4 மாத கர்ப்பிணி பெண்ணை அடித்து கொலை செய்த கணவன் எதற்காக தெரியுமா?

கன்னியாகுமரியில் வரதட்சணைக்காக 4 மாத கர்ப்பிணி என்றும் பாராமல் மனைவியை அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மார்த்தாண்டத்தை அடுத்த வேங்கோடு பகுதியை சேர்ந்த சீமான் என்பவருக்கும் சாலினி என்பவருக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணத்தன்று சாலினியின் குடும்பத்தினர் 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை, மற்றும் பணத்தை வரதட்சனையாக கொடுத்துள்ளனர். ஆனாலும் கடந்த சில நாட்களாக சீமான் வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு சாலினியிடம், கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கணவன் சீமான், சாலினியை 4 மாத கர்ப்பிணி என்றும் பாராமல் இரும்பு கம்பியால் தலையில் கடுமையாக தாக்கியுள்ளார். மயங்கிய சாலினியை இழுத்துச் சென்று கேஸ் சிலிண்டரின் குழாயை சாலினியின் உடல் மீது வைத்து, தீவைத்துள்ளார். இதில் உடலில் தீ பரவிய சாலினி, மயக்க நிலையிலேயே உயிரிழந்தார்.

வீட்லிருந்து புகை வருவதைக் கண்ட அருகிலிருந்தோர் அளித்த தகவலையடுத்து அங்கு பொலிசார் சென்றனர். அவர்கள் வருவதைக் கண்ட சீமான் தூக்குபோட்டு தற்கொலை நாடகம் ஆடியுள்ளார். பொலிசார் கொலை குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஜித் பழைய படத்திற்கு மற்ற மாநிலங்களில் இப்படி ஒரு வரவேற்பா?