அன்று சிறுமியை சிதைத்தவன்.. நேற்று பெற்ற தாயையே... இப்படியும் ஒரு கொடூரமா தமிழகத்தில்..?

தமிழகத்தில் சில மாதங்களுக்கு முன்பு சிறுமியை சீரழித்து கொன்ற சென்னை இளைஞன் தற்போது பெற்ற தாயையும் கொன்ற கொடூர  சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஹாசினி திடீரென காணாமல் போனார்.

விளையாடச் சென்ற குழந்தை வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. போலீஸ் விசாரணையில் ஹாசினியை அவரது பக்கத்து வீட்டில் வசித்த தஷ்வந்த் என்ற இளைஞரே கடைசியாக அழைத்துச் சென்றது உறுதியானது. இதன் அடிப்படையில் தஷ்வந்த்திடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

இதில், தஷ்வந்த் ஹாசினியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றது தெரியவந்தது.

சிறுமி கொலை, பலாத்காரம் வழக்கில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆனால், அவர் மீதான குண்டர் சட்டம் தொடர்பாக போலீஸார் விளக்கமளிக்காததால் நீதிமன்றம் குண்டாஸ் சட்டத்தை ரத்து செய்தது. இதனையடுத்து சிறையில் இருந்து வெளியேவந்த தனது பெற்றோருடன் வசித்துவந்தார்.

இந்நிலையில், இன்று மதியம் தஷ்வந்த்தின் தாய் சரளா படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். அவரது தலையில் இரும்புக் கம்பியால் தாக்கிய காயம் உள்ளது.

அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

வீட்டிலிருந்த நகை, பணம் கொள்ளை போயுள்ளது. தஷ்வந்தும் வீட்டில் இல்லை. இதனால், தஷ்வந்த் மீதான சந்தேகம் போலீஸுக்கு வலுத்துள்ளது.

விக்ரம் வேதா படம் விஜய்சேதுபதி கேரக்ட்டரில் நடிக்க மறுத்த ஷாருக்கான்.!என்ன காரணம்.!