பதநீர் இப்போது பாட்டிலில், இயற்கையை மீட்ட இளைஞர்கள்!

தமிழகத்தில் சமீபத்தில் நடந்த ஜல்லிக்கட்டு புரட்சியில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்திய அறிவழி போராட்டம் மிகப்பெரிய தாக்கத்தை உலக அளவில் ஏற்படுத்தியது.

இந்த தன்னெழுச்சி போராட்டத்தில் அந்நிய குளிர்பானங்களை தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

இதன் விளைவு கோக், பெப்சி போன்ற வெளிநாட்டு குளிர்பானங்களை பொதுமக்கள் புறக்கணிக்க ஆரம்பித்தனர்.

மேலும் வெளிநாட்டு குளிர்பானங்களை புறக்கணித்த மக்கள் உள்நாட்டு இயற்கை பானங்களான இளநீர், மோர், பதநீர் போன்றவற்றை விரும்ப ஆரம்பித்தனர்.

பொதுமக்களின் இந்த மாற்றத்தால் சிறு, குறு வியாபாரிகள் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறுகின்றனர். தற்போது மக்கள் அதிகமாக விருபுவதால் வியாபாரம் நன்றாக நடப்பாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பனைமரத்தில் இருந்து இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் பதநீர் தற்போது பாட்டிலில் விற்பனைக்கு வந்துள்ளது. பதநீர் உடலுக்கு மிகவும் உகந்த பானம்.

காலத்திற்கேற்ப எல்லாம் மாறுகிறது. பதநீரும் தனது பழைய மண்கலயத்தை விட்டு பாட்டிலுக்கு மாறி புது வடிவத்துடன் வெளிவர இருப்பதாக கூறப்படுகிறது.