கொல்லைப்புறமாக தமிழகத்திற்குள் வர நினைத்தால் முடியாது விட்டு விளாசிய பாரதிராஜா

சென்னை : செய்யாத தவறுக்கு வைரமுத்து மன்னிப்பு கேட்ட பின்னரும் அவர் மீது தொடர்ந்து விமர்சனம் முன் வைப்பதற்கு தமிழகத்திற்குள் கொல்லைப்புறமாக நுழைய முயற்சிப்பதே காரணம் என்று இயக்குனர் பாரதிராஜா குற்றம்சாட்டியுள்ளார். இனியும் இது போன்ற விமர்சனங்கள் தொடர்ந்தால் அவர்களின் தலையை நான் வெட்டுவேன் என்று பாரதிராஜா உணர்வுப் பூர்வமாகக் கூறியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற திரைப்பட இசை வெளியீட்டு விழா ஒன்றில் பங்கேற்ற போது பாரதிராஜா பேசியதாவது : எனக்கும் வைரமுத்துவிற்கும் ஆயிரம் பிச்னைகள் இருக்கலாம், ஆனால் இலக்கியத்திற்கும் தமிழுக்கும் அவர் ஆற்றிய தொண்டு யாராலும் ஈடு செய்ய முடியாதது.

நான் உட்பட இந்து மதத்தினர் யாரும் பெரிதாக விசுவாசம் இல்லாதவர்கள். நியாயமாக எங்கிருந்து குரல் வர வேண்டுமோ அங்கிருந்து குரல் வரவில்லை. வைரமுத்து யார் அவர் தமிழுக்கு எத்தகைய தொண்டாற்றி இருக்கிறார். வைரமுத்துவை காரணம் காட்டி தமிழகத்திற்குள் கொல்லைப்புறமாக வர நினைப்போரின் ஆசை நிறைவேறாது.

ஆயுதம் ஏந்த வைத்துவிடாதீர்கள் 
குற்றப்பரம்பரையாக்கி விடாதீர்கள்

மதம் என்பது எங்களுக்கு எப்போதுமே கிடையாது. மீண்டும் எங்களை ஆயுதம் ஏந்த வைத்துவிடாதீர்கள், நாங்கள் ஆண்ட பரம்பரையினர், குற்றப்பரம்பரையினர் ஆக்கி விடாதீர்கள். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அரசியலுக்கு வா, போ சாப்பிடு விருந்தோம்பல் செய்கிறோம், ஏனென்றால் நீங்கள் விருந்தாளிகள். ஆனால் என் படுக்கையில் தான் படுப்பேன் என்று சொல்லாதே.

தமிழகத்தில் தலைமை இல்லையா? 
தலைமை இல்லை என யார் சொன்னது?

என் படுக்கையில் பங்கு கேட்க நீ யார்? 10 வருஷமாக உங்களுக்கு பிள்ளையே இல்லை நான் பெற்றுத் தருகிறேன் என்று சொல்கிறார்களா, எங்களுக்கு தலைமை இல்லை என்று யார் சொன்னார்கள். நாங்கள் பொறுத்திருந்தோம், இன்று தமிழகத்தில் கோடித் கோடித் தலைவர்கள் உள்ளனர். தமிழகம் அமைதிப் பூங்கா என்று சொல்கிறார்கள் அதனால் வன்முறையை தூண்டும் விதமாக பேசக் கூடாது என்று அமைதியாக இருக்க முயற்சிக்கிறேன், ஆனால் முடியவில்லை. வைரமுத்துவின் நாக்கை அறுக்க வேண்டும் என்று சொன்னவரை பிடித்து உள்ளே தள்ள வேண்டாமா? அமைச்சர்கள் பணத்திற்கும், பதவிக்கும் சோரம் போய்விட்டார்கள்

 

மன்னிப்பு கேட்ட பின்னரும் ஏன் வன்மம்? 
தமிழகத்திற்குள் நுழைய முயற்சி

தவறே செய்யவில்லை என்றாலும் உங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் மன்னித்துவிடுங்கள் என்று வைரமுத்து மன்னிப்பு கேட்டார். மன்னிப்பு கேட்ட பின்னரும் விடாமல் இந்த ஒரு விஷயத்தை பிடித்துக் கொண்டு எப்படியாவது உள்ளே வர முயற்சிக்கிறார்கள்.


அரசியல் வேறு, இலக்கியம் வேறு 
தலையை வெட்டுவேன்

உணர்வுப் பூர்வமாக பேசவில்லை இனியும் வைரமுத்து மீது வசைபாடியோ, மேலே கை வைத்தோ பார் என்ன நடக்கிறது என்று. அது அரசியல், இது இலக்கியம். வைரமுத்துவின் நடை போலவே அவருடைய எழுத்திலும் மிடுக்கு இருக்கும். இனியும் எங்கேயாவது இது போன்ற விமர்சனங்கள் தொடர்ந்தால் அவர்களின் தலையை நான் வெட்டுவேன் என்று பாரதிராஜா பேசினார்.

 

இன்னும் பத்தே வருஷம்தான் இறந்தவர்களை உயிரோடு எழுப்பலாம் உலகை உற்று நோக்க வைக்கும்