வெட்கப்படும் பெண்கள் vs வெளிப்படையான பெண்கள்: உறவில் காணப்படும் வேறுபாடுகள்!

பொதுவாக பெண்களை இரண்டு விதமாக பிரிக்கலாம். எதுவாக இருந்தாலும் யோசித்து பதில் கூறுபவர்கள், அல்லது சட்டென்று பதில் கூறுபவர்கள். அதாவது வெட்கப்படும் குணாதிசயம் அல்லது வெளிப்படையாக பேசும் குணாதிசயம் கொண்டவர்.

இந்த இரண்டு வகை பெண்களிடம் பேசுவதில், பழகுவதில் இருக்கும் வேறுபாடுகள் குறித்து இங்கு பார்க்கலாம்...

வெட்கப்படும் பெண்களிடம் பேசுவதற்கு யோசிக்க வேண்டும். பேச்சை தொடக்கவே நீண்ட நேரம் எடுத்துக் கொள்வோம். ஆனால், வெளிப்படியான பெண்கள் பிடித்திருந்தால் அவர்களாகவே வந்து பேசிவிடுவார்கள்.

வெட்கப்படும் பெண்கள் மனம் திறந்து பேச நிறைய நேரம் எடுத்துக் கொள்வார்கள். இது அவர்களை பற்றி தெரிந்து கொள்ள தாமதத்தை உண்டாகும். ஆனால், வெளிப்படையான பெண்கள் திறந்த புத்தகம் போல இருப்பார்கள். இதனால் அவர்களை சீக்கிரமாக புரிந்துக் கொள்ளலாம்.

வெட்கப்படும் பெண்கள் எப்போதுமே ஒரு புரியாத புதிர் தான். இந்த புதிரை தான் நிறைய ஆண்கள் விரும்புவார்கள். ஆனால், வெளிப்படையான பெண்களிடம் இதுபோன்ற புதிர்கள் இருக்காது. இதனால் சற்று சுவாரஸ்யம் குறைவாக தான் இருக்கும்.

வெட்கப்படும் பெண்களுக்கு துணைக்கு எப்போதும் ஒருவர் தேவை. ஆனால், வெளிப்படையான பெண்களுக்கு அப்படி யாரும் தேவையில்லை, அவர்களாகவே அவர்களது வேலைகளை தனித்து நின்று தேவைகளை பூர்த்து செய்துக் கொள்வார்கள்.

வெட்கப்படும் பெண்களிடம் பதட்டம், படபடப்பு அதிகம் இருக்கும். இதனால் ஆண்களுடன் அதிகம் பேச மாட்டார்கள். ஆனால், வெளிப்படையான பெண்களிடம் தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும்.

காதல் வெளிப்படுத்தி அதற்கான பதிலை பெறுவதிலும் இவர்களிடம் வேறுபாடு உண்டு. வெட்கப்படும் பெண் பிடிக்கவில்லை என்பதை கூற கூட அதிக நேரம் எடுத்துக் கொள்வார், ஆனால் வெளிப்படையான பெண் சட்டென்று பதிலை கூறிவிட்டு சென்றுவிடுவார்கள்.