திருமணமான நபரிடம் ஏமாந்து குழந்தை பெற்ற 18 வயது பெண்: அடுத்து செய்த இரக்கமற்ற செயல்

தமிழ்நாட்டில் திருமணம் ஆகாமல் குழந்தை பெற்ற இளம்பெண் ஒருவர் குழந்தையை மருத்துவமனையிலேயே விட்டுச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆரணி சேர்ந்த 18 வயது பெண் ஒருவர் 2 ஆண்டுகளாக ஒருவரை காதலித்து அவர் மூலம் கர்ப்பமானதாக கூறப்படுகிறது.

ஆனால் அந்த நபர் ஏற்கனவே திருமணமானவர் என்பதை அறிந்து அதிர்ச்சியான அந்த பெண் தனக்கு பிறந்த குழந்தையை வேலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் விட்டுச் சென்றார்.

குழந்தை அந்த பெண்ணிடமே ஒப்படைக்கப்பட்ட நிலையில், மீண்டும் எஸ்.வி.நகரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவர் குழந்தையை விட்டுச் சென்றார். பிறந்து ஒரு வாரமே ஆன அந்த பச்சிளங் குழந்தை தற்போது சமூகபாதுகாப்புத் துறையினர் வசம் உள்ளது.

இது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.