ஃபேஸ்புக்கில் அதிக லைக்ஸ் வாங்கிய மனைவியின் முகத்தை சிதைத்த கொடூர கணவன்!

இது போன்ற சைக்கோத்தனம் பலருக்குள் இருக்க வாய்ப்புள்ளது. இதை நாம் சிறியளவிலான பொறாமையாக கொண்டிருப்போம். நமது நண்பரோ, தோழியோ, உறவினரோ சமூக தளத்தில் அதிக லைக்ஸ் வாங்கினால்.. 'அட இவனுக்கு மட்டும் எப்படிடா... இவ்வளவோ லைக்ஸ் வருது' என ஒரு நிமிடம் பொறாமைப்பட்டு பிறகு நமது வேலையே காண துவங்கிவிடுவோம்.

ஆனால், பெட்ரோ ஹெரிபெர்டோ கலியனோவோ, தனது மனைவி அடோஃபினா காமெலி ஆர்டிகோஸா மீதான அதீத பொறாமையின் காரணமாக சைக்கோத்தனத்தின் உச்சத்திற்கு சென்று அவரது முகத்தை அடித்து சிதைத்துள்ளார்.

நமது வாழ்வியலில் ஃபேஸ்புக் பெரிதாக என்ன தாக்கத்தை ஏற்படுத்திவிடும் என கருதுவோருக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தலாம். வெறும் ஃபேஸ்புக் லைக்ஸ் அடோஃபினா காமெலி ஆர்டிகோஸாவின் வாழ்க்கையையே அழித்துள்ளது.

இது அனைவர் வாழ்விலும் நடக்கப் போவதில்லை. ஆனால், ஃபேஸ்புக் லைக்ஸ் மீது நமக்கும் அதிக ஆர்வமும், பொறாமையும் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. சாதாரணமாக இருந்த ஃபேஸ்புக், அடோஃபினா காமெலி ஆர்டிகோஸா எனும் பெண்ணின் விலைமதிப்பற்ற வாழ்க்கையை இப்போது நாம் அறிய அழித்துள்ளது....

அடோஃபினா காமெலி ஆர்டிகோஸா!

21 வயதே ஆன இளம்பெண் அடோஃபினா காமெலி ஆர்டிகோஸா. கடந்த வாரம் இவர் மிகுந்த காயங்களுடன் போலீசாரால் அவரது வீட்டில் இருந்து மீட்கப்பட்டார். அடோஃபினா காமெலி ஆர்டிகோஸா தொடர்ந்து பலநாள் தாக்கப்பட்டதற்கான அடையாளங்கள் அவரது முகத்தில் இருந்தது.

Image Source: Facebook

 

ஃபேஸ்புக் லைக்ஸ்!

அடோஃபினா காமெலி ஆர்டிகோஸாவின் முகம் முற்றிலும் சிதைந்த நிலையில் இருந்தது. உடலிலும் பல இடங்களிலும் கொடூரமான முறையில் தாக்கப்பட்டிருந்தார் அடோஃபினா காமெலி ஆர்டிகோஸா. இவரை இப்படி தாக்கியது இவரது கணவர் பெட்ரோ ஹெரிபெர்டோ கலியனோ (32).

Image Source: Facebook


எதற்காக?

ஏன்? எதற்காக கணவர் பெட்ரோ ஹெரிபெர்டோ கலியனோவால் மனைவி அடோஃபினா காமெலி ஆர்டிகோஸா தாக்கப்பட்டார் என்பதற்கான காரணம் விசித்திரமாக இருக்கிறது. அடோஃபினா காமெலி ஆர்டிகோஸா ஒவ்வொரு முறை ஃபேஸ்புக்கில் லைக்ஸ் வாங்கும் போதும், பொறாமையின் உச்சத்திற்கு சென்ற கணவர் இந்த பெண்ணை வெகுவாக துன்புறுத்தி வந்துள்ளார். அவரது பதிவில் யாரேனும் லவ் சிம்பல், கமென்ட் எல்லாம் போட்டால் மனிதர் வெறிப்பிடித்த மாதிரி அடித்து துன்புறுத்தியிருக்கிறார்.

Image Source: Facebook

 

ஃபேஸ்புக் பக்கம்!

கொஞ்ச நாளில் அடோஃபினா காமெலி ஆர்டிகோஸாவின் சொந்த முகநூல் பக்கத்தை தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்த கணவர் பெட்ரோ ஹெரிபெர்டோ கலியனோ. தனது மனைவியின் படங்களை அவரே பதிவு செய்து, அதற்கு அதிகமான லைக்ஸ் வந்தால்... மீண்டும், மீண்டும் துன்புறுத்த துவங்கியுள்ளார். ஒரு சைக்கோவாக மாறி, மனைவி அடோஃபினா காமெலி ஆர்டிகோஸாவின் முகம் முற்றிலும் சிதைந்து போகும் அளவிற்கு அடித்து துன்புறுத்தியுள்ளார்.

