திருமணமான சில வாரங்களில் புதுமண தம்பதி தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது

இந்தியாவில் புதுமணத் தம்பதிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லியை சேர்ந்தவர் தீபக் (40). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் மனைவி கடந்தாண்டு காலமானார்.

இந்நிலையில் தீபக் சமீபத்தில் மம்தா (28) என்ற பெண்ணை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

நேற்று தீபக்கும், மம்தாவும் வீட்டில் இருந்த நிலையில் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த பொலிசார் இருவரின் சடலங்களையும் கைப்பற்றியதோடு, தீபக் எழுதி வைத்திருந்த கடிதத்தையும் கைப்பற்றினார்கள்.

அதில், எங்கள் தற்கொலை முடிவுக்கு யாரையும் குறை செல்லவிரும்பவில்லை என எழுதப்பட்டிருந்தது.

பொலிசார் கூறுகையில், தீபக்கும், மம்தாவும் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளதும், அவர்களின் நிதி நிலைமை மோசமாக இருந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து விசாரித்து வருகிறோம் என கூறியுள்ளனர்.