நெலியும்செம்பு தகட்டை எடுத்து குடிக்கும் நீரில் போடுங்க மூன்று நாட்களில் பச்சை நிறமாச்சு என்றால்

நவீன மயமாகிவிட்ட உலகத்தில் கேன் வாட்டர், மினரல் வாட்டர் என்று பல தண்ணீர்கள் முந்திக்கொண்டு வர செம்புக் குடங்கள்  காணாமல் போய்விட்டன..

கேன் வாட்டர், மினரல் வாட்டர் என  மாசம் நூற்றுக்கணக்கான ரூபாய் செலவு செய்கிறோம்..ஒரே ஒரு செம்புத் தகடு இருந்தாலே போதும், அருமையான மினரல் வாட்டர் கிடைத்துவிடும். பணமும் மிச்சமாகும்

செம்புப் பாத்திரத்தில் 24-மணி நேரம் குடிநீரை வைத்திருந்து பரிசோதித்துப் பார்த்ததில், மனிதர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் ,நுண்ணுயிரிகள் எதுவும் அந்த நீரில் இல்லை என்று அந்த ஆராய்ச்சி அறிவித்தது.

செம்பு குடம் இல்லையென்றாலும்பரவாயில்லை. செப்பு தகட்டை குடத்துக்குள்ள போட்டு வெச்சா கூட உங்க வீட்டுத் தண்ணி தூய்மையானதாக  மாறிவிடும்.. 

மூன்று  நாளைக்கு ஒரு முறை செம்பு தகட்டை எடுத்துப் பார்த்தா பாசி புடிச்ச மாதிரி இருக்கும். அதெல்லாம் பாக்டீரியாக்கள்தான். தகட்டைச் சுத்தமா கழுவிவிட்டு திரும்பவும்

குடத்துக்குள்ள போட்டு வைக்கலாம். இன்றைக்கும் சில கிராமங்களில் செம்பு குடத்தில்தான் தண்ணிர் குடிக்கிறார்கள்.

 பல நேரங்களில், காப்பர் (செம்பு) சத்து குறைபாடு இருக்கையில், தைராய்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகும்.

செம்பு குடத்தில் தண்ணீரை குடிப்பதால் உடல்நல பிரச்சனைகளை சமநிலையில் வைத்திடும். 

மூளையில் உள்ள நரம்பணுக்களுக்கு மத்தியில் உள்ள இடைவெளிகளை பாதுகாக்க மயலின் உறைகள் அதனை மூடும்.

இந்த மயலின் உறைகள் கொழுப்பு வகைப் பொருட்களை உருவாக்க செம்பு உதவுகிறது. 

கர்ப்ப காலத்தில் தாமிர பானையில் உள்ள தண்ணீரை குடித்தால், தொற்றுக்கள் மற்றும் நோய்வாய் படாமல் பாதுகாப்போடு இருக்கலாம்.

புற்றுநோய்க்கு எதிராக பாதுகாக்கும் செம்பு சிறப்பான ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள் அடங்கியுள்ளது.

முகநூல் நட்பால் வந்த விளைவு அழகால் ஆண்களை வளைத்து பல கோடி ஏமாற்றிய இளம்பெண்