வெடித்தது பிரளயம் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க உள்ளிட்ட எதிர் கட்சிகள் வெளிநடப்பு

2018-ம் ஆண்டின் முதல் பேரவைக்கூட்டம் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் இன்று தொடங்கியது. சரியாக காலை 10 மணிக்கு அவை கூடியதும், ஆளுநர் அவைக்கு வருகை தந்து உரை நிகழ்த்தினார்.

தமிழ்தாய் வாழ்த்து முடிந்த உடனே, பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேச அனுமதிக்க வேண்டும் என்று தி.மு.க சார்பில் வலியுறுத்தப்பட்டது. எதிர் கட்சி தலைவர் ஸ்டாலின் எழுந்து,பேச அனுமதிக்கும் படி கேட்டபோது,ஆளுநர் உட்காருங்க என்று தமிழில் கூறினார்.  

ஆனால்,ஆளுநர் பேச தொடங்கிய உடன் தி.மு.கவினர் முழக்கமிட்டனர். இதனை தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட தி.மு.கவினர் தி.மு.க எம்.எல்.ஏக்கள்., ஸ்டாலின் தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.அவர்களை தொடர்ந்து கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்கள், காங்கிரஸ், இந்திய முஸ்லீம் கட்சியினரும் வெளிநடப்பு செய்தனர்.

பேரவைக்கு வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின், இந்த அரசுக்கு 111 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுதான் உள்ளது என்று தேர்தல் ஆணையமே கூறியுள்ளதாகவும், அப்படி இருக்கையில், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிடாமல், அரசு எழுதிக்கொடுத்த ஆளுநர் வாசிக்கிறார் என்று குற்றம்சாட்டினார்.

பேரவையில் நியாயம் கிடைக்காத தங்களுக்கு, நீதிமன்ற்ம் அந்த நியாயத்தை வழங்கும் என்று எதிர்பார்ப்பதாக ஸ்டாலின் கூறினார்.

அதிமுக நிர்வாகியை கதறவைத்த ஆர்.ஜே.பாலாஜி இனிமேல் எதாவது பேசுவாரா