மனைவிக்கு வேலை கிடைத்ததால் பொறாமையில் கண்ணை குருடாக்கி முகத்தை சிதைத்த கணவன்

மும்பையில் கணவர் ஒருவர் தனது மனைவிக்கு வேலை கிடைத்துவிட்டதால் கோபமடைந்து அவரது முகத்தில் ஆசிட் ஊற்றியதால் அவரது ஒரு கண் பார்வையிழந்ததோடு மட்டுமல்லாமல் முகம் சிதைவடைந்து போயுள்ளது.

ரூபாப்- ஜாகிரா தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ரூபாப் ஓட்டுநர் வேலை பார்த்து வருவதால் இவரது வருமானம் குழந்தைகளை கவனித்துக்கொள்ள போதவில்லை.

இதனால் வெளியில் வேலை தேடிய ஜாகிராவுக்கு, சோப்பு தயாரிக்கும் பகுதிநேர வேலை கிடைத்துள்ளது. இதனால் கோபமடைந்த ரூபாப், தனது மனைவியிடம் வேலைக்கு செல்லக்கூடாது என்று சண்டையிட்டுள்ளார்.

இதில், மனைவியை வீட்டுக்குள் அடைத்து ஆசிட்டை எடுத்து அவரது முகத்தில் ஊற்றியுள்ளார். வலியால் துடித்த ஜாகிராவை அருகில் வசிப்பவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு, அவரது கண்பறிபோயுள்ளது. முகம் சிதைவடைந்த நிலையில் அவரது தொண்டையில் குழாய் போட்டு அதன் வழியாகவே அவரால் சுவாசிக்க முடிகிறது.

உணவும் மூக்கில் குழாய் பொருத்தப்பட்டு அதன் வழியாக கொடுக்கப்படுகிறது. தற்போது இவருக்கான மருத்துவ செலவினை தொண்டு நிறுவனம் ஒன்று பார்த்துக்கொள்கிறது.

இவருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்வதற்கு £29,090 தேவைப்படுகிறது, ஆனால் £11,000 தற்போது எங்களிடம் உள்ளது, எஞ்சியுள்ள தொகையை சேகரிக்கவுள்ளோம் என தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

காதலர் தேவை என குறிப்பெழுதி கடலில் வீசிய இளம்பெண்: கிடைத்த விசித்திரமான பதில்