 

உருகுவே!

அடோஃபினா காமெலி ஆர்டிகோஸான் உருகுவே நாட்டை சேர்ந்தவர். இவரது வழக்கறிஞர் எப்படி எல்லாம் இந்த பெண்மணி சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அடோஃபினா காமெலி ஆர்டிகோஸாவின் தோழிகளுக்கு இது மிகுந்த அதிர்ச்சியை அளித்துல்லாது.

 

தோழமை!

தாங்கள் நட்பாக பேசியதை எப்படி அடோஃபினா காமெலி ஆர்டிகோஸாவின் கணவர் இப்படி எடுத்துக் கொண்டார் என தெரியவில்லை. அந்த செய்திகளை படித்தாலே தெரியுமே, அதில் ஏதும் தவறாக பேசவில்லை என்று. இப்படி கொடூரமான அளவுக்கு தாக்கும் அளவிற்கு அடோஃபினா காமெலி ஆர்டிகோஸா என்ன தவறு செய்துவிட்டார்? என கூறியுள்ளனர்.

 

சிதைவு!

அடோஃபினா காமெலி ஆர்டிகோஸாவின் முகம் முற்றிலுமாக சிதைக்கப்பட்டுள்ளது. வாய், தாடையை உடைத்துள்ளார். முக எலும்புகளின் அமைப்பு சிதைந்து போயிருப்பதால், அடோஃபினா காமெலி ஆர்டிகோஸாவின் முகத்தின் தோல் தொங்குவது போன்று காட்சியளிக்கிறது.

 

சமூக தளங்கள்!

அடோஃபினா காமெலி ஆர்டிகோஸாவின் கணவர், தனது மனைவியின் சமூக தள முகவரிகளை அபகரித்து. அதை தானே பயன்படுத்தி வந்துள்ளார். அதன் மூலமாக அவரே தனது மனைவி படங்கள், ஸ்டேடஸ் பதிவு செய்வது போல போலியான பதிவுகள் இட்டுள்ளார். மேலும், அவராகவே பலருக்கும் செய்திகள் அனுப்பி பேசி வந்துள்ளார். இவர் ஃபேஸ்புக் லைக்ஸ் மூலமாக மனநோயாளியாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

 

வாயை மூடி...

அடோஃபினா காமெலி ஆர்டிகோஸாவின் தோழி வருவர்... இவரது பற்கள் உடைந்துப் போனாதால்... இவர் கத்தாமல் இல்லை. ஒவ்வொரு முறை அடித்து துன்புறுத்தும் போதும். அடோஃபினா காமெலி ஆர்டிகோஸாவின் வாயில் அவரது கணவர் துணியை வைத்து திணித்த பிறகு கொடூரமாக அடித்துள்ளார் என கூறியிருக்கிறார்.

 

இறந்திருப்பார்!

அந்த கொடூரனின் தந்தை போலீஸ் வாக்குமூலத்தில், கடைசியாக அடிவாங்கும் போது அடோஃபினா காமெலி ஆர்டிகோஸா இறந்து விடுவார் என கருதியதாகவும். அந்த அளவிற்கு கொடுமையாக தாக்கப்பட்டார் என்றும் கூறியுள்ளார்.

இதில், கொடுமை என்னவெனில், தான் தாக்கப்பட்டு சிதைவுற்ற முகத்தை கண்டால், தன்னால் தன்னையே அடியாளம் காண முடியவில்லை என மனம்வருந்தி அழுதுள்ளார் அடோஃபினா காமெலி ஆர்டிகோஸா.

 

சிகிச்சை!

அடோஃபினா காமெலி ஆர்டிகோஸாவிற்கு முக மாற்று அமைப்பு சிகிச்சை அளிக்கப்படவுள்ளது. இதன் மூலம் அவது மூக்கு மற்றும் வாய் பகுதிகள் பழைய நிலைக்கு கொண்டு வர முடியும்.

அடோஃபினா காமெலி ஆர்டிகோஸாவை இந்த அளவிற்கு சித்திரவதைப் படுத்திய கணவர் பெட்ரோ ஹெரிபெர்டோ கலியனோ மேல் பல வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இதன் மூலமாக அவருக்கு முப்பது ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என எதிர்பாக்கப்படுகிறது.

 

ஆண்களை மூட் அவுட் செய்ய பெண்கள் பயன்படுத்தும் சில வார்த்தைகள் : ஆண்களே உஷார்..!!!