ரெண்டு காலும் கடைசி வரை வேணுமா? கீரை சாப்பிடுங்க: ஜெ., வின் டாக்டர் சொல்றார்

ஜெ.,வின் முன்னாள் மருத்துவர் சொல்கிறார். நோயின் முதல் தாக்கம் தெரியும் இடம் நமது கால்கள் தான்.

இரும்புச் சத்து குறைபாடு தான் நமது உடல் நிலை கெடுவதற்கு முதல் காரணி.

நாம் நமது பாரம்பரிய உணவுகளை தூக்கி எறிந்து விட்டு ஹார்லிக்ஸ், பூஸ்ட்என்று நாகரிக உணவுக்கு மாறிய போதே நாம் ஆரோக்கியத்தை தொலைக்க தொடங்கிவிட்டோம்.

வாருங்கள் நம்ம ஊர்ல விளையிற காய்கறி, கீரைகள், பழங்கள், காய், கனிகளில் என்னெல்லாம் கிடைகிறது என்று பார்ப்போம்.

உங்கள் கால்கள் உங்களுக்கு கடைசிவரை வேண்டுமா..?

 காய்கறி வகைகளில் கீரைகளுக்கு மட்டும் ஒரு தனி மதிப்பு உள்ளது. மருந்து கடைகளுக்கு சென்று அதிக விலை கொடுத்து சத்து மருந்துகளை வாங்கிச் சாப்பிடுவதற்கு பதிலாக கீரை சாப்பிட்டால் போதும்.

தேவையான சத்துக்கள் தானாகவே கிடைத்து விடும். விலையும், சத்து மருந்துகளை காட்டிலும் பல மடங்கு குறைவு தான். இதில் பக்க விளைவுக்கு இடமே இல்லை. அந்த அளவுக்கு கீரைகளில் அற்புதமான மருத்துவ குணங்கள் பொக்கிஷமாக பொதிந்து கிடக்கின்றன.

கீரை உணவு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. ஆனால், பெரும்பாலான குழந்தைகள் கீரையை பார்த்தால் ஏதோ, இலை, தழை என்று நினைத்து பயந்து ஓடி விடுகின்றனர்.

குழந்தைகள் மட்டுமல்ல இளம் வயதினரும் கூட கீரையை வைத்தால் தொட்டு கூட பார்ப்பதில்லை. இதை பெற்றோர் தான் மாற்ற வேண்டும்.

சிறிய வயதில் இருந்தே குழந்தைகளுக்கு கீரை உணவுகளை கொடுத்து பழக்க வேண்டும். கீரை உணவு எந்த அளவுக்கு சாப்பிடுகிறோமோ, அந்த அளவுக்கு நமது உடலின் ஆரோக்கியம் பெருகும். இவ்வாறு அந்த டாக்டர் கூறியுள்ளார்.

ஒரு வரியில் இயற்கை மருத்துவம் பற்றி தெரிந்து கொள்வோம்!

 1. வரட்டு இருமலுக்கு சிறந்தது திராட்சை.!
 2. முதுகுத்தண்டு வலிக்கு பாப்பாளிப்பழம் சாப்பிடு!
 3. இரத்த அழுத்தம் குறைய எலுமிச்சை!
 4. மூளைக்கு வலியூட்ட வல்லாரை!
 5. காது மந்தம் போக்கும் தூதுவளை!
 6. மூத்திரக்கடுப்பு மாற்ற பசலைக் கீரை!
 7. பித்த மயக்கம் தீர புளியாரை!
 8. உடற் சூடு அகல முருங்கைக் கீரை!
 9. நீரிழிவு நோய்க்கு துளசி இலை!
 10. இரத்தத்தை சுத்திகரிக்க வெள்ளைப்பூடு!
 11. கண் பார்வை அதிகரிக்க கரட், புதினா, ஏலக்காய்!
 12. கடுமையான ஜலதோசத்திற்கு தேனும் எலுமிச்சையும்!
 13. வாழ்நாளை நீடிக்க நெல்லிக்கனி!
 14. சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வெந்தயம்!
 15. கொழுப்புச் சத்தை மிளகு குறைக்கும்!
 16. இளைத்த உடல் பெருக்க மிளகு!
 17. பொடுகைப் போக்க தயிரில் குளி!
 18. மூலநோய்க்கு கருணைக்கிழங்கு!
 19. இதயப் பலவீனம் போக்க மாதுளை!
 20. வெள்ளை வெட்டை தீர அன்னாசி!
 21. காதுவலி தீர எலுமிச்சம் சாறு நாலு துளி காதில் விடுக!
 22. பீனீசம் தலைவலி நீங்க மிளகுப் பொடியுடன் வெல்லம் சேர்த்து உண்!
 23. பொன்னாங்காணி உண்டால் நோய் தணிந்து உடல் தேறும்!
 24. வாழைத்தண்டு சிறு நீரகக்கற்களை கரைக்கும்!
 25. மலத்தை இளக்கும் ரோஜா இதழ்கள்!
 26. மாதுளம் பிஞ்சு பேதியை நிறுத்தும்!
 27. கருப்பை நோய்க்கு வாழைப்பூ!
 28. ஜீரண சக்தியை அதிகரிக்கும் மிளகும் இஞ்சியும்!
 29. மூளைக்கு வலுவூட்டுவது பேரிச்சம்பழம் பாதாம் பருப்பு!
 30. மருதோன்றி வேர்ப்பட்டையை அரைத்துக்கட்ட கால் ஆணி குணமாகும்.!