உஷ் காவிரி தீர்ப்பு பற்றி யாரும் மூச்சி விட கூடாது மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு ரஜினி போட்ட ஆர்டர்

மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு நடிகர் ரஜினி திடீர் உத்தரவு..!!

காவேரி தீர்ப்பு தொடர்பாக யாரும் எந்தவித கருத்தையும் ஊடகங்களிடம் தெரிவிக்கவோ பகிரவோ கூடாது என மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு நடிகர் ரஜினி வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  

காவிரி நதி நீர் பிரச்சனை தொடர்பாக தமிழகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவில்,192 டிஎம்சி போதாது. எனவே கூடுதலாக 72 டிஎம்சி நீரை தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டும் எனவும்,காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அமிதவா ராய், கான்வில்கர் அடங்கிய அமர்வு, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன.

இந்நிலையில், நூற்றாண்டுகள் கடந்தும் தொடர்ந்து வந்த காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அதில், காவிரி நீரை எந்த மாநிலமும் உரிமை கொண்டாட முடியாது. தமிழகத்தில் 20 டிஎம்சி நிலத்தடி நீர் உள்ளது. எனவே தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி நீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என தீர்ப்பளித்தது.

காவிரியிலிருந்து கூடுதல் நீர் தமிழகத்திற்கு கிடைக்கும் வகையில் தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இருந்ததையும் உச்சநீதிமன்றம் குறைத்திருப்பது தமிழக விவசாயிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து விவசாயிகள் முதல் பல்வேறு அரசியல் தலைவர்கள் வரை கருத்து தெரிவித்து வரும் நிலையில், புதியதாக அரசியலில் குதித்து உள்ள நடிகர் ரஜினிகாந்த், மக்கள் மன்றமாக மாற்றிய ரசிகர் மன்ற  நிர்வாகிகளுக்கும், ரசிகர்களுக்கும் அதிரடி  வாய்மொழி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

காவிரி நதிநீர் தீர்ப்பு பற்றி,ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் யாரவது கருத்து தெரிவித்தால்,அது தமிழகத்திற்கு சாதகமாகவும் மாறலாம்,அல்லது எதிர்ப்பாகவும்  மாறிவிடும் என்ற நோக்கில் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்து உள்ளார்

ஏற்கனவே ரஜினி காந்த் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் என்ற பிரச்னை தலை தூக்கி நிற்கும் போது,புதியதாக தமிழகத்தில் அரசியலில் காலூன்றி  இருப்பதால் கண்டிப்பாக, அரசியல் கட்சிக்கு பாதிப்பு ஏற்படும் மற்றும் மக்களிடையே செல்வாக்கு குறைய  வாய்ப்பு உள்ளது  என்பதால், ரசிகர்கள் அனைவரும் காவிரி தீர்ப்பு  குறித்து வாய் திறக்கவே கூடாது என முன்னெச்சரிக்கை விடுத்துள்ளார் நடிகர் ரஜினி காந்த்.