மாணவிகள் ஆடை மாற்றுவதை வச்ச கண் வாங்காமல் பார்த்த பள்ளிக்கூட வாத்தியார்.. தர்ம அடி கொடுத்த பெற்றோர்!

ஆக்ரா: உத்தரப்பிரதேசத்தில் மாணவிகள் ஆடை மாற்றுவதை வைத்த கண் வாங்காமல் பார்த்த அரசுப் பள்ளி ஆசிரியரை பிடித்து பெற்றோர் தர்ம அடி கொடுத்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹசயான் கிராமத்தில் அரசுப்பள்ளிக்கூடம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் பள்ளியில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு பள்ளி நிர்வாகம் சீருடை வழங்கியுள்ளது. சீருடைகளை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கிய ஆசிரியர்கள், அவற்றின் அளவு சரியாக உள்ளதா என போட்டு பார்க்கும்படி கூறியுள்ளனர்.

ஆடை மாற்றிய மாணவிகள் 
ஆடை மாற்றுவதை பார்த்த ஆசிரியர் .

இதையடுத்து 6 மற்றும் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் வகுப்பறையின் கதவை மூடிவிட்டு புதிய சீருடையை போட்டு பார்த்துள்ளனர். அப்போது பள்ளி ஆசிரியர் உமேந்திரா சிங் ஜன்னல் வழியாக மாணவிகள் ஆடை மாற்றுவதை திருட்டுத்தனமாக பார்த்துள்ளார்.

 

திடீரென வகுப்புக்குள் 
கூச்சலிட்ட மாணவிகள்

பின்னர் மாணவிகள் ஆடை மாற்றிக்கொண்டிருக்கும் போதே திடீரென வகுப்பு கதவை திறந்து உள்ளே சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவிகள் கூச்சலிட்டுள்ளனர்.

 

வழக்குப்பதிவு 
நையப்புடைத்த பெற்றோர்

இதனையறிந்த மாணவிகளின் பெற்றோர் மாணவிகள் ஆடை மாற்றுவதை பார்த்து ஜொள்ளுவிட்ட ஆசிரியர் உமேந்திராவை நையப்புடைத்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

 

போக்ஸோ சட்டம் 
ஆசிரியர்கள் சஸ்பென்ட்

மேலும் இரண்டு ஆசிரியர்களும் முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது போக்ஸோ உட்பட 5 பிரிகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.