உங்களுக்கு இந்த மாதிரி இருக்கா? எச்சரிக்கை மக்களே

நமது உடலின் ஏதேனும் ஒரு பகுதியில் கொழுப்புக் கட்டிகள் போன்று இருக்கும். இதற்கு லிபோமா என்று பெயர்.

நம்முடைய சருமத்தின் உட்பகுதியில் கொழுப்புத் திசுக்கள் வளர்ச்சி அடைவதால் தான் இந்த மாதிரியான லிபோமா கட்டிகள் உருவாகிறது.

ஆனால் இது புற்றுநோய் கட்டிகள் அல்ல. பெரும்பாலும் இந்த கட்டிகள் கழுத்து, தொடை, அக்குள், மேற்புற கைகள் போன்ற இடங்களில் அதிகமாக ஏற்படும்.

லிபோமா கட்டிகள் ஏற்படுவதற்கு என்ன காரணம்?

இந்த மாதிரியான லிபோமா கொழுப்புக் கட்டிகள் எதனால் ஏற்படுகிறது என்பதை உறுதியாக கூறமுடியவில்லை என்றாலும் மரபணுக்கள், உடல் பருமன் அல்லது அதிகப்படியான கொலஸ்ட்ரால் போன்ற காரணங்களினால் உருவாக அதிக வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.

கொழுப்புத் திசுக் கட்டிகளைப் போக்குவது எப்படி?

இந்த கட்டிகளைப் போக்க அறுவை அல்லது லேசர் சிகிச்சைகளைத் தான் மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். இருப்பினும் இந்த சிகிச்சைகளால் மீண்டும் லிபோமா உருவாகாது என்று உறுதியாக கூறமுடியாது.

ஆனால் இந்த கொழுப்புத் திசுக் கட்டிகளை போக்குவதற்கு, சிறந்த இயற்கை வழி ஒன்று உள்ளது.

தேவையான பொருட்கள்
  • மைதா
  • தேன்
செய்முறை

தேன் மற்றும் மைதா மாவை சமமான அளவில் எடுத்து ஒன்றாக கலந்து பேஸ்ட் போல செய்து, கட்டிகளின் மீது தடவி, ஒரு பேண்டேஜ்ஜை மேலே ஒட்டிக் கொள்ள வேண்டும்.

பின் 36 மணி நேரம் கழித்து அதை கழுவி, மீண்டும் புதிய கலவையைத் தடவ வேண்டும்.

இதே போல 8 நாட்களுக்கு தொடர்ந்து செய்து வந்தால், கொழுப்புத் திசுக்கட்டிகள் கரைந்து, விரைவில் நல்ல மாற்றம் கிடைக்கும்.

குறிப்பு

நமது உடலில் கொழுப்புக்கள் தேங்காமல் இருப்பதற்கு, கொழுப்பு நிறைந்த உணவுகள் சாப்பிடுவதை தவிர்த்து, தினமும் காலையில் எலுமிச்சை ஜூஸ் குடிக்க வேண்டும்.