தாத்தாவினால் வன்கொடுமைக்கு ஆளான இளம்பெண் பதிவிட்ட திடுக்கிடும் புகைப்படங்கள்

சில நாட்களுக்கு முன் ஜப்பானின் கியோட்டோ (Kyoto) என்ற பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தன்னுடைய திடுக்கிடும் படங்களை இணையத்தில் பகிர்ந்தார்.

அந்த படங்களில் அந்த பெண் எலும்பும், தோலுமாக நிர்வாண நிலையில் இருந்தார். பார்ப்பவர்கள் கண்களில் பதட்டம் தொற்றுக் கொள்ளும் அளவிற்கும், கதிகலங்க செய்யும் வகையிலும் இருந்தன அந்த புகைப்படங்கள்.

பிறகு, விசாரித்த போதுதான், அந்த பெண் அவரது சொந்த தாத்தாவினால் வன்கொடுமைக்கு ஆளாகி இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என்பது அறியவந்தது.

ட்விட்டரில் சில நாட்களுக்கு முன்னர் ஜப்பானை சேர்ந்த ஒரு இளம்பெண்ணின் புகைப்படங்கள் பகிரப்பட்டு இருந்தன. அந்த பெண் எலும்பும், தோலுமாக பார்க்கவே பரிதாபமான நிலையில் இருந்தார். அந்த பெண் பகிர்ந்த புகைப்படத்தில் இருந்த நிலையில் வெறும் 16.8 கிலோ எடை மட்டுமே இருந்தார் என்றும் அவர் கூறிய தகவல் மூலம் அறியப்பட்டது.

அந்த இளம்பெண்ணை அவரது சொந்த தாத்தாவே உணவளிக்காமல் கொடுமை செய்து வந்துள்ளார். எப்போதெல்லாம், அந்த இளம் பெண் சாப்பிட முற்படுகிறாரோ, அல்லது சாப்பிடுவதை அந்த தாத்தா காண்கிறாரோ, அப்போதெல்லாம் உடல் ரீதியாக வன்கொடுமை செய்து சாப்பிட விடாமல் சித்திரவதை செய்துள்ளார்.

கியோட்டோ என்ற பகுதியில் வசித்த வந்த இந்த பெண் எடுத்த செல்ஃபீ படங்கள் பத்து வருடங்களுக்கு முன்னர் இவர் காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது எடுத்த படங்கள் என்று அறியப்படுகின்றன. இவரது இடுப்பு பகுதி எலும்புகள் கூட தெள்ளத்தெளிவாக தெரியும் அளவிற்கு உடலில் சதையோ, தசை வலிமையோ இன்றி காணப்பட்டுள்ளார் இந்த இளம்பெண்.

இந்த இளம்பெண் வேறு வழியின்றி தனது தாத்தாவின் கட்டுப்பாட்டில் வளர வேண்டிய நிலையில் இருந்துள்ளார். அந்த பத்து வருடமும் பசியால் மிகவும் வாடியுள்ளார். உண்பதற்கு சாப்பாடு போடாமல் வருந்த செய்துள்ளார் இந்த பெண்ணின் தாத்தா. ட்விட்டரில் படங்கள் பகிர்ந்த போது இந்த பெண், 'சாப்பிட தடை செய்யப்பட்டிருந்த காலத்தில் நான்..' என மேற்கோளிட்டு கூறியிருந்தார்.

எப்படியாவது அவர் இல்லாத சமயத்தில் அல்லது திருட்டுத்தனமாக வீட்டில் இருக்கும் உணவை நான் சாப்பிடுவதை பார்த்துவிட்டால், என் தாத்தா எனது வயிற்றில் உதைப்பார், என் வாயில் இருக்கும் உணவை அவரது கையை விட்டு பிடுங்கி வெளியே வீசுவார் என்று தனக்கு நேர்ந்த அவலங்களை பகிர்ந்திருக்கிறார் இந்த ஜப்பானிய இளம்பெண்.

சில சமயம் தன்னை உடல் ரீதியாக வன்கொடுமைக்கு ஆளாக்கி, உண்ட உணவை வாந்தி எடுக்க வைத்த சம்பவங்களும் நடந்துள்ளன. ஒரு கட்டத்தில் தான் வெறும் 16.8 கிலோ எடைக்கு தள்ளப்பட்டேன் என்று சமூக தளங்களில் பகிர்ந்த படங்களுடன் தெரிவித்துள்ளார் இந்த இளம்பெண்.

என்னை போன்று வன்கொடுமைகளுக்கு ஆளாகும் பெண்கள் இன்னும் எத்தனையோ பேர் நம் கண்களுக்கு தெரியாமல் இருக்கிறார்கள். அவர்கள் பயப்படாமல் வெளியே உதவி நாடுங்கள். நேரம் தாமதப்படுத்தாமல், உங்கள் நிலை மோசமான நிலைக்கு தள்ளப்படுவதற்கு முன் உதவி நாடுங்கள் என்று கூறியுள்ளார்.

இந்த ஜப்பானிய பெண் காப்பாற்றப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது... இன்னும் பத்து நிமிடங்கள் தாமதமாக வந்திருந்தாலும் கூட இந்த பெண் இறந்திருப்பார் என்று கூறினார்களாம். எப்படியோ தெய்வாதீனமாக இந்த பெண் சரியான நேரத்தில் காப்பாற்றப்பட்டு இப்போது நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார்.

Image Credit: Asiawire

ஆரம்பத்தில், சமூகதள பயனாளிகள் இந்த பெண் ஏமாற்றுகிறார். இவை போலியானவை என்று கூறவே, தான் எடுத்து வைத்திருந்த அனைத்து படங்களையும் பகிர்ந்து நடந்தவை அனைத்தும் உண்மை என்று நிரூபணம் செய்தார் இந்த பெண்.