பசியில் கதறிய குழந்தை: மதுபோதையில் தாக்கிய கொடூர தந்தை

பசியால் கைக்குழந்தை அழுத நிலையில் மதுபோதையில் இருந்த தந்தை ஆத்திரத்தில் மற்றொரு குழந்தையை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் சேலத்தில் தான் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.

ரயில் நிலையத்தில் மதுபோதையில் தள்ளாடி வந்த நபர் ஒருவர், பிறந்து 17 தினங்களே ஆன கைக்குழந்தையை தூக்கி கொண்டும், நான்கு வயது குழந்தையுடனும் பயணிகள் ரயிலில் இருந்து இறங்கினார்.

அப்போது பசியால் கைக்குழந்தை அழுததால் ஆத்திரமுற்ற அந்நபர், உடன் வந்த நான்கு வயது குழந்தையை சரமாரியாக தாக்கினார்.

இதனை கண்ட பயணிகள், போதை ஆசாமி குழந்தைகளை கடத்தி வந்திருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில் அவர்களை மீட்டு பால் மற்றும் உணவு வழங்கி பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.

பொலிசார் விசாரித்ததில் இரு குழந்தைகளும் அவருடையது தான் என தெரியவந்தது. இதனையடுத்து அக்குழந்தைகளின் தாய் பாரதி என்பவரை வரவழைத்து பொலிசார் விசாரணை நடத்தினார்கள்.

போருக்கு ஆயத்தமாகும் வடகொரியா: முக்கிய நகரங்களில் பொதுமக்களுக்கு பயிற்சி