நீங்க இதுவரை அறியாத மனித உடலை பற்றிய வியக்க வைக்கும் உண்மைகள்!

நமது உலகில் மிகவும் கடினமாக, முழுமையாக அறிந்துக் கொள்ள முடியாத மெக்கானிசம் என்றால் அது நமது உடல் தான். நமது உடலை பற்றியும், அதன் இயக்கத்தை பற்றியும் யாரும் நூறு சதவீதம் அறிந்தது இல்லை.

 

நாம் அறியாத, ஆய்வாளர்கள் முழுமையாக கண்டுப்பிடிக்காத பல வியக்க வைக்கும் உண்மைகள் இருக்கின்றன...

விழி வெண் படலத்தில் இரத்த நாளங்கள் இல்லை. இது காற்றில் இருந்து ஆக்சிஜன் பெறுகிறது. நமது உடலிலேயே விழி வெண் படலம் மட்டும் தான் இவ்வாறு இயங்குகிறது.

மனித உடலில் இருக்கும் நியூரான்கள் ஒன்றிணைந்து இயங்கும் போது மில்லியன் ஜி.பி கம்பியூட்டர் ஸ்டோரேஜ்-க்கு இணையானதாக விளங்குகிறது.

உடலில் இருக்கும் 25% ஆக்சிஜன் மூளைக்கு தான் செல்கிறது.

பிறந்த குழந்தையால் ஒரே நேரத்தில் குடிக்கவும் முடியும், மூச்சுவிடவும் முடியும். இது தாய்ப்பாலூட்ட பயனாக இருக்கும்.

மண்டை ஓட்டில் மட்டுமே 22 எலும்புகள் இருக்கின்றன.

மூளையில் இருந்து அனுப்பப்படும் நர்வ் இம்பல்ஸ்-களின் வேகம் மணிக்கு 274 கிலோமீட்டர் வேகம் ஆகும்.

இதயம் சராசரியாக நமது வாழ்நாளில் 228 மில்லியன் லிட்டர் இரத்தத்தை பம்ப் செய்கிறது.

முப்பதாவது வயதிற்குள் உங்கள் இதயம் நூறுகோடி முறை துடித்திருக்கும்.

தொப்புளின் அறிவியல் பெயர் 'Umbilicus'

மனிதர்கள் மத்தியில் சரும நிற வேறுபாடு இருப்பதற்கு காரணம் மெலனின். இது தான் ஒருவரது சருமத்தை கருமை, வெண்மை என ஆக்குகிறது.

மனித உடலிலேயே சிறிய எலும்பு காதில் தான் இருக்கிறது. காதில் இருக்கும் Stirrup Bone-ன் நீளம் வெறும் 2.8 மி.மி தான்.

நமது காது மற்றும் மூக்கின் வளர்ச்சி எப்போதும் நிற்காது.