வெறும் சடலத்தை பாதுகாக்க மட்டும் தானா இவ்வளவு பெரிய கட்டிடம் மர்மத்தை விளக்கும்

கிட்டத்தட்ட 5000 ஆண்டுகளுக்கும் மேலாகப் பல்வேறு இயற்கைச் சீற்றங்களை பார்த்திருக்கும், ஆனால் எந்தவித பாதிப்புகளும் அடையாமல்,  இன்றளவும் நிமிர்ந்து நிற்கிறது பிரமிடு.

இந்த பிரமிடுகளை உருவாக்கியது யார்?, என்ன காரணத்திற்காக இவற்றை உருவாக்கினார்கள்?

வரலாற்று ஆய்வாளர்கள் ஒன்றைக் கூற,விஞ்ஞானிகள் அதற்கு எதிராக ஒன்றைக் கூற என்று காலங்காலமாக இது நடக்கிறது, ஆனால் விடை மட்டும் கிடைத்தபாடில்லை

“பிரமிடு” (pyramid) என்றால் பலரும் சொல்வது, அது எகிப்தில் இருக்கும் பெரிய கட்டிடங்கள். அதில் அக்காலத்தில் இறந்த மன்னர்களின் சடலத்தை, பல சடங்குகள் செய்து பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள்.

”மம்மி“ என்றழைக்கப்படும் அவற்றின் உடல்கள் இன்னமும் கெடாமல் இருக்கின்றன. அது தவிர பல்வேறு புதையல்கள் அங்கே இருக்கக்கூடும் என்பதுதான்பலரின் கருத்து

ஆனால் இவை மட்டும்தான் பிரமிடா? அதனுள் வேறு ஏதும் இல்லையா..?

வெறும் உடலைப் பாதுகாக்கும் சமாதியாகத்தானா அவ்வளவு பெரிய கட்டிடங்களைக் கட்டியிருப்பார்கள்?

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த பிரமிடுகளைச் சுற்றி எந்த விதமான மலைகளோ,பாறைகளோஇல்லை என்பது உற்றுநோக்கத்தக்கது

ஒரு புறம் பாலைவனமும், மறுபுறம் கடலும்தான் இந்நகரைச் சுற்றி உள்ளது. அப்படியானால் இந்த பிரமிடை எப்படி உருவாக்கியிருப்பார்கள், கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்..?

இத்தனை கற்களை எங்கிருந்து கொண்டு வந்தார்கள்..?

இவ்வளவு பெரிய உயரத்திற்கு அவற்றை எப்படி கொண்டுவந்தார்கள்..? இதை தான் வரலாற்று ஆய்வாளர்களும் , விஞ்ஞானிகளும் ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர்.

சரி, இந்த அளவுக்கு அருகில் எங்காவது பூமியைத் வெட்டி கற்களை எடுத்து வந்து இவற்றைக் கட்டியிருப்பார்கள் என்று வைத்துக் கொண்டால் கூட, அவ்வாறு தோண்டி எடுத்த இடங்களில் மிகப்பெரிய பள்ளங்கள் ஏற்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் பல மைல் தூரத்திற்கு  அப்படி எந்த  பள்ளமும் இல்லை. ஆகவே எப்படி இவற்றை உருவாக்கியிருப்பார்கள் ,என்று அறிவியலாளர்கள் மண்டையை உடைத்துக் கொண்டுதான் உள்ளனர். !

நானே பொங்கல் வாழ்த்தை தமிழில் தான் சொல்லி இருக்கிறேன் ஏன் தெரியுமா மோடி பெருமிதம்