பல்லியை உற்றுக் கவனியுங்கள் : நமது மரண தேதி தெரிந்து விடும் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு படிங்க

நமது வீட்டின் சுவர்களில் சுற்றித் திரியும் பல்லிகளை நீங்கள் உற்றுக் கவனிப்பது உண்டா..? இல்லை என்றால் இனி கூர்ந்து கவனியுங்கள். கொஞ்சம் அதிர்ச்சி அடையாமல் படிங்க..!

பல்லி கிழக்கே சொல்லுமாகில் அதன் பலம் ராகு கிரகத்தின் சாரம்சத்தை பெற்றிருக்கும். இதன் காரணமாக எதிர்பாராத ஒரு பயத்தை, அசுபச் செய்தியை இது முன்கூட்டி தெரிவிப்பதாக அர்த்தம்.

இதே கிழக்கு திசையில் அடுத்த வீட்டில் அல்லது அடுத்த மனையில் இருந்து சொன்னால் உடனடியாக ஏதோ ஒரு கெடுதல் நடப்பதாக அர்த்தம். குறிப்பாக உடல் நலம் இல்லாத பெரியவர்கள் மரணிப்பார்கள்.

தென்கிழக்கு திசையாக அக்கினி மூலையில் இருந்து கொண்டு பேசினால் உடனடியாக கலகம் வரும். இந்த நாளில் இருந்து ஒருவாரத்திற்குள் நமது இல்லத்தில்  மரணச் செய்தி வந்தடையும்.

தென்திசையில் இருந்து கொண்டு சொன்னால் செவ்வாய் கிரகத்தின் சாரம் சத்தை பெறுவதால் இதன் பலன் எதிர்பாராத சுக சவுகரியங்களையும் எதிர்பாராத அதிர்ஷடத்தையும் தெரிவிக்கும்.

இந்த தெற்கு திசை அடுத்த வீட்டு அல்லது அடுத்த மனையிலிருந்தோ சொல்வதாக இருந்தால் எதிர்பாராத தோல்வி, துக்க செய்தி, எதிர்பாராத விரயம் முதலியவைகளை குறிப்பிடும்.

தென்மேற்கு மூலையாகிய நிருதி திசையில் இருந்து சொன்னால் அதற்கு புதன் கிரகத்தின் சாராம்சம் பொருந்தி யிருக்கும். இதன் காரணமாக இதன் ஜெனபந்துக்கள் வருகையும், இனஜென்ம பந்துக்கள், நண்பர்களால் நன்மைகளும் ஏற்படும்.

இதே நெருதி திசை அடுத்த வீடு அல்லது அடுத்த மனையாக இருக்கு மானால் எதிர்பாராத விருந்து வரும் அல்லது சுபச்செய்திகள் வந்துசேரும்.

மேற்கு திசையில் இருந்து சொல்லுமானால் சனி கிரகத்தின் சாராம்சம் பொருந்தியிருக்கும். சஞ்சலமான சோதனைகளும், சங்கடங்களும் ஏற்படும் என்பதற்கு எச்சரிக்கையாகும்.

இதே மேற்கு திசை அல்லது வீடு அல்லது அடுத்த மனையாக இருக்குமானால் உடனடியாக கெடுதல்களும் வந்து சேருவதை எச்சரிப்பதாகும்.

வடதிசையாக வாயு மூலையில் இருந்து பேசுமானால் சுபச்செய்தி வரும்.

பல்லி விழும் பலன்
தலையின் இடது பக்கம் பல்லி விழுந்தால் துன்பம்.தலையின் வலது பக்கம் பல்லி விழுந்தால் கலகம்.
நெற்றியின் இடது பக்கம் பல்லிவிழுந்தால் கீர்த்தி.நெற்றியின் வலது பக்கம் பல்லிவிழுந்தால் லக்ஷ்மிகரம்.
வயிற்றின் இடது பக்கம் பல்லி விழுந்தால் மகிழ்ச்சி.வயிற்றின் வலது பக்கம் பல்லி விழுந்தால் தானியம்.
முதுகு இடது பக்கம் பல்லி விழுந்தால் கவலை.முதுகு வலது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம்.
கண் இடது பக்கம் பல்லிவிழுந்தால் பயம்.கண் வலது பக்கம் பல்லிவிழுந்தால் சுகம்
தோள் இடது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி.
தோள் வலது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி.பிருஷ்டம் இடது பக்கம் பல்லிவிழுந்தால் செல்வம்.  பிருஷ்டம் வலது பக்கம் பல்லிவிழுந்தால் சுகம்.
கபாலம் வலது பக்கம் பல்லி விழுந்தால் வரவு. கணுக்கால் இடது பக்கம் பல்லி விழுந்தால் பயணம்.
கணுக்கால் வலது பக்கம் பல்லி விழுந்தால் செலவு.  மூக்கு இடது பக்கம் பல்லி-விழுந்தால் கவலை.
மூக்கு வலது பக்கம் பல்லி விழுந்தால் வியாதி.மணிக்கட்டு இடது பக்கம் பல்லி-விழுந்தால் கீர்த்தி.
மணிக்கட்டு வலது பக்கம் பல்லி விழுந்தால் பீடை.தொடை இடது பக்கம் பல்லி விழுந்தால் சஞ்சலம்.
நகம் இடது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம். நகம் வலது பக்கம் பல்லி விழுந்தால் செலவு.
காது இடது பக்கம் பல்லி விழுந்தால் லாபம். காது வலது பக்கம் பல்லி விழுந்தால் ஆயுள்.
மார்பு இடது பக்கம் பல்லி விழுந்தால் சுகம். மார்பு வலது பக்கம் பல்லி விழுந்தால் லாபம்.
கழுத்து இடது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி.கழுத்து வலது பக்கம் பல்லி விழுந்தால் பகை.

வாடகை பெற்றோர் ஆடம்பர அபார்ட்மெண்ட் ஆண்களை மயக்கி பல லட்சம் ஆட்டையப் போட்ட