கசிந்த ரகசியம்: காதலனுடன் சேர்ந்து கணவரை போட்டு தள்ளிய மனைவி….பரபர பின்னணி

கள்ளக்காதல் விவகாரத்தில் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் மனைவி, கள்ளக்காதலன் உள்பட 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தங்கராசு (35). இவருடைய மனைவி பரமேஸ்வரி (33). பரமேஸ்வரிக்கும், ரவிச்சந்திரன் (38) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது.

கள்ளக்காதலை இருவரும் ரகசியம் காத்த நிலையில் அது கசிந்ததால் இதை பற்றி தெரிந்து கொண்ட தங்கராசு பரமேஸ்வரியை கண்டித்தார். கணவர் கண்டிப்பையும் மீறி பரமேஸ்வரி ரவிச்சந்திரனை சந்தித்து பேசினார். கள்ளக்காதலுக்கு கணவர் இடையூராக இருப்பதாக கருதிய பரமேஸ்வரி அவரை கொல்ல முடிவெடுத்தார்.

இது குறித்து ரவிச்சந்திரனிடம் பரமேஸ்வரி பேசிய நிலையில், அவர் கூலிப்படையான பெண்ணாடத்தை சேர்ந்த ஸ்வீட்லின்(27), ஞானமூர்த்தி(34), கார்த்திகேயன்(29) உட்பட 8 பேரை வைத்து கொல்ல முடிவெடுத்தார்.

இதையடுத்து அனைவரும் தங்கராசு வீட்டுக்கு வந்த நிலையில் அவர் முகத்தில் தலையணையால் அழுத்தியும் பின்னர் கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.

இந்த பயங்கர சம்பவம் குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து பரமேஸ்வரி, ரவிச்சந்திரன் உள்பட 10 பேரை கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் பரமேஸ்வரி, ரவிச்சந்திரன் ஆகிய 2 பேருக்கு ஆயுள் தண்டனையும், தலா ஆயிரம் ரூபாய் அபராதமும், ஸ்வீட்லின், ஞானமூர்த்தி, கார்த்திகேயன், நரேஷ்குமார் ஆகிய 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.