மருமகளை 2 ஆண்டுகளாக துஷ்பிரயோகம் செய்த மாமனார்: திடுக்கிடும் பின்னணி

இந்தியாவில் மருமகளை மாமனார் இரண்டாண்டுகளாக பலாத்காரம் செய்து வந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் தற்போது பொலிஸ் புகார் அளித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தின் லூதியானாவை சேர்ந்த இளம் பெண்ணுக்கு கடந்த 2016-ல் திருமணம் நடந்தது.

திருமணம் ஆன நான்கு மாதம் பின்னர் அவரின் 45 வயதான மாமனார் ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து மருமகளை பலாத்காரம் செய்துள்ளார்.

மயக்கம் தெளிந்து இதை மருமகள் உணர்ந்த நிலையில் அவரை மாமனார் மிரட்டியுள்ளார்.

இதன் காரணமாக அப்பெண் இது குறித்து தனது கணவரிடம் கூறவில்லை.

இதையடுத்து கடந்த இரண்டாண்டுகளில் பல முறை மருமகளை சீராழித்தார் மாமனார்.

குழந்தை பெற்ற பின்னரும் இந்நிலை தொடர்ந்த நிலையில் சமீபத்தில் தைரியமான முடிவை எடுத்தார் மருமகள்.

இதையடுத்து இது குறித்து பொலிசில் புகார் அளித்துள்ளார்.

இதை தெரிந்து கொண்ட மாமனார் தலைமறைவாகிவிட்ட நிலையில் பொலிசார் அவரை தேடி வருகிறார்கள்.