இரண்டாவது மனைவியுடன் உல்லாசம்! கணவனின் அந்த உறுப்பை துண்டாக்கிய முதல் மனைவி!

இரண்டாவது மனைவியுடன் உல்லாசமாக இருந்த கணவனின் ஆண் உறுப்பை, முதல் மனைவி துண்டு துண்டாக வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில்தான் இந்த சம்பவம் கொடூர நிகழ்ந்துள்ளது. முசாஃபர் நகரில் உள்ள மிம்லானா பகுதியை சேர்ந்த நபரே இதில் பாதிக்கப்பட்டவர். எனினும், அந்த நபரின் பெயர் உள்ளிட்ட விவரங்களை போலீசார் தெரிவிக்கவில்லை.

இதுகுறித்து கோட்வாலி போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரி அனில் காபர்வான் கூறியதாவது:

பாதிக்கப்பட்ட நபருக்கு, ஏற்கனவே முதல் திருமணம் நடந்துள்ளது. அந்த பெண் உடனான திருமண உறவு திருப்திகரமாக இல்லை என்றும், அவர்களுக்கு குழந்தை இல்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன்பேரில், முதல் மனைவியின் சம்மதத்துடன் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள அந்த நபர் முடிவு செய்துள்ளார். இதுபடியே இரண்டாவது திருமணமும் செய்துகொண்டு குடும்பம் நடத்த தொடங்கியுள்ளார்.

ஆனால், முதல் மனைவியின் வீட்டுக்குச் செல்லாமல், தொடர்ந்து இரண்டாவது மனைவி வீட்டிலேயே அவர் தங்கியிருக்க தொடங்கியுள்ளார். அதில் கோபம் அடைந்த முதல் மனைவி, அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கே இருவரும் உல்லாசமாக இருந்ததை பார்த்ததும் ஆத்திரம் அடைந்த அவர், ஆண் உறுப்பை துண்டு துண்டாக வெட்டியுள்ளார்.

இதைப் பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து, அந்த நபரை மருத்துவமனையில் சேர்த்தனர். இதன்பேரில், போலீசாரிடம் புகார் தரப்பட்டது. இதையடுத்து முதல் மனைவியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

கணவன் என்றும் பாராமல் ஆண் உறுப்பை, மனைவியே வெட்டி துண்டாடிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.