குலைநடுங்க வைக்கும் காட்சி: உயிர் போகும் நேரத்தில் கதறும் கொடூரம்... வீடியோ ஆதாரம் வெளியானது.. இனி அ

கடலூர் மாவட்டம் திருமுட்டம் ஒன்றியம் சாத்தாவட்டம் கிராமத்தில் பெண்களை சீண்டியவர்களை தட்டி கேட்ட இளைஞர் எரித்து படுகொலை செய்யப்பட்டிருப்பது தொடர்பாக மரண வாக்குமூல வீடியோ வெளியாகி உள்ளது.

சாத்தாவட்டம் கிராமத்தைச் சேர்ந்த அரிகிருஷ்ணன் என்பவரின் மகன் ஆனந்தன் ஐ.டி.ஐ படித்து விட்டு வேலைக்காக வெளிநாடு செல்லும் முயற்சியில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

நேற்று முன்தினம் மாலை  சாத்தாவட்டம் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்த போது விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சிலர், ஆனந்தனை வழிமறித்து அவரது கைகளையும், கால்களையும் பிடித்துக் கொண்டு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு எரித்துள்ளனர்.

தீயின் கொடுமை தாங்க முடியாமல் ஆனந்தன் ஓலமிட்டதைக் கேட்ட அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் ஓடிவந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை  விரட்டி அடித்து விட்டு, ஆனந்தனை மீட்டனர். உடல் முழுவதும் 90% தீக்காயங்களுடன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஆனந்தன் மருத்துவம் பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார்.

அவர் இறக்கும் முன்னர் தன்னை எப்படியெல்லாம் கொடுமைப்படுத்தி எரித்தார்கள், யார் யார் இதில் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள் என்பதை மரண வாக்கு மூலமாக கொடுத்துவிட்டு தான் இறந்துள்ளார்.

ஆளும் கட்சியில் ஒரு பிரச்சனை என்றால், ஒரு சாதாரண தடயம் கிடைத்தாலே அதில் துப்பு துலக்கி நடவடிக்கை எடுக்கும் காவல் துறை, மரண வாக்குமூலமே ஆதாரமாக இருக்கும் பொழுது, இன்னும் ஏன் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது.

இதன் பின்னணியில் ஏதோ திட்டமிட்ட சதி இருக்கிறது. இவ்வளவு பிரச்சனை நடந்திருந்தும் நெல்லை தீக்குளிப்பு சம்பவம் அளவிற்கு இதற்கு ஊடகங்களும் முக்கியத்தும் தரவில்லை.

இதையெல்லாம் வைத்து பார்க்கும் பொழுது, யாரை காப்பாற்ற இந்த முயற்சி நடக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் இந்த வீடியோவில் இருக்கும் காட்சி ஒவ்வொருவரையும் நெஞ்சை பதற செய்யும்.

(வீடியோ) கிருஷ்ணகிரி அணையின் மெயின் ஷட்டர் உடையும் காட்சி: செயற்கை பேரிடரை உருவாக்கிய வக்கற்ற அரசு..