங்கி உலகின் முதல் அதிசயமாக திகழ்ந்து வருகிறது.

அதில் மர்மங்கள் நிறைந்ததாலேயே இவ்வளவு காலம் போற்றப்பட்டு வந்த நிலையில், பிரமிடையொத்த வடிவைமைப்புடன், கலையம்சம் நிறைந்த கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டாக தமிழகத்தில் உள்ள தஞ்சை பெருவுடையார் கோவில் என்று அழைக்கப்படும் தஞ்சை பெரிய கோவில் திகழ்கிறது.

கல் சிலையில் கூட நரம்பு, எலும்பு, தசை தெரியும் அளவிற்கு தத்ரூபமான கலை அம்சம் கொண்டு கல்லுக்கும் உயிர் பெற்று இப்படியொரு சிற்ப கலை இருக்கிறதா என்று வாய்பிளக்க வைக்கிறது.

தஞ்சை பெரிய கோவில் செய்திபுனல் க்கான பட முடிவு

பிரமிடை போலவே அடுக்கடுக்கான கட்டட அமைப்பு முறையில் அடுக்கி கொண்டே சென்று இறுதியில் உச்சியில் என்பது டன் கல்லுடன் முடிவடைகிறது. முழுக்க முழுக்க புவிஈர்ப்பு சக்தியை அடிப்படையாக கொண்டு கட்டப்பட்டுள்ளது. அதனால் தான் புவி ஈர்ப்பு சக்தியுடன் தொடர்புடைய தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை அந்த பகுதியில் சிறப்பு வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

தஞ்சை பெரிய கோவில் செய்திபுனல் க்கான பட முடிவு

இன்றைக்கு இந்தியாவில் தஞ்சை பெரிய கோவிலை விட கட்டுமானத்தில் தாழ்ந்த தாஜ்மஹால் உலக அதிசய பட்டியலில் இடம்பிடித்து இருக்கிறது என்றால், அதற்கு எல்லாம் காரணம் நமது தரப்பில் இருந்து எடுக்கப்படாத முயற்சியே.

முதலில் நமது கோவிலை உலக அதிசயங்கள் பட்டியலுக்கு பரிந்துரைக்க வேண்டும். பின்னர் அதற்கான ஆதாரங்களை சமர்பிக்க வேண்டும்.

தஞ்சை பெரிய கோவில் செய்திபுனல் க்கான பட முடிவு

அதனை தொடர்ந்து அவர்கள் கேட்கும் அனைத்து விதிமுறைகளும் ஒத்துப்போனால், மக்கள் வாக்கெடுப்பு நடக்கும். அதில் தான் தோற்று போய்விடுகிறது தமிழகம்.

ஒருவேளை உலக அதிசயத்தை முடிவு செய்யும் அமைப்பே தமிழக கோவிலை உலக அதிசயங்களில் ஒன்றாக தேர்வு செய்ய முடிவுக்கு வந்தாலும், மக்கள் வாக்கெடுப்பு என்று வரும் பொழுது, நமது கோவில்களை பிரபலப்படுத்தும் எண்ணம் யாருக்கும் வருவதில்லை.

தஞ்சை பெரிய கோவில் செய்திபுனல் க்கான பட முடிவு

இதனால் வட இந்தியர்களுக்கு இதை பற்றிய எண்ணமே இல்லாமல் போய் விடுகிறது. தாஜ்மஹால் உலக அதிசயமாக தேர்ந்தெடுக்கப்பட, தொலைக்காட்சி, வானொலி, தெரு விளம்பரங்கள் வரை சென்றது. தமிழக கோவில்களை பரிந்துரைத்தால் இந்த அளவிற்கு செய்வார்களா என்பது தான் கேள்விக்குறியே.

இதனையெல்லாம் தாண்டி வென்று விட்டால், இனி வருங்காலத்தில் தஞ்சை பெரிய கோவிலும் உலக அதிசயங்களில் ஒன்றே.