நான் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்று பெற்றோரிடம் எப்படி தெரிவிப்பது – இளைஞனின் குமுறல்

எனக்கு 25 வயதாகின்றது. நான் தலைநகர் டெல்லியில் உள்ள நல்ல அலுவலகத்தில் வேலை பார்த்து வருகின்றேன். என்னுடைய வேலை எனக்கு நல்ல சம்பளத்தை ஈட்டித் தருவதாக இருக்கின்றது. நான் என்னுடைய பெற்றோர்களிடம் நல்ல நெருக்கமாக இருக்கின்றேன்.

ஆனால், என்னுடைய செக்ஸ் ரீதியான விஷயங்கள் பற்றி அவர்களிடம் வெளிப்படையாக பேச முடியவில்லை. ஏனென்றால், நான் ஒரு ஓரினைச்சேர்க்கையாளன். ஓரினைச்சேர்க்கையாளர்கள் நிறைய பேருடன் நான் தொடர்பு வைத்திருக்கிறேன்.

இப்பொழுது, என்னுடைய ஒரு நண்பரை நான் தீவிரமாக நேசிக்கிறேன். அவனுடைய வாழ வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன். நான் அவர்களிடம் இதையெல்லாம் மறைக்க விரும்பவில்லை. ஆனாலும், அவர்களிடம் எப்படி சொல்வது என்று தயக்கமாக இருக்கின்றது.

அவர்களிடம் சொல்லாமலும் இருக்க முடியாது. என்னுடைய செக்ஸ் ரீதியான உறவு பற்றி என்னுடைய நண்பர்கள் சிலருக்குக்கூட தெரியும். அவர்களிடம் என்னால் இதைப்பற்றி வெளிப்படையாக பேச முடியவில்லை. எனக்கு ஓரினச்சேர்க்கையிலே முழுவதும் விருப்பமாகிவிட்டது.

இதில் இருந்து நான் விடுபடுவதா? அல்லது நான் விரும்பும் என்னுடைய நண்பனுடன் வாழ்வதா?

நீங்கள் தான் எனக்கு வழி சொல்ல வேண்டும்.

உளவியல் மருத்துவரின் பதில் – தற்பொழுது உள்ள சூழ்நிலையில் இது ஒரு சாதாரணமான பிரச்சனை தான். ஏனென்றால், ஹோமோ செக்ஸ் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. பெற்றோர்கள் கூட இதை ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மைக்கு வந்துவிட்டார்கள்.

இதற்கு சிறந்த தீர்வு என்னவென்றால், கஷ்டமாக இருந்தாலும், நேரடியாக சந்திப்பது தான் சிறந்ததாக இருக்கும். நீங்கள் வேலையில் நல்ல ஸ்திரத்தன்மையோடு இருக்கின்றீர்கள் என்று சொன்னீர்கள். எனக்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது. நீங்கள் உங்கள் அலுவலகம் மூலமாகவே மனநல மருத்துவரை சந்தித்தீர்களென்றால், ஹோமோ செக்ஸில் இருந்து விடுபடுவது தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும்.

இதை, மறைத்து வைத்தீர்களென்றால், தேவையில்லாமல் உங்களுடைய மனதுக்கு தான் பிரச்சனை. இதிலிருந்து விடுபட வேண்டுமென்றால், மனநல மருத்துவரிடம் வெளிப்படையாக பேசுங்கள். நண்பர்களிடம் நீங்கள் பேசினாலும் அது தீர்வாக அமையாது என்பதை நான் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றேன்.